ரோல்ஸ்-ராய்ஸ் ஃபேக்டரியில் 20 வருஷமா இவர் செய்யும் வேலையை தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!! ரொம்ப முக்கியமானவரு!
ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை சாலையில் காண்பதே அரிதானது. ஒருவேளை உங்களுக்கு அத்தகைய கார்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், ரோல்ஸ்-ராய்ஸ் கார்களின் முன்பக்க ஹெட்லைட்களில் இருந்து பின்பக்க டெயில்லைட்கள் வரையில் ஒரு பின்-ஸ்ட்ரிப் செல்வதை பார்க்க முடியும். இதனை ஓர் அடையாளமாக தனது அனைத்து கார்களிலும் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
இந்த பின்-ஸ்ட்ரிப்களை பல ஆண்டுகளாக ரோல்ஸ்-ராய்ஸ் கார்களில் ஒருவர் தான் தனது கைகளால் வழங்கி வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா. இவரது பெயர் மார்க் கோர்ட். கடந்த 2003இல் இருந்து சுமார் 20 வருடங்களாக ரோல்ஸ்-ராய்ஸ் கார்களுக்கு பின்ஸ்ட்ரிப்பை ஓர் சிறிய பிரஷ் மூலமாக கொடுத்து வருகிறார். ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு நீளத்தில் இருக்கும் என்பது நேரில் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

நன்கு 6 அடி நீளத்தில், தரையில் இயங்கும் ஓர் விசைப் படகு போன்று இருக்கும். அவ்வளவு நீளத்திற்கும் இந்த மனிதர் அசராமல் கடந்த 20 வருடங்களாக பின்ஸ்ட்ரிப்களை வழங்கி வருகிறார் என்றால் ஆச்சிரியமான விஷயமே. பின்-ஸ்ட்ரிப் என்றதும் ஏதோ விசித்திரமான பொருள் என நினைத்துவிட வேண்டும். ஓர் லைன் முன்பக்கத்தில் இருந்து பின்பக்கம் வரையில் காரின் மொத்த நீளத்திற்கும் செல்லும்.
அதாவது, காரை சற்று தொலைவில் இருந்து பார்த்தாலும், அந்த பின்-ஸ்ட்ரிப் மட்டும் தனியாக தெரியும் வகையில் கொடுக்கின்றனர். இத்தகைய லைன்கள் ரோல்ஸ்-ராய்ஸ் கார்களில் மட்டுமில்லை, மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ கார்களிலும் கொடுக்கப்படுவது உண்டு. இவ்வளவு ஏன், சில பட்ஜெட் விலை கார்களில் கூட கொடுக்கப்படுகின்றன. ஆனால், பட்ஜெட் விலை கார்களில் அந்த அளவிற்கு பிரத்யேகமான நிறத்தில் & தரத்தில் கொடுக்கப்படுவதில்லை.

அதேபோல், மற்ற கார்களில் இந்த பின்ஸ்ட்ரிப்கள் மெஷின்கள் மூலமாக கொடுக்கப்படுகிறது. ஆனால், ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து இதனை மனித கைகளால் மேற்கொண்டு வருகிறது. கடந்த 20 வருடங்களாக இந்த வேலையை செய்பவர் தான் மார்க் கோர்ட். இவ்வாறு மனித கைகளால் செய்வதால், கார்கள் ஒவ்வொன்றிற்கும் பிரத்யேகமாக நாங்கள் வழங்கும் கவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிரொலிக்கும் என ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் நம்புகிறது.
இதனை மெஷின் மூலமாகவும் எளிமையாக செய்துவிட முடியும். ஆனால், அது மனித கைகளால் செய்யும் அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்காது என மார்க் கோர்ட் நம்புகிறார். ஒவ்வொரு ரோல்ஸ்-ராய்ஸ் காரும் மொத்தமாக உருவாக்கப்பட்டு, பெயிண்ட் செய்யப்பட்ட பின்னரே மார்க் கோர்ட்டிடம் வருகிறது. அதாவது, ஃபைனல் டச் வேலையை தான் மார்க் கோர்ட் செய்கிறார்.

ஆனால், இவரது வேலையும் முக்கியமானது மற்றும் மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டியது ஆகும். ஏனெனில், மார்க் கோர்ட் ஓர் சிறிய தவறை செய்தால் கூட காருக்கு மொத்தமாக மீண்டும் பெயிண்ட் செய்ய வேண்டிவரும். இவர் பயன்படுத்தும் பிரஷ் எந்த அளவிற்கு சிறியது என்பதை கீழே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம். இந்த ஒரு பிரஷை தான் இவர் அனைத்து ரோல்ஸ்-ராய்ஸ் கார்களுக்கும் பயன்படுத்துகிறாரா? என்றால், இல்லை.
பிரஷ்ஷின் கைப்பிடி மட்டும் இதே அளவு தான். ஆனால் பிரஷ்ஷின் நார்களின் நீளத்தையும், அகலத்தை தேவையான அளவிற்கு வெட்டி பயன்படுத்துவதாக மார்க் கோர்ட் தெரிவிக்கிறார். ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வாங்கும் செல்வந்தர்களுள் பெரும்பாலானோர் காரை அப்படியே வாங்குவது இல்லை. தங்களது விருப்பத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை செய்துக் கொள்வது வழக்கம். அந்த மாற்றங்கள் பின்ஸ்ட்ரிப்களிலும் இருந்தால், அந்த வேலையையும் மார்க் கோர்ட் தான் செய்ய வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் மொத்தமாக உருவாக்கப்பட்ட பின் கடைசியாக தான் தன்னிடம் வருகிறது என்பது நிச்சயமாக மார்க் கோர்ட்டிற்கு தெரியும். இதனால்தான் என்னவோ... தனது வேலை தனக்கு மிகுந்த மனநிறைவை வழங்குவதாக கூறுகிறார். எந்தவொரு தொழிலாளிக்கும் இந்த மனநிறைவு தான் மிக முக்கியமானது. இதன் வெளிப்பாடாகவே, தன்னிடம் வரும் ஒவ்வொரு ரோல்ஸ்-ராய்ஸ் காரையும் தனி சிறப்புடன் மார்க் கோர்ட்டால் பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications









