சிங்கிள் சார்ஜில் 300 கிமீ ஓடும் எலெக்ட்ரிக் கார் விலை இவ்ளோதானா! பைக் வாங்கற காசுல இதை வாங்கீரலாம்!
இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக ஏற்கனவே விற்பனையில் உள்ள ஐசி இன்ஜின் (IC Engine) கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. இதற்கு பல்வேறு கார்களை உதாரணமாக கூற முடியும்.
இதில், டாடா டியாகோ இவி (Tata Tiago EV), டாடா டிகோர் இவி (Tata Tigor EV) மற்றும் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) மற்றும் சிட்ரோன் இசி3 (Citroen eC3) போன்ற எலெக்ட்ரிக் கார்கள் மிகவும் முக்கியமானவை. இவை அனைத்தும், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் ஆகும்.

இதுதவிர வரும் மாதங்களில், டாடா பன்ச் இவி (Tata Punch EV), டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் இவி (Hyundai Exter EV) என ஏற்கனவே விற்பனையில் உள்ள ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களும் விற்பனைக்கு வரவுள்ளன. இதை எல்லாம் ரெனால்ட் (Renault) நிறுவனமும் கவனிக்காமல் இல்லை.
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. ஆனால் இந்திய சந்தைக்கான ரெனால்ட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் இன்னும் 12-18 மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது ரெனால்ட் க்விட் இவி (Renault Kwid EV) ஆகும். இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் கார் ஏற்கனவே மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனைதான் ரெனால்ட் நிறுவனம் அடுத்த 12-18 மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்திய சந்தையில் டாடா டியாகோ இவி, சிட்ரோன் இசி3 மற்றும் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன், ரெனால்ட் க்விட் இவி போட்டியிடும். சீனா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் ஏற்கனவே ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் கார், வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் காரில், 26.8 kWh பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், சுமார் 300 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே பேட்டரி மற்றும் ரேஞ்ச் உடன்தான் இந்தியாவிலும் ரெனால்ட் க்விட் இவி களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் பல்வேறு அதிநவீன வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பியதாக இருந்தாலும் கூட, ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 8 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் வந்தால், ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் கார் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் கார், இந்திய சந்தையில் வரும் 2024ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2025ம் ஆண்டின் தொடக்கத்திலோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என நாங்கள் கருதுகிறோம்.
ரெனால்ட் நிறுவன வட்டாரங்களில் விசாரித்தபோது, கூடிய வரை மிக வேகமாக இந்த எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மற்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பு, ரெனால்ட் நிறுவனத்திற்கு உத்வேகம் அளிக்க கூடியதாக உள்ளது. எனவே கூடிய விரைவில் ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் காரை நாம் எதிர்பார்க்கலாம்.
நாங்கள் குறிப்பிட்டதை போல், 8 லட்ச ரூபாய் என்ற விலையில் வந்தால், ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் கார் நிச்சயமாக விற்பனையில் சாதிக்கும். ஏனெனில் இந்தியாவில் தற்போது ஒரு சில பிரீமியம் பைக்குகளே 8 லட்ச ரூபாய், 10 லட்ச ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








