மிஸ் பண்ணவங்களுக்கு எல்லாம் இன்னொரு சான்ஸ்... ஆர்வி400 பைக்கிற்கு மீண்டும் புக்கிங்கை துவங்கிய ரிவோல்ட்!

ரிவோல்ட் நிறுவனம் இந்தியாவில் தனது தயாரிப்பான ஆர்வி400 பைக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தி அதற்கான புக்கிங்களை துவங்கியது. இந்த பைக்கிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் இந்த பலர் இந்த பைக்கை புக்கிங் செய்தனர். இந்நிலையில் இந்த நிறுவனத்தில் ரத்தன்இந்தியா நிறுவனம் முதலீடு செய்தது.

இதையடுத்து அதிகமான புக்கிங் குவிந்ததால் இந்நிறுவனம் இந்த பைக்கின் புக்கிங்கை நிறுத்தி வைத்துள்ளது. அதன் பின் இந்த பைக்கிற்கான தயாரிப்பு துவங்கியது. இந்நிலையில் தற்போது புக்கிங்கை விட அதிகமான தயாரிப்புகள் செய்யவுள்ள சூழ்நிலையில் மீண்டும் இந்நிறுவனம் தற்போது இந்த பைக்கிற்கான புக்கிங்கை துவங்கியுள்ளது.

மிஸ் பண்ணவங்களுக்கு எல்லாம் இன்னொரு சான்ஸ்... ஆர்வி400 பைக்கிற்கு மீண்டும் புக்கிங்கை துவங்கிய ரிவோல்ட்!

அதன்படி இந்த ஆர்வி 400 பைக்கை புக் செய்ய ரூ2499 முன்பணமாகச் செலுத்தினால் போதும். புக் செய்துவிடலாம். தற்போது அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது படி வரும் மார்ச் 31ம் தேதி ஏற்கனவே புக் செய்தவர்களுக்கு இந்த பைக்கின் டெலிவரி துவங்கும். தற்போது இந்த பைக்கை ஆன்லைனிலும் புக்கிங் செய்யலாம். அல்லது இந்நிறுவனம் 22 மாநிலங்களில் 35 டீலர் ஷிப்களை உருவாக்கியுள்ளது அதன் மூலமும் புக்கிங் செய்யலாம்.

இந்நிறுவனம் ஹரியானா மாநிலம் மானீசரில் உள்ள ஆலையில் தனது தயாரிப்பை துவங்குகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்பு எண்ணிக்கை ரத்தன் இந்தியா நிறுவத்தின் முதலீடு காரணமாகக் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனாலேயே இரண்டாவது முறையாக இந்நிறுவனம் புக்கிங்கை துவங்கியுள்ளது.

இந்த ஆர்வி 400 பைக்கை பொருத்தவரை 3 கிலோ வாட் மிட் டிரைவ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது பைக்கிற்கு 72 வோல்ட் பவரை வழங்குகிறது. இந்த பைக்கிற்கு பேட்டரியாக 3.24 கிலோ வாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் அதிகபட்சமாக 85 கி.மீ வேகம் வரை செல்லும். இந்த பைக்கின் முக்கிய அம்சமாக மைரிவோல்ட் கனெக்டிவிட்டி ஆப் உள்ளது. இந்த ஆப்மூலம் ஜியோ ஃபென்சிங், கஸ்டமைஸ்டு சவுண்ட்கள், பைக் டயக்னிஸ்டிக்ஸ், பேட்டரி ஸ்டேட்டஸ், ரைடு டேட்டா ஆகியவற்றைச் செய்ய முடியும்.

இந்த பைக்கில் மொத்தம் 3 விதமான ரைடிங் மோட்கள் உள்ள, எக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மோட்கள் உள்ளது. இது முழு சார்ஜில் 150 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த பைக்கில் சஸ்பென்சனை பொருத்தவரை முன்பக்கம் அப்சைடு டவுண் ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது. அது போக முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சன்பென்சன்கள் இதில் உள்ளன.

இந்த ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கை பொருத்தவரை ரூ1.25 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது. இது மானியங்கள் சேர்க்கப்படாத விலை. மானியங்கள் கிடைக்கும் போது மேலும் இந்த பைக்கின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, February 20, 2023, 21:00 [IST]
English summary
Revolt motors reopens rv200 ev bike booking
மேலும்... #revolt #ரிவோல்ட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+