ஒரு வழியா ரஃபாலை வெளியீடு செய்த ரெனால்ட்... இதையும் அண்ணாமலை உடனே வாங்கிடுவார்னு எதிர்பார்க்கலாம்!
இந்த தலைப்பை படித்த உடன் உங்கள் மனதில் "என்னது ரஃபாலை ரெனால்ட் தயாரிச்சு இருக்கா" என்கிற கேள்விதான் எழும்பி இருக்கும். ஆமாம் கார் உற்பத்தி நிறுவனமான ரெனால்ட் ரஃபாலை தயாரித்து இருக்கின்றது. ஆனால், இது ஓர் கார் மாடல் ஆகும். எஸ்யூவி ரக காராகும்.
நீங்கள் நினைப்பதை போர் விமானம் அல்ல. ரஃபால் என்ற உடன் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கி போர் விமானமோ என்று அனைவரும் நினைத்திருப்பீர்கள். அந்த போர் விமானத்திற்கும் இந்த ரஃபால் எஸ்யூவி ரக காருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது சாதாரணமான கார் மட்டுமே ஆகும்.

மேலும், இது ஃபிரெஞ்சு நிறுவனத்தின் புதுமுக கார் மாடல் ஆகும். ரஃபால் போர் விமானங்கள் அதிக வேகத்தில் சென்று எதிரி நாடுகள் மீது தாக்குதல் தொடுப்பதில் பெயர்போன ஒன்றாகும். இதைபோலவே, தன்னுடைய போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளை இந்த ரஃபேல் துவம்சம் செய்யும் என்கிற நம்பிக்கையில் ரெனால்ட் இந்த காரை உருவாக்கி இருக்கின்றது.
கூடுதல் சிறப்பு என்ன என்றால் இந்த காரை, பாரிஸ் நடைபெற்று வரும் ஏர் ஷோ வாயிலாகவே ரெனால்ட் வெளியீடு செய்தது. கடந்த ஞாயிறு அன்றே இதன் வெளியீட்டு நிகழ்வு அரங்கேறியது. இந்த புதுமுக கார் நிறுவனத்தின் உயர்நிலை காராக விற்பனைக்கு வர இருக்கின்றது.
இதனை தன்னுடைய புகழ்பெற்ற சிஎம்எஃப் - சி/டி பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், ஆஸ்ட்ரல் எஸ்யூவி-யின் சிறப்பம்சங்கள் சிலவற்றையும் இந்த காரில் ரெனால்ட் வழங்கி இருக்கின்றது. மேலும் இ-ஸ்பேஸ் எஸ்யூவி காரின் சிறப்பு வசதிகளும் புதிய ரஃபாலுக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
மிகப் பெரிய கேபின் ஸ்பேஸைக் கொண்ட காராக ரெனால்ட் ரஃபால் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த செக்மெண்டிலேயே இல்லாத அளவிற்கு ஸ்பேஸ் இதில் இருக்கும் என ரெனால்ட் உறுதி அளிக்கின்றது. ரெனால்ட் ரஃபேல் எஸ்யூவி-யின் நீளம் 4,710 மிமீட்டராகவும், அகலம் 1,860 மிமீட்டராகவும், உயரம் 1,610 மிமீட்டராகவும் உள்ளது.
இதன் வீல்பேஸ் 2,740 மிமீட்டராகும். இந்த அளவுகள் ஹூண்டாய் டக்சன் எஸ்யூவிக்கே டஃப் கொடுக்கும் அளவுகள் ஆகும். இதைவிட குறைவான அளவுகளையே அது கொண்டிருக்கின்றது. அளவுகளைப் போலவே தொழில்நுட்ப வசதியிலும் மிக சிறந்த காராக இது வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இ-டெக் ஹைபிரிட் சிஸ்டம் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் முன் வீலுக்கு இயக்க திறனை வழங்கும். மேலும், இதன் ஹெச் பவர் 130 ஆகும். இத்துடன், இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை கிளட் இல்லா கியர்பாக்ஸ் உடன் இணைந்திருக்கும். இதுதவிர, ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனும் வழங்கப்பட இருக்கின்றது.
இதனால் 300எச்பி பவர் வரை வெளியேற்ற முடியும். இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், லெவல் 2 அடாஸ் அம்சம், ஸ்டாப் அன்ட் கோ வசதி உடன் கூடிய அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆக்டீவ் எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம், ரியர் ஏஇபி, லேன் டிபார்ச்சர் வார்னிங், லேன் சேஞ்ஜ் வார்னிங் மற்றும் டிரைலர் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட் உள்ளிட்ட தரமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மட்டும் இந்த கார் விற்பனைக்கு வந்துச்சுனா இதோட பேருக்காகவே இந்தியர்கள் இந்த காரை வாங்கி குவிப்பாங்க. அப்படியான பெயரையே இந்த கார் கொண்டிருக்கின்றது. இந்த பெயரைக் கொண்ட வாட்ச்சுக்குகூட நம் நாட்டினர் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது.
விலை மிக மிக அதிகமாக இருந்தபோதிலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இந்த வாட்சை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், ரஃபால் எஸ்யூவி காரையும் அதன் பெயருக்காகவே இந்தியர்கள் வாங்கி குவித்தால், குறிப்பாக, பாஜகவினர் வாங்கி குவித்தால் ஆச்சரியமடைய ஒன்றும் இல்லை.


Click it and Unblock the Notifications








