தீபாவளி போனஸ் வந்தாச்சா? இந்த காரை உடனே வாங்கி போடுங்க! ஏகப்பட்ட தள்ளுபடி கொடுக்குறாங்க!

ரெனால்ட் நிறுவனம் பண்டிகை காலத்தில் தனது கார் விற்பனையை அதிகப்படுத்த புதிதாக ஆஃபர்களை அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் உச்ச கட்டத்தில் இருக்கிறது. இந்த காலகட்டத்தில் தான் பெரும்பாலும் கார்கள் அதிகம் விற்பனையாகும். இதனால் இந்த காலகட்டத்தில் கார் விற்பனையாளர்கள் தங்கள் விற்பனையை அதிகப்படுத்த பல்வேறு ஆபர்கள் வழங்குவார்கள். இப்படியாக ரெனால்ட் நிறுவனமும் தனது கார்களுக்கு புதிய ஆபர்களை வழங்கி உள்ளது.

renault diwali offers 2023

ரெனால்ட் நிறுவனத்தின் கார்களான க்விட், டிரைபர் மற்றும் கைகர் ஆகிய மாடல் கார்களுக்கு இந்த ஆஃபரை நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி க்விட் மற்றும் டிரைபர், கைகர் காருக்கு ஆஃபர்களை வழங்கியுள்ளது. க்விட் மற்றும் டிரைபர் காருக்கு ரூபாய் 50 ஆயிரம் வரையிலும், டிரைபர் காருக்கு ரூபாய் 65,000 வரையிலும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

க்வீட் காருக்கு ரூபாய் 20,000 வரையில் கேஷ் பலன்களும், எக்ஸ்சேஞ்ச் பலன்களாக ரூபாய் 20,000 மேலும் ரூபாய் 10,000 லாயல்டி பலன்கள் ஆகவும் என மொத்தம் ரூபாய் 50,000 தள்ளுபடி அறிவித்துள்ளது. அதேபோல டிரைபர் காருக்கும் ரூ 20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸூம், ரூபாய் 20,000 கேஷ் பலன்களும், மேலும் ரூபாய் 10,000 லாயல்டி பலன்களும் தள்ளுபடியாக அறிவித்துள்ளது.

renault diwali offers 2023

தள்ளுபடியில் லாயல்டி பலன்கள் என்பது ஏற்கனவே ரெனால்ட் நிறுவனத்தின் கார்களை பயன்படுத்தி வந்தால் அந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் புதிதாக காரை வாங்கும் போது அவர்களுக்காக வழங்கப்படும் தள்ளுபடி ஆகும். தற்போது ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் 9 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக இருக்கிறது.

ஏற்கனவே ரெனால்ட் கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மீண்டும் ரெனால்ட் காரை வாங்கும்போது அவர்களுக்கு லாயல்டி பலன்கள் மட்டுமல்லாமல் மூன்று ஆண்டுகள் வாரண்டியை இலவசமாகவும் மூன்று ஆண்டுகள் பராமரிப்பு பேக்கேஜையும் மூன்று ஆண்டுகள் ரோடு அசிஸ்டென்டையும் வழங்க ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

renault diwali offers 2023

ரெனால்ட் கைகர் காரை பொருத்தவரை ரூபாய் 25000 கேஷ் பலன்களாகவும்.ரூபாய் 20,000 எக்சேஞ்ச் பலன்களாகவும், ரூபாய் 20,000 லாயல்டி பலன்கள் ஆகவும், வழங்க ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த காருக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதால் இந்த பண்டிகை காலத்தில் இந்த காரின் விற்பனை அதிகமாக இருக்கக்கூடிய என்பதால் மக்கள் இந்த காரை அதிகம் வாங்குவதற்காக இப்படியான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல் ரெனால்ட் நிறுவனம் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கும் தள்ளுபடி அணிவித்துள்ளது. அதன்படி அந்நிறுவனத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொது சேவை நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களுக்கு கார்கள் வாங்கும் போது அவர்களுக்கு கூடுதலாக ரூபாய் 12000 வரையிலும் தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது போக கிராமப்புற வாடிக்கையாளர்களை கவர்வதற்காக விவசாயிகள் மற்றும் கிராம பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள், அல்லது தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் இந்த காரை வாங்கினால் அவர்களுக்கு கூடுதலாக ரூபாய் 5000 தள்ளுபடி வழங்கவும் ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தீபாவளி நேரத்தில் பல ஊழியர்கள் தீபாவளி போனஸை பெற்றிருக்கும் நேரம் இது. இந்த நேரம் பார்த்து ரெனால்ட் நிறுவனம் தள்ளுபடிகளை வழங்கி உள்ளது. கார் வாங்கும் எண்ணத்தில் இருக்கும் பலரை இருக்கும் விதமாக இருக்கும். பலர் இதன் காரணமாகவே தங்கள் கார் வாங்கும் முடிவே மாற்றி ரெனால்ட் காரை வாங்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 19, 2023, 21:22 [IST]
English summary
Renault kwid triber and kiger receive up to rs 65 000 discounts this festive season
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X