இந்த காருல பயன்படுத்தவா 122கோடி ரூபா நம்பர் பிளேட்ட வாங்கினாரு! பணம் மரத்துல காய்ச்சாகூட இப்படி பண்ண மாட்டங்க!

உலகின் விலையுயர்ந்த வாகன நம்பர் பிளேட் அண்மையில் துபாயில் ஏலம் வாயிலாக விற்பனைச் செய்யப்பட்டது. 'துபாய் பி 7' (Dubai P 7) எனும் அந்த நம்பர் பிளேட் மிக மிக அதிக தொகைக் கொடுத்து வாங்கப்பட்டு இருக்கின்றது. 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்தே அந்த நம்பர் பிளேட் வாங்கப்பட்டு உள்ளது.

இதன் இந்திய ரூபாய் மதிப்பு 122.59 கோடிகள் ஆகும். இத்தகைய அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட நம்பர் பிளேட் இப்போது எந்த காரில் பயன்படுத்தப்படுகின்றது என்கிற விபரங்களே தற்போது இணையத்தின் வாயிலாக வெளியாகி இருக்கின்றது. டெஸ்லா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான மாடல் எக்ஸ் (Model X)-லேயே, உலகின் மிக மிக விலை உயர்ந்த நம்பர் பிளேட் தற்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

Most expensive number plate

ஆனால், இதன் உரிமையாளர் யார் என்பது பற்றிய விபரம் தெரியவில்லை. டெஸ்லா மாடல் எக்ஸ் ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் ஆகும். இது, 97,490 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுகின்றது. இதன் தோராயமான இந்திய மதிப்பு ரூ. 80 லட்சம் ஆகும்.

இத்தகைய விலைக் கொண்ட காருக்கே 122.59 கோடி ரூபாய் மதிப்புள்ள நம்பர் பிளேட்டை துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் பயன்படுத்தி வருகின்றார். நம்பர் பிளேட்டுக்கு செலவு செய்திருக்கும் தொகையைக் கொண்டு அவரால் டெஸ்லா மாடல் எக்ஸை 120 யூனிட்டுகள் வரை வாங்கி இருக்க முடியும்.

Tesla model x front look

இதற்கு முன்னதாகவும் இதுபோன்று அதிக தொகை செலவு செய்யப்பட்டு நம்பர் பிளேட்டுகள் வாங்கிய சம்பவங்கள் துபாயில் அரங்கேறி இருக்கின்றன. அந்தவகையில், 2008 ஆம் ஆண்டில் சுமார் 14.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் நம்பர் பிளேட் வாங்கப்பட்டது. ஆகையால், இதுவே உலகின் மிக அதிக விலைக் கொண்ட நம்பர் பிளேட் கொள்முதலாக காட்சியளித்து வந்தது.

இந்த வரலாற்றையே பி 7 தற்போது மாற்றி அமைத்திருக்கின்றது. "துபாயில் உள்ள ஒரு சில ஹோட்டல்களில் ஒற்றை இலக்க பதிவெண் கொண்ட கார்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும், பிற வழக்கமான பதிவெண்கள் கொண்ட வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனாலேயே தான் மிக அதிக தொகையை செலவு செய்து டி 5 பதிவெண்ணை வாங்கினேன்" என பல்விந்தர் சிங் எனும் இந்தியர் கூறியதாகக் கூறப்படுகின்றது.

Tesla model x running

ஒருவேளை பி 7 பதிவெண் 122.59 கோடி கொடுத்து வாங்கப்பட்டதற்கு பின்னால் மறைந்திருக்கும் காரணம் இதுவாகவும் இருக்கலாம் என கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை. பி 7 பதிவெண்ணின் விலையை மிஞ்சக் கூடியதாக எஃப் 1 பதிவெண் இருக்கின்றது.

இதன் விலை ரூ. 132 கோடிகள் ஆகும். இங்கிலாந்தைச் சேர்ந்த அஃப்சல் கான் எனும் நபருக்கு சொந்தமானதே இந்த பதிவெண் ஆகும். புகாட்டி வெரோன் சூப்பர் காரிலேயே எஃப் 1 பதிவெண் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வெறும் 4 கோடி ரூபாய்க்கு தொடங்கி எஃப் 1 பதிவெண்ணின் ஏலம் 132 கோடிக்கு முடிக்கப்பட்டது.

இந்தியாவிலும் இது போல் ஒரு சிலர் லட்சம் மற்றும் கோடிகளை கொடுத்து பதிவெண்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கேரளாவில் கேஎல் 07 டிஏ 9999 (KL 07 DA 9999) எனும் பதிவெண் 13 லட்சத்திற்கு ஏலம் வாயிலாக விற்பனைக்குப் போனது குறிப்பிடத்தகுந்தது.

இதற்கு முன்பாக பிரபல பாடகர் ஹனி சிங் அவருடைய ஆடி ஆர்8 சூப்பர் காருக்காக 28 லட்ச ரூபாய் செலவில் ஃபேன்சி நம்பரை வாங்கினார். இதன் வாயிலாக, இந்தியாவிலும் ஃபேன்சி நம்பர் கொள்முதல் சம்பவம் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாக தெரிகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: செல்வந்தர்கள் பலர் தங்களுடைய ஆதிக்கத்தைக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற செயல்படுகளில் ஈடுபடுவதுண்டு. இதனால், அவர்களின் பெயர் இன்னும் பிரபலமாகும். இந்த காரணத்திற்காகவே பலர் பல கோடிகளை கார்களுக்காகவும், நம்பர் பிளேட்டுகளுக்காகவும் செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலும் இந்த கலாச்சாரம் தற்போது பிரபலமடையத் தொடங்கி இருக்கின்றது.

Article Published On: Friday, May 5, 2023, 17:54 [IST]
English summary
Rs 122 crore worthable number plate spotted on tesla model x
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X