மாருதியின் ஆல்டோ மாதிரி கார் எல்லாம் இனி விற்பனை சரியும்!சேர்மனே சொன்ன அதிர்ச்சி தகவல்!
மாருதி நிறுவனத்தின் சிறிய கார்களின் விற்பனை அதிகரிக்க இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம் என நிறுவனத்தின் சேர்மன் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் சமீபத்தில் தனது இரண்டாம் காலாண்டுக்கான லாப விபரங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அதில் இந்நிறுவனம் புதிய உச்சத்தை எட்டி இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் எஸ்யூவி விற்பனையில் சிறப்பாக இருப்பதாகவும் இந்த காரை தயாரிக்க குறைவான செலவை ஆவதாகவும் அதனால் அதிக லாபம் பெற முடிகிறது எனவும் தெரிவித்துள்ளது.

மாருதி நிறுவனத்திடம் தற்போது பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாரா, ஃபிராங்க்ஸ், ஜிம்னி ஆகிய கார்கள் எஸ்யூவி ரக கார்களாக விற்பனையாகி வருகின்றன. கடந்த ஜூலை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மூன்று மாத விற்பனை நிலவரப்படி வரி எல்லாம் போக மாருதி நிறுவனத்திற்கு 37.17 பில்லியன் ரூபாய் லாபமாக கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் எஸ்யூவி கார்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அதே நேரம் சிறிய ரக கார்களின் விற்பனை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியமான காரணமாக முதல் முறை கார் வாங்குபவர்களுக்கு கார் வாங்கும் விலை அதிகமாக இருப்பதால் அவர்கள் சிறிய ரக கார்களை வாங்க தயங்கம் காட்டுகின்றனர் என தெரிவித்துள்ளது.

அதேபோல எஸ்யூவிகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் இதனால் பிரெஸ்ஸா, ஃபிராங்க்ஸ் ஆகிய கார்கள் சிறப்பாக விற்பனையாகவும் ஆவதாகவும் ஆல்டோ கே10, எஸ்பிரெஸ்ஸோ ஆகிய கார்கள் விற்பனை நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் சேர்மன் ஆர் சி பார்கவா கூறும்போது: " இந்தியாவில் சிறிய ரக கார்கள் செக்மென்ட் தற்போது வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த செக்மெண்டில் கார்களின் விற்பனை வளர்ச்சியை சந்திக்க அதிக காலம் எடுக்கும் தற்போது கூடிய சீக்கிரம் அது நடக்க வாய்ப்பு குறைவு தான்.
இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை இதற்கு காலம் எடுத்துக் கொள்ளலாம். அரசு சிறிய கார்களுக்கான வரியை குறைத்தால் மட்டுமே இந்த ரக கார்களின் விற்பனை உயரும் அல்லது இந்தியாவில் உள்ள மக்களின் வருமானம் கணிசமான அளவு உயர்ந்தால் காரின் விலை உயர வாய்ப்புள்ளது.
தற்போது சிறிய கார்களை வாங்கும் திறன் கொண்ட மக்கள் பலர் இந்த காரின் விலையை பார்த்து அதை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். மாருதி நிறுவனம் என்ட்ரி லெவல் கார்களை அதிகமாக தயாரிக்க ஆர்வமாக தான் இருக்கிறது. தற்போது இந்த சிறிய கார்களின் விற்பனையை நிறுத்த மாருதி எந்த முடிவையும் எடுக்கவில்லை. விரைவில் மக்களிடம் இந்த காரை வாங்கும் அளவிற்கு திறன் அதிகமாகும் என எதிர்பார்க்கிறோம்" என்று கூறினார்.
மாருதி நிறுவனம் எப்போதும் குறைந்த விலையில் கார்களை தயாரித்து விற்பனை செய்யும் நம்பர் 1 நிறுவனமாக இருக்கிறது இந்நிறுவனத்தின் மீது இந்திய மக்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. இதனால் தான் இந்நிறுவனத்தின் கார்களின் விற்பனை எண்ணிக்கை இந்தியாவிலேயே மற்ற எந்த நிறுவனங்களும் எட்ட முடியாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. எப்பொழுதும் நம்பர்1 இடத்தில் இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனையாகி வருகின்றன.
இந்நிலையில் சிறிய ரக கார்கள் விற்பனை தற்போது சரிந்துள்ளது. மாருதி நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என பலர் கருதினர். ஆனால் மாருதி நிறுவனம் எஸ்யூவி செக்மெண்டில் அடுத்தடுத்து கார்களை களம் இறக்கி தனது விற்பனையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய லாபத்தை சம்பாதித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் இந்தியாவில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது. அரசு வரியை குறைக்க வேண்டும் என கூறியுள்ளதால் மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. இன்று நடுத்தர மக்கள் பலர் எஸ்யூவி காரை வாங்கும் அளவிற்கு பணம் இல்லாமலும் அதே நேரத்தில் சிறிய ரக காரை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு சிறிய ரக கார்களுக்கான வரியை குறைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








