முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த ரோல்ஸ் ராய்ஸ்! விலை இவ்வளவு கம்மிதானா?

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காராக ஸ்பெக்டர் என்ற காரை தென்கொரியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை அந்நிறுவனம் ரூ3.98 கோடி என்ற விலையில் விற்பனைக்குக் கொண்டு வர உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் தெளிவாக காணலாம் வாருங்கள்.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பற்றி புதிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை. எல்லோருக்கும் இந்த நிறுவனத்தைப் பற்றி நன்றாகத் தெரியும். உலகின் காஸ்ட்லியான சொகுசு கார்களை தயாரிப்பது நம்பர் ஒன் நிறுவனமாக ரோல்ஸ் ராய்ஸ் இருக்கிறது. இந்நிறுவனத்தின் கார்களை வாங்க பெரும் பணக்காரர்கள் மத்தியில் பெரும் போட்டியை நிலவி வரும்.

rolls royce spectre launch

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் குறித்த விழிப்புணர்வு அதிகமாகச் செய்யப்பட்டு வருகிறது. கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளில் எலெக்ட்ரிக் கார்களை அதிகமாக அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காராக ஸ்பெக்டர் என்ற காரை அறிமுகப்படுத்த முடிவு செய்தது. ஆசிய பசுபிக் நாடுகளில் முதல் நாடாக தென்கொரியா நாட்டில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது எலெகக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்நாட்டில் இந்த ரக கார் அதிகமான விற்பனை பெறும் என்பதால் முதலில் அந்த நாட்டில் இந்த காரை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

rolls royce spectre launch

இந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காருக்கு அந்நிறுவனம் தென்கொரியா நாட்டில் 620 மில்லியன் வோன் என்ற விலையை நிர்ணயம் செய்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 3.98 கோடி என இந்த காரின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வெளிநாட்டில் உள்ள விலை தான் இந்தியாவில் வாங்கினால் விலை அதிகமாகும்.

தென்கொரியா நாட்டில் இந்த காருக்கான புக்கிங் துவங்கப்பட்டதற்குப் பிறகு ஏகப்பட்ட நபர்கள் இந்த காரை புக்கிங் செய்து விட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை எத்தனை பேர் புக் செய்துள்ளார்கள் என்ற எண்ணிக்கையை அந்த நிறுவனம் தெரிவிக்கவில்லை. திகமால் எண்ணிக்கையில் கார்கள் புக் செய்யப்பட்டுள்ளதாக மட்டும் குறிப்பிட்டுள்ளது.

rolls royce spectre launch

இந்த காருக்கான டெலிவரி இந்த 2023 ஆம் ஆண்டில் நான்காம் காலாண்டில் துவங்கும் என ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்கொரியா நாட்டில் இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரின் விற்பனை என்பது பல்வேறு விஷயங்களை மையமாகக் கொண்டு வளர்ந்து வருகிறது. ஆசிய பசிபிக் நாடுகளில் தென்கொரியா நாட்டில் தான் இந்நிறுவனத்தின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது.

தென்கொரியா நாட்டின் பொருளாதார சூழ்நிலைகள், தொழிலதிபர்களின் எண்ணிக்கைகள் ஆகியவை தற்போது கணிசமான அளவில் வளர்ந்து வருகிறது. இதனால் அந்நாட்டில் உள்ள மக்கள் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை அதிகம் விரும்புகின்றனர். அதை வாங்கும் அளவிற்குத் திறன் படைத்த மக்களாகவும் தங்களை வளர்த்துக் கொள்கின்றனர். இதனால் ரோல்ஸ் ராய்ஸ் காரருக்கு அந்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கடந்த 2004ஆம் ஆண்டு தான் முதன் முதலில் தென்கொரியாவில் தனது கார் விற்பனையைத் துவங்கியது. அந்த ஆண்டு வெறும் 5 கார்களை தான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது. ஆனால் படிப்படியாக இந்த விற்பனை அதிகரிக்கத் துவங்கியது.

கடந்த 2020 ஆம் ஆண்டு 171 கார்களையும் 2021 ஆம் ஆண்டு 225 கார்களையும் 2022 ஆம் ஆண்டு 234 கால்களையும் இந்நிறுவனம் தென்கொரியாவில் விற்பனை செய்துள்ளது. இந்த ஆண்டு இதன் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தை பிஎம்டபிள்யூ குடும்பம் தான் நிர்வகித்து வருகிறது. அந்தக் குழுமத்திற்குச் சொந்தமான பிஎம்டபிள்யூ மினி உள்ளிட்ட நிறுவனங்களும் தங்கள் கார்களை தென்கொரியாவில் விற்பனை செய்து வருகிறது.

பிஎம்டபிள்யூ குடும்பம் தனது கார்களை வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக எலெக்ட்ரிக் கார்களாக மாற்றும் திட்டத்தைக் கொண்டுள்ளது. இதே போல ஃபோக்ஸ்வேகன், பென்ட்லி ஜாகுவார் லேண்ட்ரோவர், ஆகிய நிறுவனங்களும் தங்கள் கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றும் கொள்கையைக் கையில் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வாங்க வேண்டும் என்றால் முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி தான் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அதன் விலை இரு மடங்காகும். இந்தியாவில் இந்த காரை பயன்படுத்த ரூ8 கோடிக்கும் மேல் செலவு செய்ய வேண்டியது வரலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 17, 2023, 11:02 [IST]
English summary
Rolls royce launch all electric spectre car in south korea
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X