பைக் விலையில எலெக்ட்ரிக் காரை கொண்டு வரப்போறாங்களா? ஒவ்வொரு வீட்டு வாசல்லயும் இந்த கார் தான் நிக்க போகுது!

ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து இந்தியாவில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் கார்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த கார்கள் இந்திய மார்கெட்டில் என்ன மாற்றத்தை கொண்டு வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து காணலாம் வாருங்கள்.

சர்வதேச அளவில் ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய இரு நிறுவனங்களும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்த இரு நிறுவனங்களும் இந்தியாவில் ஒரே ஆலையை அமைத்து அங்கு கார்களை உற்பத்தி செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது. அதன்படி இந்நிறுவனங்கள் இணைந்து சென்னையில் தான் அதன் ஆலையை அமைத்து வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

renault nissan electric car

இந்நிலையில் சமீபத்தில் தான் இந்நிறுவனம் தனது 25 லட்சமாவது காரை தயாரித்து ஆலையிலிருந்து வெளியே அனுப்பியதாக செய்திகளை அறிவித்தது. இந்நிறுவனங்கள் தங்கள் ஆலையை விரிவுபடுத்தவும், இந்தியாவில் தங்களது பிசினஸை பெரிது படுத்தவும் புதிதாக முதலீடுகளை இந்தியாவிற்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

அதன்படி அடுத்த சில ஆண்டுகளில் 6 புதிய கார்களை இந்தியாவில் இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து களமிறக்க போகிறது. இதில் மூன்று கார்கள் ரெனால்ட் பிராண்டிலும் மூன்று கார்கள் நிஸான் பிராண்டிலும் களமிறங்க உள்ளன. மொத்தம் உள்ள ஆறு கார்களில் இரண்டு கார்கள் எலக்ட்ரிக் கார்களாக இருக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

renault nissan electric car

இரண்டு கார்களில் ஒரு கார் ரெனால்ட் பிராண்டிலும் ஒரு கார் நிஸான் பிராண்டிலும் விற்பனைக்கு வரும் என தெரிகிறது இதில் நமக்கு கிடைத்த தகவலின் படி ரெனால்ட் நிறுவனம் சர்வதேச மார்க்கெட்டில் தனது காரின் எலெக்ட்ரிக் வெஷனை விற்பனை செய்து வருகிறது. அதே காரை தான் இந்தியாவில் களம் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிவிட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் கார் சர்வதேச மார்க்கெட்டில் டேஷிகா ஸ்பிரிங் என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டார் உடன் 44 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜில் 230 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

renault nissan electric car

இந்த கார் இந்தியாவில் களம் இறக்கப்பட்டல் டாடா டியாகோ இவி, எம்ஜி கோமெட் இவி, சிட்ரோன் இசி3 ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கலாம். நிஸான் பிராண்டில் எந்த கார் வெளியாக உள்ளது என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. அந்த கார் மார்கெட்டிற்கே புதிய காராக இருக்க வாயப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டு நிஸான் நிறுவனம் மூன்று புதிய எஸ்யூவி கார்களை இந்தியாவில் காட்சிப்படுத்தியது அதன்படி எக்ஸ் டிரையல்,குயாஷ்குவாய் மற்றும் ஜுக் ஆகிய கார்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதில் எக்ஸ்டிரையல் கார் விரைவில் இந்திய மார்க்கெட்டுக்கு வரப்போகிறது. ஜூக் மற்றும் குயாஷ்குவாய் ஆகிய கார்கள் வருகை குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் இந்த இரண்டு கார்களுக்கும் வந்தால் எந்த வகையில் அதை அதிகமாக விற்பனை செய்ய முடியும்?, போட்டியாளர்களை எப்படி இந்த கார்கள் சமாளிக்கும் என்பதை ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வின் முடிவை பொருத்தே எந்தெந்த கார்கள் எல்லாம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்யப்படும்.

குயாஷ்குவாய் கார் மார்க்கெட்டில் உள்ள ஹூண்டாய் டுஸான், சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும். ஜூக் கார் சிறிய ரக எஸ்யூவி காராகும். இது மார்க்கெட்டில் ஹூண்டாய் கிரெக்டா, கியா செல்டோஸ், எம்ஜி அஸ்டர், மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், போக்ஸ்வேகன் டைகுன், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.

நிஸானின் எக்ஸ் டிரெயல் காரை பொறுத்தவரை அது முழு சைஸ் காராகும் இது எம்ஜி குளோஸ்டர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எக்ஸ் டிரெயல் காரை நிஸான் நிறுவனம் இந்தியாவிற்குள் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்து விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிஸான் -ரெனால்ட் நிறுவனத்தின் முதலீடு இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் ஒரு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ள நிலையில் ரெனால்ட் கிவிட் கார் குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக அறிமுகமானால் விலையில் புதிய உச்சத்தை இந்நிறுவனம் சந்திக்க வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, July 28, 2023, 18:04 [IST]
English summary
Renault nissan developing two new electric models for india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X