Romotow T8 Caravan உற்பத்திக்கு தயார்... இதுக்குள்ள நுழைஞ்சா ஷூட்டிங் ஸ்பாட்டையே நடிகர்கள் மறந்துடுவாங்க!

திரை நட்சத்திரங்கள் ஷூட்டிங் இடைவேளையில் ஓய்வெடுத்துக் கொள்ளவும், ஒப்பணை செய்து கொள்ளவும் கேரவன்கள் முக்கிய பங்களிக்கின்றன. இவற்றிற்காக மட்டுமின்றி வேறு சிலவற்றிற்காகவும் கேரவன்களை நடிகர்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. அந்தவகையில், குட்டி குட்டி மீட்டிங், உணவு அருந்துதல் ஆகியவற்றிற்கும் அவர்கள் கேரவன்களைப் பயன்படுத்தப்படுகின்றனர்.

இதுதவிர இன்னும் பல்வேறு வசதிகளைக் கொண்டதாக கேரவன்கள் இருக்கின்றன. இதன் காரணத்தினாலேயே கேரவன்களுக்கு சில தனிநபர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. கேரவன் மட்டுமின்றி மோட்டார்ஹோம்களையும் பலர் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். அதிலும், அண்மைக் காலமாக இந்த கலாச்சாரம் மக்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகின்றது.

Romotow t8 caravan front side view

இத்தகைய சூழலை உணர்ந்து ஓர் ஆர்கிடெக்சர் நிறுவனம் மிக மிக சிறப்பான கேரவனை உருவாக்கி அசத்தி இருக்கின்றது. யுஎஸ்பி பென்-டிரைவ் (USB Pendrive) ஸ்டைலிலான கேரவனையே நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. இதனை மினி வீடு, ஆஃபிஸ் அல்லது கேம்ப் வாகனம் என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இவ்வாறு மாற்றிக் கொள்ள ஒரு சில நிமிடங்களே போதும் என அதனை தயாரித்த நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. நியூசிலாந்தைச் சேர்ந்த டபிள்யூ 2 (W2) எனும் நிறுவனமே இந்த கேரவனை உருவாக்கி இருக்கின்றது. இதற்கு ரோமோடோவ் டி8 (Romotow T8 Caravan) என்கிற பெயரையும் அது வைத்திருக்கின்றது.

Romotow t8 caravan back side view

இந்த கேரவனை முதன் முதலில் கான்செப்ட் மாடலாகவே டபிள்யூ 2 நிறுவனம் காட்சிப்படுத்தியது. 2018 இல் முதல் முறையாக அதன் தரிசனம் நிகழ்த்தப்பட்டது. இந்த நிலையில் இப்போதே இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் யுஎஸ்பி ரக கேரவன் உற்பத்திக்கு தயாராகி இருக்கின்றது. இரு பகுதிகளாக இந்த கேரவன் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.

ரோமோடோவ் டி8 கேரவனின் உட்பக்கம் 90 டிகிரி வரை சுழலும் திறன் கொண்டது. இவ்வாறே அது வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. அதனை சுழற்றி வெளியே நிறுத்தும்போது, காலியான இடத்தை மீட்டிங் ஸ்பாட்டாக அல்லது இயற்கை காட்சிகளை அமர்ந்து ரசிக்கும் பகுதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Romotow t8 caravan front full view

இந்த வசதிகள் மட்டுமின்றி இன்னும் பல்வேறு வசதிகளை இந்த கேரவனில் டபிள்யூ2 வாரி வழங்கி இருக்கின்றது. படுக்கை அறை, லிவ்விங் ரூம், கழிவறை, சமையலறை ஆகிய வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றுடன் சேர்த்து டிவி, புரஜெக்டர், ஆடியோ சிஸ்டம், குளிர்சாதன பெட்டி போன்ற அத்தியாவசிய கருவிகளும் ரோமோடோவ் டி8 கேரவனில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த கேரவன் சுற்றுச் சூழலுக்கு உகந்த ஒன்றாகும். பெரும்பாலான கேரவன்களில் அதில் உள்ள மின்சாதன பொருட்களை இயக்க தனி ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த கேரவனில் அதன் மின்சார தேவையை பூர்த்தி செய்து கொள்ள சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அது கேரவனின் மேற்கூரையில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்துடன், சேர்த்து மின்சாரத்தை சேமித்து வைத்துக் கொள்ளும் விதமாக 200 Ah லித்தியம் அயன் பேட்டரி பேக் கேரவனில் வழங்கப்பட்டு இருக்கின்றது. நாள் முழுக்க கேரவனுக்கு தேவையான மின்சாரத்தை சேமித்துக் கொள்ள இந்த பேட்டரி பேக் போதுமானது ஆகும். இந்த அம்சங்கள் அனைத்தும் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கின்றது.

டபிள்யூ2 நிறுவனம் வெகு விரைவில் ரோமோடோவ் டி8 கேரவனை உலக சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. முதலில் நியூசிலாந்திலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். 429,000 அமெரிக்க டாலர்களுக்கு அது விற்கப்பட இருக்கின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் 2.19 கோடிக்கும் அதிகமான விலையில் ரோமோடோவ் டி8 விற்பனைச் செய்ய இருக்கின்றது.

முன்னணி திரை நட்சத்திரங்கள் மற்றும் பெருத்த செல்வந்தர்களுக்கு ஏற்ற ஆடம்பர வசதிக் கொண்ட வாகனமாக இதனை வடிவமைத்திருப்பதனாலேயே இந்த அளவு அதிக விலை ரோமோடோவ் டி8-க்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது இந்தியாவிற்கு விற்பனைக்கு வருமா என்பது தெரியவில்லை. அதேவேளையில், அது விற்பனைக்கு வருவதற்கான எந்தவிதமான சாத்தியக் கூறுகளும் இதுவரை தென்படவில்லை என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

இந்தியர்கள் மத்தியிலும் மோட்டார்ஹோம் மற்றும் கேரவன்கள் மீதான வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஒரு சிலர் தங்களது கார்களையே மோட்டார்ஹோமாக மாற்றி பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். ஒரு சிலர் டெம்போ டிராவல்லர் போன்ற வாகனங்களை வாங்கி தங்களுக்கான கேரவன்களாக மாடிஃபைச் செய்துக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, April 10, 2023, 15:18 [IST]
English summary
Romotow t8 caravan ready for production
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X