ரெனால்ட் கை பக்குவத்தை பார்த்து உலகமே மெய்சிலிர்த்து போயிருச்சு! என்னமா அழகா இந்த காரை ரெடி பண்ணியிருக்காங்க!
உலக புகழ் பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ரெனால்ட் (Renault) மிகவும் அழகிய கார் மாடல் ஒன்றை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. ட்விங்கோ (Twingo) எனும் காரையே அது வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.
தற்போது கான்செப்ட் மாடலாக மட்டுமே இந்த காரை ரெனால்ட் தயார் செய்திருக்கின்றது. விரைவில், இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வரும் விதமாக உற்பத்தி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அந்த பணிகள் எப்போது தொடங்கும் என்பது பற்றிய துள்ளியமான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி இந்த ரெனால்ட் ட்விங்கோ எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் 2026 ஆம் ஆண்டில் அரங்கேறும் என்பது தெரிகின்றது. ஆகையால், அந்த ஆண்டின் தொடக்கத்தில் அல்லது மத்திய பகுதிக்குள் அழகிய ட்விங்கோ எலெக்ட்ரிக் காரை ரியாலிட்டி லைஃபில் பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரெனால்ட் நிறுவனம் இந்த காரை சிட்டி பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக தயார் செய்திருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே காம்பேக்டான தோற்றம் அக்காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த காம்பேக்ட்டான தோற்றத்தை வைத்து பார்க்கையில் விலையும் மிகக் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் ட்விங்கோ ஓர் பட்ஜெட் விலை கார்தான் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றன.

இந்தியாவின் மின்சார கார் பிரிவில் டாடா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி ஆகிய இரு நிறுவனங்களே மலிவு விலை எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான மலிவு விலை எலெக்ட்ரிக் கார்கள் உள்ள சந்தைக்கு என்றே பிரத்யேகமாக ரெனால்ட் ட்விங்கோவை உருவாக்கி இருக்கின்றது.
முதலில் ஐரோப்பிய நாடுகளிலேயே ட்விங்கோ விற்பனைக்கு களமிறக்கப்பட இருக்கின்றது. அதன் பின்னர் உலக சந்தையையும் இந்த கார் வந்தடையும் என கூறப்படுகின்றது. ஐரோப்பிய சந்தையில் 20 ஆயிரம் யூரோக்களுக்கு இந்த கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. பட்ஜெட் விலையைப் போலவே இந்த காரின் பேட்டரி பேக்கும் சிறியதாகவே இருக்கின்றது.

10 kWh பேட்டரி பேக்குடனேயே இந்த கார் சந்தையைக் களம் காண இருக்கின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 100 கிமீ தூரம் வரை நம்மால் பயணித்துக் கொள்ள முடியும். இந்த காரை ரெனால்ட் நிறுவனம் அதன் ஏஎம்பிஆர் ஸ்மால் எனப்படும் பிளாட்பாரத்தில் வைத்து கட்டமைக்க இருக்கின்றது.
சிறிய வகை வாகனங்களுக்கு என்றே பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ஓர் தளமே இது ஆகும். இந்த தளத்தில் வைத்தே நிறுவனத்தின் வருங்கால தயாரிப்புகளான ரெனால்ட் 5 மற்றும் ரெனால்ட் 4 ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன. இந்த காரின் தனித்துவமான தோற்றத்திற்கு நிறுவனத்தின் ஒரு சில யுக்திகளே காரணமாக இருக்கின்றது.

அதேவேளையில், நிறுவனம் இந்த கார 1992 மாடலை தழுவியே தயார் செய்திருக்கின்றது. இதனால்தான் லேசாக கிளாசிக் வாசத்தை இந்த காரில் நம்மால் காண முடிகின்றது. குறிப்பாக, முகப்பு பகுதியில் கிளாசிக் தோற்றத்தை வழங்கக் கூடிய அம்சங்கள் பலவற்றைக் காண முடிகின்றது. அதேவேளையில், நவீன அம்சங்களுக்கு சற்றும் பஞ்சமில்லாத எலெக்ட்ரிக் காராகவும் அது காட்சியளிக்கின்றது.
குறிப்பாக, இதுவரை எந்த மின்சார காரிலும் பார்த்திராத அழகிய ஹெட்லைட் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. ஹெட்லைட் மட்டுமே ட்விங்கோவின் ஒட்டுமொத்த தோற்றமும் மிக மிக அழகானதாகக் காட்சியளிக்கின்றது. இந்த கார் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும்பட்சத்தில் ஒட்டுமொத்த மலிவு விலை கார்களுக்கும் மிகப் பெரிய போட்டியாளனாக மாறும். குறிப்பாக, எம்ஜி கோமெட்டிற்கு சிறந்த வில்லனாக இது மாறக்கூடம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக அளவில் மின்சார கார்களுக்கு நல்ல டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ரெனால்ட் நிறுவனம் புதிய ட்விங்கோ எலெக்ட்ரிக் காரை தயார் செய்திருக்கின்றது. வெகு விரைவில் இந்த கார் உலக சந்தையைக் களம் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









