பணக்கார பிளே பாய் பசங்களுக்கு பிடிச்ச கார் இது! ஆனா இப்ப நினைச்சா கூட வாங்கமுடியாது!

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தனது டான் காரின் உற்பத்தியை அதிகாரப்பூர்வமாக நிறுத்தியுள்ளது. இந்த கார் ஒரு கன்வெர்டபிள் கார். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் உலகிலேயே சொகுசு கார்களை உற்பத்தி செய்யும் சிறந்த நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனத்தின் கார்களுக்கு உலகம் முழுவதும் மவுசு இருக்கிறது. கோடிக்கணக்கில் இந்த நிறுவனத்தின் காரின் விலையிருந்தாலும் டிமாண்ட் குறையாமல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.

Rolls Royce Dawn Production stopped

இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு இந்நிறுவனம் டான் என்ற கன்வெர்டபிள் காரை அறிமுகப்படுத்தியது. 4 சீட்டர் கொண்ட இந்த கன்வெர்டபிள் காரின் உற்பத்தியை இந்நிறுவனம் தற்போது நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களிலேயே இந்த கார் சற்று வித்தியாசமான கார் என்பதால் பலருக்கு இந்த கார் மீது ஒரு கண் இருக்கும்.

ரோல்ஸ்ராய்ஸ் டான் காரை பொருத்தவரை மொத்தம் 2 விதமான வேரியன்ட்களில் விற்பனையானது. நார்மல் டான் வேரியன்ட் மற்றும் பிளாக்பேட்ஜ் டான் வேரியன்ட் என இரண்டு வேரியன்ட்கள் இருந்தன. இந்த கார் இந்தியாவில் ரூ5.92 கோடி என்ற விலையில் விற்பனையாகி வந்தது.

Rolls Royce Dawn Production stopped

இந்த டான் காரை பொருத்தவரை 6.6 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 563 பிஎச்பிர பவரையும், 780 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டது. இந்த கார் மணிக்கு 250 கி.மீ வேகத்தில் சீறி பாயும். இந்த கார் 50 கி.மீ வேகம் வரை செல்லும் போது இதன் ரூஃபை கன்வெர்டபிள் செய்து திறந்து கொள்ளலாம். 20 நொடியில் இந்த கார் திறந்த வெளி காராக மாறிவிடும்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த டான் காரின் பிளாக் பேட்ஜ் வெர்ஷனை ரோல்ராய்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அப்பொழுது இந்த காரில் புதிய அப்டேட்டாக புதிய எக்ஸாஸ்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருந்தது. இதன் இன்ஜின் திறன் மேம்படுத்தப்பட்டு 593 பிஎச்பி பவர் மற்றும் 840 என்எம் டார்க் திறனுடன் பிளாக் பேட்ஜ் வேரியன்ட் அறிமுகமானது.

Rolls Royce Dawn Production stopped

ரோல்ஸ் ராய்ஸ் டான் காரின் சேஸிஸை பொருத்தவரை "மேஜிக் கார்பெட் ரைட்" அம்சத்தைக் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது. ஒரு முறை இந்த காரில் அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் சென்று கொண்டிருக்கும் போது 3.6 ரிக்கடரில் அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் அதைத் துளியும் உணரவில்லையாம். இது குறித்து அவர் பின்னர் வெளியான செய்தியைப் பார்க்கும் போதே தெரிந்துகொண்டாராம்.

நிலநடுக்கம் வந்தாலும் காருக்குள் இருப்பவர்களுக்கு அது உணர முடியாத அளவிற்கு காரின் வடிவமைப்பு இருப்பதற்கு இது ஒரு சான்றாகக் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட காரின் தயாரிப்பை தற்போது ரோல்ஸ்ராய்ஸ் நிறுத்திவிட்டது. ஏற்கனவே புக்கிங் செய்தவர்களுக்கு கார் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குச் சென்றுவிட்டால் அந்த விற்பனையுடன் இந்த காரின் விற்பனையும் நிறுத்தப்படும் எனத் தெரியவந்துள்ளது.

தற்போது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதல் இவி காரை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. 118 வருடப் பாரம்பரியத்தில் முதன் முறையாக இந்நிறுவனம் இவி காரை தயாரிக்கிறது. இந்த காருக்கு ஸ்பெக்டர் இவி எனப் பெயரிட்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜில் 418 கி.மீ ரேஞ்சை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த கார் 10-80 சதவீத சார்ஜை வெறும் 34 நிமிடத்தில் சார்ஜ் ஏற்றிவிடும். இந்த காரில் பொருத்தப்படவுள்ள மோட்டார் 577 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகிவிடும் எனத் தெரிகிறது. இந்த காரின் டிசைன் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோஸ்ராய்ஸ் நிறுவனத்தின் கார்கள் எல்லாமே சிறந்த கார்கள் தான். இதில் தனித்துவமான கார் டான் கார் தான். இந்த காரின் உற்பத்தியை நிறத்தியது, ரோல்ஸ்ராய்ஸ் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 4, 2023, 12:40 [IST]
English summary
Rolls royce ends dawn convertible car production
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X