குழந்தை நட்சத்திரமா வந்தாங்க இப்ப 44லட்ச ரூபா ஆடி காரை வாங்கி இருக்காங்க! பெரிய பெரிய நடிகைகளே மிரண்டுட்டாங்க!
நீங்க ஹாலிவுட் திரைப்படம் மற்றும் இந்தி டிவி சீரியல்களை அதிகம் பார்ப்பவராக இருந்தால் கட்டாயம் ரிவா அரோரா எனும் குழந்தை நட்சத்திரத்தை பற்றி தெரிந்திருப்பீர்கள். இப்போதும் அவர் குழந்தை நட்சத்திரம்தான். திரைப்படங்கள் வாயிலாக இவருக்கு கிடைத்த ஃபேன்ஸ்களைக் காட்டிலும் இன்ஸ்டா வாயிலாக கிடைத்த ஃபேன்ஸ்களே அதிகம் என கூறலம்.
இன்ஸ்டாகிராமில் அவரை 10.6 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்வதாகக் கூறப்படுகின்றது. இதனைக் கொண்டாடும் விதமாக இந்த 13 வயது குட்டிப் பெண் மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி இருக்கின்றார். ஆடி க்யூ3 எஸ்யூவி சொகுசு காரை அவர் வாங்கி இருக்கின்றார்.

இதன் விலை ரூ. 44 லட்சம் ஆகும். ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த காரை அவரது அம்மாவே அவருக்கு பரிசாக வழங்கி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சந்தோஷமான தகவலை தனது இன்ஸ்டா கிராம் பக்கம் வாயிலாக ரிவா அரோரா தனது ஃபேன்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.
ரிவா அரோராவிற்கு பரிசளிக்கப்பட்டு இருக்கும் ஆடி க்யூ3 இரண்டாம் தலைமுறை வெர்ஷன் ஆகும். கடந்த ஆண்டே இந்த கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னரே இந்த வெர்ஷனை ஆடி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரூ. 44.89 லட்சம் தொடங்கி ரூ. 50.39 லட்சம் வரையிலான விலையில் இந்த சொகுசு கார் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். முந்தைய தலைமுறைகளைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான தோற்றம் மற்றும் சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் மற்றும் லக்சூரி அம்சங்கள் கொண்டதாக இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
எல்இடி ஹெட்லைட்டுகள், பெரிய கிரில், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட முன்-பின் பக்க பம்பர்கள் உள்ளிட்டவை ஆடி க்யூ3 சொகுசு காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், பெரிய 10.1 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை, அலுமினிய இன்செர்ட்டுகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டுகள், பார்க் அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள் உள்ளிட்ட சொகுசு மற்றும் பிரீமியம் அம்சங்களும் இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
இந்த காரை ஆடி நிறுவனம் பெட்ரோல் மோட்டார் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனே இந்த காரில் வழங்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 190 பிஎஸ் பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
இத்துடன், 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனே வழங்கப்படுகின்றது. இது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ, பிஎம்டபிள்யூ எக்ஸ்1 உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது. இத்தகைய சூப்பரான சொகுசு காரையே குழந்தை நட்சத்திரம் ரிவா அரோரா தனக்கு சொந்தமாக்கி இருக்கின்றார். இவர் முதன் முதலில் 2011 ஆம் ஆண்டிலேயே திரையில் தோன்றினார்.
அதாவது, தன்னுடைய முதல் வயதிலேயே திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார், ரிவா அரோரா. ராக்ஸ்டார் எனும் படத்திலேயே அவர் நடித்திருக்கின்றார். படங்களைத் தொடர்ந்து தற்போது குறும்படங்களிலும் அவர் நடித்து வருகின்றார். அவர் நடித்த முதல் குறும்படம் நைனா ஆகும். முக்கிய கதாபாத்திரத்தில் ரிவா அதில் தோன்றியிருப்பார். இதற்கு அடுத்தபடியாக பெஸ்ட் ஃப்ரண்ட் எனும் திரைப்படத்தின் வாயிலாக ஹாலிவுட் திரையுலகிலும் ரிவா நடித்திருக்கின்றார்.


Click it and Unblock the Notifications