118 வருஷத்துல இல்லாத விற்பனையை பெற்ற ரோல்ஸ் ராய்ஸ்... எத்தன யூனிட் விற்பனை செஞ்சிருக்கு தெரியுமா?
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு கடந்த 118 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக விற்பனை கடந்த 2022 ஆம் ஆண்டில் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் மிகவும் பழைமையான வாகன உற்பத்தி நிறுவனங்களில் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) ம் ஒன்று. இது வாகன விற்பனையைத் தொடங்கி 11 தசாப்தங்களுக்கும் மேல் ஆகின்றது. 1904 ஆம் ஆண்டிலேயே நிறுவனம் முதல் முறையாக வாகன உற்பத்தியில் களமிறங்கியது. ஆகையால் நீண்ட பெரிய வரலாற்றைக் கொண்ட நிறுவனமாக இது உலகில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் வரலாற்று புத்தகத்திலேயே 2022 ஆம் ஆண்டு சிறப்புமிக்க ஆண்டு என பதிவு செய்யப்பட்டு உள்ளது.

எத்தனை யூனிட் விற்பனையாகி இருக்கு
இதுவரை இல்லாத அதிக அளவு விற்பனை வளர்ச்சியை ரோல்ஸ் ராய்ஸ் 2022 ஆம் ஆண்டிலேயே பெற்றிருப்பதே இதற்கான காரணம் ஆகும். இதன் காரணத்தினாலேயே நிறுவனம் 2022 ஆம் ஆண்டை நிறுவனம் தற்போது தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட தொடங்கி இருக்கின்றது. கடந்த ஆண்டின் 12 மாத கால இடைவெளியில் மட்டும் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்கள் விற்பனை ஆகியிருக்கின்றன.
போன வருஷம் எத்தன யூனிட்டு விற்பனையாச்சு
இந்த அளவு அதிக எண்ணிக்கையில் நிறுவனத்தின் சொகுசு கார்கள் வேறு எந்த ஆண்டிலும் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆமாங்க 118 ஆண்டு காலத்தில் இந்த அளவு அதிக எண்ணிக்கையில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் விற்பனையாகவில்லை. இது முந்தைய 2021 ஆம் ஆண்டைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையும் கூட. 2021 ஆம் ஆண்டில் 5,586 யூனிட்டுகள் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் விற்பனையாகி இருந்தன.

எங்கு விற்பனை வரவேற்பு அதிகம்
இதைக் காட்டிலும் 8 சதவீதம் அதிக விற்பனையே 2022 ஆம் ஆண்டில் ரோல்ஸ் ராய்ஸ் பெற்றிருக்கின்றது. 2022 ஆம் ஆண்டில் மிக முக்கியமான கார் மாடல்கள் சிலவற்றையும் ரோல்ஸ் ராய்ஸ் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது. உலக அளவில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு அதிகரித்திருப்பதை இது உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மத்திய கிழக்கு, ஆசியா பசிஃபிக், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு நல்ல டிமாண்ட் கிடைத்திருக்கின்றது.
குறிப்பாக, இளம் தொழிலதிபர்கள் மத்தியிலேயே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து இருக்கின்றது. அமெரிக்கா நிறுவனத்தின் முதன்மையான சந்தையாக உள்ளது. நிறுவனத்தின் இரண்டாவது மிகப் பெரிய சந்தையாக சீனா இருந்து வந்த நிலையில், அந்த இடத்தை ஐரோப்பா தட்டி பறித்துள்ளது. சீனாவில் கோவிட் 19 வைரஸின் பாதிப்பு சற்று அதிகரித்திருப்பதால் சீனாவில் ரோல்ஸ் ராய்ஸின் விற்பனைச் சற்று குறைந்தது.

இப்போவே புக்கிங் குவிய ஆரம்பிச்சிருச்சு
அதேவளையில் ஐரோப்பில் அதன் விற்பனை அதிகரித்துவிட்டது. இங்கு அதிகரித்த விற்பனை உயர்வும் நிறுவனத்தின் புதிய உச்சத்திற்கு காரணமாக உள்ளது. இதேபோல் நடப்பாண்டு 2023 ஆம் ஆண்டிலும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இப்போதே நல்ல புக்கிங் வரவேற்பு ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இதை நிறுவனமும் உறுதிப்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காருக்கு நல்ல எண்ணிக்கையில் ஆர்டர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார்
எனவே இந்த ஆண்டிலும் விற்பனையில் மிக சிறந்த வரலாற்று சாதனையை ரோல்ஸ் ராய்ஸ் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரோல்ஸ் ராய்ஸ் தனது மிக மிக விலை உயர்ந்த ஸ்பெக்டர் சொகுசு கார் மாடலையும் இந்த ஆண்டிலேயே உலகிற்கு வெளிப்படுத்தியது. இதுவே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இதை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியதால் இந்த ஆண்டு இன்னும் ஸ்பெஷலான ஒன்றாக ரோல்ஸ் ராய்ஸ்க்கு மாறி உள்ளது.
பெக்ட்ரே நிறுவனத்தின் மிக முக்கியமான எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இதில் 577 எச்பி பவரையும், 900 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரை பயன்படுத்தி இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மின்சார மோட்டார் வெறும் 4.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இதுமட்டுமில்லைங்க இந்த காரில் ஓர் முழு சார்ஜில் 520 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட உள்ளது. இதுமட்டுமின்றி இன்னும் பற்பல சிறப்புகளைக் கொண்ட வாகனமாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்த சொகுசு காரை உருவாக்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








