இந்தியாவிலேயே இந்த கலருல இந்த ஒரு ரெனால்ட் மட்டும்தான் இருக்கு.. போர்ஷே கார்களையே மிரட்டி விட்ருச்சு!

விலை உயர்ந்த கார்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் வண்ணமான சோனிக் கிரே எனும் அசத்தலான நிறத்தை ரெனால்ட் க்விட் உரிமையாளர் அவருடைய காருக்கு பயன்படுத்தி இருக்கின்றார். இந்த நிறத்தால் ரெனால்ட் க்விட் விலை உயர்ந்த கார்களுக்கு டஃப் கொடுக்கும் கவர்ச்சியான தோற்றத்திற்கு முன்னேறி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் மலிவு விலை கார் மாடல்களில் ஒன்றாக ரெனால்ட் க்விட் இருக்கின்றது. இது ஓர் ஹேட்ச்பேக் வகை கார் மாடல் ஆகும். இப்போதைய நிலவரப்படி, ஐஸ் கூல் ஒயிட், மெட்டல் மஸ்டர்ட், ஃபையரி ரெட், அவுட்பேக் ப்ரோன்ஸே, ஜன்ஸ் ப்ளூ மற்றும் மூன்லைட் சில்வர் ஆகிய நிற தேர்வுகளில் மட்டுமே இந்த கார் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Renault kwid sonic grey side view

இந்த நிலையிலேயே இதுவரை யாரும் ரெனால்ட் க்விட் காரில் பயன்படுத்ததாத மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படாத நிறத்தை ஓர் நபர் பயன்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சோனிக் கிரே நிறமே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த வண்ணம் பெரும்பாலும் லக்சூரி மற்றும் பிரீமியம் கார்களில் காட்சியளிக்கின்றது.

அதேவேளையில், இது ஓர் அரிய வகை நிற தேர்வு என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால்தான் ரெனால்ட் க்விட் மிக மிக அழகான மற்றும் பிரீமியம் தர காராக மாறி இருக்கின்றது. நிறத்தை மாற்றியது மட்டுமில்லைங்க, இந்த காரின் உட்பக்கத்திலும் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

Renault kwid sonic grey

அந்தவகையில், நப்பா லெதரால் காரின் உள்பக்கம் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. முதலில் இந்த காரை வாங்குவதற்கு முன்னர் இளைஞர் ஜாகுவார் காரையே வாங்க பிளான் போட்டு இருக்கின்றார். ஆனால், இந்த மாற்றிக் கொண்டிருக்கின்றார். ரெனால்ட் க்விட்டை வாங்கி அதை வேற லெவலுக்கு மாடிஃபை செய்யலாம் என்கிற எண்ணம் வந்த பின்னரே ஜாகுவாரை வாங்கும் திட்டத்தைக் கைவிட்டு இருக்கின்றார்.

வெள்ளை நிற கவர்களையே இருக்கையில் அவர் பயன்படுத்தி இருக்கின்றார். இதைத் தொடர்ந்து, ஆம்பியன்ட் லைட், உயர் வகை மியூசிக் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகிய வசதிகளையும் அவர் இந்த காரில் சேர்த்து இருக்கின்றார். ஆகையால், நிறத்தில் மட்டுமல்ல இந்த கார் பயன்பாட்டிலும் பிரீமியம் வகை கார் மாடலாக மாறி இருக்கின்றது.

Renault kwid sonic grey wheel

இத்தகைய மாற்றத்தை மேற்கொள்ள 7-8 மாதங்கள் வரை அவருக்கு எடுத்திருக்கின்றது. தொடர்ந்து, இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருந்த அனைத்து குரோம் நிற அணிகலன்களும் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக உயர் வகை கிளாஸ் பிளாக் நிற அணிகலன் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுமேலும், அந்த காருக்கு கவர்ச்சியான லுக்கை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

ரெனால்ட் லோகோவும் அகற்றப்பட்டு இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, வீல்களும் மாற்றப்பட்டு இருக்கின்றன. முன்பு இருந்ததைக் காட்டிலும் சற்று பெரிய வீல்கள் இம்முறை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், இந்த மாற்றங்களால் இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான க்விட் காராக இது மாறி இருக்கின்றது. காஸ்ட்லியான காராக மட்டுமல்ல அரிய வகை க்விட் காராகவும் அது மாறி இருக்கின்றது.

Renault kwid sonic grey rear view

ஆனால், துள்ளியமாக எவ்வளவு ரூபாய் செலவு செய்யப்பட்டு இருக்கின்றது என்பது பற்றிய விபரத்தை அதன் உரிமையாளர் வெளியிடவில்லை. இருப்பினும், எங்களின் யூகிப்பின்படி புதிய ரெனால்ட் க்விட் காரின் விலைக்கே டஃப் கொடுக்கக் கூடிய மதிப்பிலேயே இந்த கார் மாற்றப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் ரெனால்ட் க்விட் 4 லட்சத்து 69 ஆயிரத்து 500 ரூபாய் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 5.30 லட்சத்தை தொடலாம். இத்தகைய மலிவு விலை காரே போர்ஷே மற்றும் ஆடி காருக்கு இணையான கவர்ச்சியான வாகனமாக மாற்றப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மலிவு விலை கார் மடலாக ரெனால்ட் க்விட் காட்சியளிக்கின்றது. இதனாலேயே பட்ஜெட் கார் பிரியர்களின் ஃபேமஸான கார் மடாலாக க்விட் காட்சியளிக்கிறது. இதன் அதிகபட்ச விலையே ரூ. 6.44 லட்சம் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 19, 2023, 18:51 [IST]
English summary
Renault kwid painted with premium sonic grey color
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X