டிப்பி-காப்பி அடிச்சு தயாரிச்சதா இருந்தாலும் விலை ஃபிக்ஸ் பண்றதுல ஒரு நியாயம் வேணாமா? சீன நிறுவனத்தின் அலம்பல்

ரோல்ஸ் ராய்ஸ் காரை அப்படியே காப்பி அடித்து உருவாக்கியதைப் போல் இருக்கும் ஓர் சொகுசு காரை சீன நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த காருக்கு நிறுவனம் எவ்வளவு விலையை நிர்ணயம் செய்திருக்கு, எந்தெந்த விஷயத்தில் எல்லாம் அது ரோல்ஸ் ராய்ஸை பிரதிபலிக்கும் வகையில் இருக்கு என்பது பற்றிய தகவலைக் காணலாம், வாங்க.

சீனாவைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனங்களில் ஹாங்க்யி (Hongqi) ஒன்று ஆகும். இந்த நிறுவனம் ரோல்ஸ் ராய்ஸ் காரை பிரதிபலிக்கும் ஸ்டைலில் ஓர் சூப்பரான சொகுசு கார் மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. எல்5 (L5) எனும் மாடலே அது ஆகும்.

Hongqi l5

இந்த மாடலின் இரண்டாம் தலைமுறை காரையே ஹாங்க்யி தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. 2023 ஷாங்காய் ஆட்டோ ஷோ (Shanghai Auto Show)வில் ஹாங்க்யி வெளியீடு செய்திருக்கின்றது. இந்த காரை சீன சந்தையில் கடந்த 2014 ஆம் ஆண்டிலேயே ஹாங்க்யி நிறுவனம் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்பபடுத்தியது.

சீனாவில் மிக அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஓர் சொகுசு காராக இது விற்பனையில் இருக்கின்றது. புதிய தலைமுறைக்கும் மிக மிக அதிக விலையே நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த விலை, "காப்பி அடிச்சு உருவாக்கியிருந்த காராக இருந்தாலும், விலையை நிர்ணயம் செய்யுறதுல ஒரு நியாயம் வேணாமா" என கேட்க வைக்கும் அளவிற்கு மிக மிக அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Hongqi l5 interior

ஹாங்க்யி எல்5 ஓர் சொகுசு செடான் ரக காராகும். முதல் தலைமுறையைக் காட்டிலும் மிக அழகிய மற்றும் அதிக ஆடம்பர அம்சங்களைக் கொண்டதாக இரண்டாம் தலைமுறை எல்5 தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, இதன் ஸ்போர்ட்ஸ் தோற்றத்திற்கு கூடுதல் கவர்ச்சியை வழங்கும் விதமாக அதன் வெளிப்புற தோற்றம் பலமடங்கு அழகானதாக மாற்றப்பட்டு இருக்கின்றது.

ஆனால், அதன் ரெட்ரோ கிளாசிக் தோற்றத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருப்பினும், இந்த காரை பார்க்கும்போது, வடிவேலு பட காமெடிதான் பலருக்கு நினைவிற்கு வரும். 'இவ்வளவு வேலைய செஞ்சும், மண்ட மேல இருந்த கொண்டைய மறைக்க மறந்துட்டியே" என்கிற காமெடிதான் அது.

Hongqi l5 seat

ஆமாங்க, பல்வேறு அப்டேட்டுகளை வழங்கிய பின்னரும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பிரதிபலிக்கும் வகையில் ஹாங்க்யி எல்5 அப்பட்டமாக காட்சியளிக்கின்றது. முதல் தலைமுறை எல்5 இடம் இருந்து மாறுபட்டுக் காட்சியளிக்கும் விதமாக இரண்டாம் தலைமுறை எல்5 சொகுசு காரில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

காரின் முன் பக்க க்ரில் இருக்கும் இடம் சற்று உயரமாக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதன் தோற்றத்தில் பெரியளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. அடிப்பகுதி க்ரில்லில் வலை போன்ற அமைப்பு பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன் இரு முனைகளிலும் இன்டிகேட்டர்கள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. மேலும், வலை ரக க்ரில்லின் மத்திய பகுதியிலேயே நம்பர் பிளேட் பொருத்துவதற்கான இடமும் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.

Hongqi l5 side view

தொடர்ந்து, காரின் அழகிற்காக வட்ட வடிவ ஹெட்லேம்ப், பன்முக டீடெய்லிங் அம்சங்கள் உள்ளிட்டவை முகப்பு பகுதியில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் காணப்படும் மிக முக்கியமான அம்சமான 'ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டசி' போன்ற ஹாங்க்யி-ன் சின்னம் காரின் முன் பக்க பானெட்டில் இடம் பெற்றிருக்கின்றது.

இதேபோல், காரின் பக்கவாட்டு டிசைன் மற்றும் பின் பக்க வடிவமைப்பு ஆகியவையும் ரோல்ஸ் ராய்ஸை பிரதிபலிக்கும் வகையிலேயே உள்ளது. இந்த காரை முழுக்க முழுக்க சீனர்களுக்கு பிடித்த வண்ணம் ஹாங்க்யி உருவாக்கி இருக்கின்றது. பன்முக சிறப்பம்சங்கள் இதன் அடிப்படையில் ஹாங்க்யி எல்5 சொகுசு காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், காரின் கேபினுக்குள் எல்5 இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றிற்காக மிகப் பெரிய திரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக மூன்று திரைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், இதன் சென்டர் கன்சோல் மிகவும் அகலமானதாகவும், நிறைய இயற்பியல் பொத்தான்களைக் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றது.

காரின் வெளிப்புறம் முழுக்க முழுக்க ரெட்ரோ-லுக்கை பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்ற நிலையில், அதில் வழங்கப்பட்டு இருக்கும் தொழில்நுட்பம், ஹாங்க்யி எல்5 வாகனத்தை ஓர் அதி-நவீன வசதிக் கொண்ட கார் என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் சில ரோல்ஸ் ராய்ஸை மிஞ்சும் அளவிற்கு இருக்கின்றன.

எனவேதான் இதற்கு விலை ரோல்ஸ் ராய்ஸ்க்கே டஃப் கொடுக்கும் வகையில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய எல்5 சொகுசு காருக்கு 6 மில்லியன் சீன யுவான்களுக்கு விலையாக நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 7 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்பட இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரிஜினல் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கே டஃப் கொடுக்கும் வகையில் சீன நிறுவனம் தன்னுடைய எல்5 காரை உருவாக்கி இருக்கின்றது. இதில், ஆடம்பரம், லக்சூரி வசதிகள் என அனைத்தும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கும். இதன் காரணத்தினாலேயே பல ஆண்டுகளைக் கடந்தும் மிக சிறப்பான விற்பனையை இந்த கார் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, April 24, 2023, 15:10 [IST]
English summary
Rolls royce copycat hongqi l5 showcased at shanghai auto show
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X