இனி குப்பனும் சுப்பனும் கூட கார் வாங்கலாம்! இவ்வளவு கம்மி ரேட்டுக்கு காரை விட்டா மாருதி நிலைமை மோசமாகிடும்!

இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் தனது க்விட் காரின் இவி வெர்ஷனை தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளது. அதுவும் இந்த காரை ரெனால்ட் நிறுவனம் இந்தியாவிலேயே குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரித்துக்கொண்டே வருகிறது. எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது பிரிமியம் செக்மெண்டில் மட்டுமே கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இன்று குறைந்த பட்ஜெட் முதல் அதிக பட்ஜெட் வரை எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்திக்கொண்டேயிருக்கின்றனர்.

இனி குப்பனும் சுப்பனும் கூட கார் வாங்கலாம்! இவ்வளவு கம்மி ரேட்டுக்கு காரை விட்டா மாருதி நிலைமை மோசமாகிடும்!

டாடா நிறுவனம் முதன் முறையாக ரூ10 லட்சத்திற்கும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். டாடா டியாகோ இவி கார் தான் தற்போது மார்கெட்டில் குறைந்த விலை இவி காராக இருக்கிறது. இந்நிலையில் மார்கெட்டில் கார் தயாரிப்பு நிறுவனம் அதிக கார்கள் விற்பனையாகும் செக்மெண்டில் இவி கார்களை களம் இறக்க முடிவு செய்துள்ளனர்.

எம்ஜி, சிட்ரோன் ஆகிய நிறுவனங்கள் விரைவில் குறைந்த விலையில் இவி கார்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. இந்நிலையில் ரெனால்ட் நிறுவனமும் இந்தியாவில் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் காரை களம் இறக்கப்போவதாகப் பேச்சு எழுந்துள்ளது. இதற்காகத் தனது என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் காரை பயன்படுத்தப்போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இனி குப்பனும் சுப்பனும் கூட கார் வாங்கலாம்! இவ்வளவு கம்மி ரேட்டுக்கு காரை விட்டா மாருதி நிலைமை மோசமாகிடும்!

ரெனால்ட் நிறுவனம் தனது க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை தயாரித்து இந்தியாவில் குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக விற்பனைக்குக் கொண்டு வர வாய்ப்புள்ளது. இது தற்போது உள்ள க்விட் காரை விடப் பார்க்கச் சிறப்பானதாகவும், அதிகமான அம்சங்கள் நிறைந்ததாகவும், அதிக பேட்டரி லைஃப் கொண்டதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த ரெனாலட் க்விட் எலெக்ட்ரிக் கார் ஏற்கனவே வெளிநாடுகளில் வேறு வேறு பெயர்களில் விற்பனையாகி வருகிறது. ஐரோப்பாவில் டேக்கியா ஸ்பிரிங் இவி என்ற பெயரிலும், சீனாவில் ரெனால்ட் சிட்டி கே-ஸிஇ என்ற பெயரிலும் விற்பனையாகி வருகிறது. இந்த கார் தான் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி குப்பனும் சுப்பனும் கூட கார் வாங்கலாம்! இவ்வளவு கம்மி ரேட்டுக்கு காரை விட்டா மாருதி நிலைமை மோசமாகிடும்!

இந்த ரெனால்ட் க்விட் இவி காரின் டிசைனை பொருத்தவரை தற்போது உள்ள க்விட் காரின் பெரும்பாலான அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது. ஆனால் சில சின்ன சின்ன ஆல்ட்ரேஷன்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக சில டெக்னிக்கல் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை எல்லாம் எலெக்ட்ரிக் காரின் தேவைகளுக்குத் தகுந்தார் போல மாற்றப்படும் எனத் தெரிகிறது.

இந்த காரின்பேட்டரி குறித்த விரிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் ரெனால்ட் நிறுவனம் முழு சார்ஜில் 230-305 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்ட வாகனமாக இதை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது மட்டுமல்ல இந்த காரின் அதிகபட்ச வேகமாக 125 கி.மீ வேகம் செல்லும் மோட்டாரை ஃபிட் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரில் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பொருத்தப்பட்டும் என எதிர்பார்க்கலாம். இது 0-80 சதவீத சார்ஜை வெறும் 30 நிமிடத்தில் ஏற்றும் திறன் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் இந்த காரின் விலை தான். இந்த காரை ரூ10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வர ரெனால்ட் நிறுவனம் தீவிரமாக முயன்று வருகிறது.

அப்படி இந்த கார் குறைவான விலையில் விற்பனைக்கு வந்தால் குறைந்த பட்ஜெட் கார் செக்மெண்டில் மாருதி நிறுவனம் தற்போது பெருவாரியானவர்களை விற்பனை செய்து வரும் நிலையில் அந்நிறுவனத்தின் விற்பனையில் பலத்த அடி ஏற்படும். மேலும் குறைந்த பட்ஜெட்டில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ரெனால்ட் நிறுவனம் மாறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, February 13, 2023, 18:30 [IST]
English summary
Renault might introduce kwid all electric in India soon
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+