நமக்கு தெரியாதுன்னு ரோல்ஸ்ராய்ஸ் காரை பத்தி சும்மா கதை கதையா அளந்து விட்றுகாங்க! உண்மை என்ன தெரியுமா?
காஸ்ட்லியான கார் என்று யாராவது உங்களிடம் சொன்னால் உங்கள் மனதிற்கு முதலில் வரும் பெயர் ரோல்ஸ் ராய்ஸ் தான். இந்த கார் குறித்த சில உண்மை தான் இங்குக் காணப்போகிறோம்.
ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் மார்கெட்டில் கோடிக் கணக்கில் விற்பனையாகி வரும் கார்களில் ஒன்று. கோடி கணக்கில் பணம் புரளும் ஒரு விஷயம் என்றாலே புரளிகளும் பரவும் தானே. ரோல்ஸ் ராய்ஸ் கார் மீது ஏகப்பட்ட புரளிகள் கிளம்பியுள்ளது. இதைப் பற்றி ஒவ்வொராக இந்த செய்தியில் விரிவாகக் காணலாம் வாருங்கள்.

ஸ்டார் அந்தஸ்து வேண்டும்: ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க வெறும் பணம் மட்டும் போதாது ஒரு ஸ்டார் அந்தஸ்து வேண்டும். அதனால் அந்த காரை வாங்கும் போது யார் வாங்குகிறார்கள் என வாங்குபவரின் பின்னணியை அந்நிறுவனம் செக் செய்துவிட்டுத் தான் குறிப்பிட்ட நபருக்கு விற்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் எனச் சொல்லப்படுகிறது. இது முற்றிலும் பொய் ரோல்ஸ் ராய் நிறுவனத்தின் கார்களை யார் வேண்டுமானாலும் புக் செய்து வாங்கிக்கொள்ளலாம்.
டிரைவர் தகவல்கள்: கோடிக்கணக்கில் காசு கொடுத்து இந்த காரை வாங்குபவர்கள் கோடீஸ்வரர்களாக தான் இருப்பார்கள். அவர்கள் எப்படியும் தானாக இந்த காரை ஓட்டி செல்ல மாட்டர்கள். இதற்கென ஒரு டிரைவரை வைத்திருப்பார்கள். அந்த டிரைவர் குறித்த தகவல்களை அந்நிறுவனம் செக் செய்யும் எனச் சொல்லப்படுகிறது.

இதனால் அவர் அந்த காரை விபத்தில் சிக்காமல் பாதுகாப்பாக ஓட்டி செல்வாரா என அவரது திறமையை மதிப்பிட முடியும் என்பதால் செய்கிறது. இந்த கார் விபத்தில் சிக்கினால் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்திற்குக் கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் இப்படிச் செய்வதாகக் கூறப்படுகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் காரை விற்பனை செய்யும் போது அதை ஓட்டும் டிரைவர் குறித்த தகவல்களை எல்லாம் கேட்பதில்லை.
லோக்கல் மெக்கானிக்: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களை விற்பனை செய்யும் போதே இந்த காரில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் இதை லோக்கல் மெக்கானிக்களை வைத்து எல்லாம் ரிப்பேர் செய்யக்கூடாது. மாறாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமே அவர்களது மெக்கானிக்கை வீட்டிற்கு அனுப்பி ரிப்பேர் வேலைகளை செய்யது கொடுக்கும் எனச் சிலர் சொல்லுகிறார்.

இதில் பாதி உண்மை தான். ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனமே தங்கள் வாடிக்கையாளர்களின் கார்கள் ரிப்பேர் ஆனால் அதைச் சரிய வாடிக்கையாளர் வீட்டிற்கே தங்கள் மெக்கானிக்கை அனுப்பி ரிப்பேர் செய்து கொடுக்கும். அதற்காக இந்த காரை வேறு மெக்கானிக் மூலம் சரி செய்யக்கூடாது என ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் எந்த இடத்திலும் சொல்லுவதில்லை. கார் ஓனர் விரும்பினால் லோக்கல் மெக்கானிக்கை வைத்துக் கூட குறிப்பிட்ட ரிப்பேரை சரி செய்து கொள்ளலாம்.
செக்ண்ட் ஹேண்ட் விற்பனை கிடையாது: ரோஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களை வாங்கிய ஒருவர் அதை விற்பனை செய்ய நினைத்தால் மீண்டும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடம் தான் விற்பனை செய்ய வேண்டுமே தவிர செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் விற்பனை செய்யக்கூடாது என அந்நிறுவனம் கூறுவதாகச் சொல்லப்படுகிறது.
இப்படிச் செய்வது மூலம் ரோல்ஸ் ராய்ஸ் கார் யாருக்கும் குறைந்த விலையில் கிடைக்காது. ரோல்ஸ் ராய்ஸ் வாங்க வேண்டும் என்றால் புதிய காரை தான் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இதைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இது முற்றிலும் பொய்யான ஒரு தகவல் தான். ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் இந்தியாவில் செகண்ட் மார்கெட்டில் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விலையுயர்ந்த பொருள் என்றால் மக்கள் மத்தியில் அந்த பொருள் குறித்த புரளிகள் அதிகம் கிளம்பி வருகிறது. இப்படி தான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவத்தின் மீது ஏகப்பட்ட புரளிகள் உள்ளது. இந்த புரளிகளால் யாரும் எந்த லாபமும் கிடையாது. மாறாக மக்கள் மத்தியில் ரோல்ஸ் ராய்ஸ் கார் குறித்த பிரமிப்பு மட்டுமே அதிகமாகியுள்ளது. சில ரோல்ஸ் ராய்ஸ் ஓனர்களே கூட இதைக் கிளப்பி விட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications









