எலெக்ட்ரிக் காரை ஓட்டிபார்த்துவிட்டு மிரண்டுபோன ருதுராஜ்! இந்த காருல சென்னை-டூ-தடா போய்ட்டு ரிடர்னே வந்திடலாம்
டாடா மோட்டார்ஸின் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடலாக டியாகோ இவி இருக்கின்றது. இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் மாடல்களிலும் ஒன்றாக இது இருக்கின்றது. இந்த காரில் அமர்ந்தபடியே சமீபத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியைச் சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட்டை இளைஞர் ஒருவர் பேட்டி எடுத்திருக்கின்றார்.
ஐபிஎல் போட்டியின் அஃபீசியல் பார்ட்னர் வாகனம் இது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் அடிப்படையிலேயே டாடா டியாகோ இவி பேட்டியின்போது பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. பல்வேறு சுவாரஷ்யமான கேள்விகளுக்கு ருதுராஜ் பதிலளித்தார். அந்தவகையில், இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றான டியாகோ இவி பற்றியும் அவர் தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்திருக்கின்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆட்ட நாயகனாக இருக்கும் ருதுராஜ் மனதில் இந்த கார் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றது என்றே கூறலாம். இதை உறுதிப்படுத்துகின்ற விதமான வார்த்தைகளே அவரின் வாயில் இருந்து வெளியாக இருக்கின்றது. குறிப்பாக, எலெக்ட்ரிக் ரேஞ்ஜ் திறனை அவரை வெகுவாக கவர்ந்திருக்கின்றது என்றே கூறலாம்.
ஏனெனில் காரில் அமர்ந்த உடனேயே அவர் அந்த மின்சார காரின் ரேஞ்ஜ் திறனைப் பற்றியே கூறுகின்றார். டாடா டியாகோ இவி ஓர் முழு சார்ஜில் 315 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த உச்சபட்ச ரேஞ்ஜைக் கொண்டு தன்னால் புனேவில் இருந்து லோனவல்லா வரை சென்று ரிட்டர்ன் வந்துவிட முடியும் என தெரிவித்தார்.

இந்த இந்த எலெக்ட்ரிக் காரை நம்ம ஊருல பயன்படுத்தினா, குறிப்பா சென்னையில இருந்து தடாவுக்கு போயிட்டு ரிட்டர்னே வந்திடலாம். வந்து பிறகும் கொஞ்சம் தூரம் வரை இந்த காரில் டிராவல் செய்துகொள்ள முடியும். டாடா மோட்டார்ஸ் வாக்குறுதி அளித்திருப்பது 315 கிமீ ரேஞ்ஜ் என்றாலும், ரியல் லைஃபில் 200-220 கிமீ வரை மட்டுமே ரேஞ்ஜை பெற முடியும் என கூறப்படுகின்றது.
அதேவேளையில், ஹை வேஸில் லாங் டிராவல் செய்யும்போது கூடுதல் ரேஞ்ஜ் திறனை பெற்றுக் கொள்ள முடியும். இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் காரையே ஆஹா, ஓஹோவென ருதுராஜ் புகழ்ந்து தள்ளி இருக்கின்றார். தொடர்ந்து, இந்த கார் சத்தமே இல்லாமல் இயங்கியது குறித்தும் அவர் பெருமையாக பேசி இருக்கின்றார்.

பொதுவாக எலெக்ட்ரிக் வாகனம் என்றாலே மிகவும் ஸ்மூத்தாகவும், சைலண்டாகவும் இயங்கும். இந்த இரண்டிற்கும் பெயர்போனதாக இந்த கார் இருப்பது தற்போது மேலும் உறுதியாகி உள்ளது. இவ்வாறு, ருதுராஜ் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கும் டியாகோ இவி-யையே அண்மையில் ஒரே அடியில் சொட்டை ஆக்கினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், புதிய அணியான லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் டீமுக்கும் இடையில் 6வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது அவர் விளாசிய பந்தே சிக்ஸர் பவுண்டரியைத் தாண்டி சென்று ஸ்பான்சருக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது மோதியது.
இதில் காரின் பின்பக்க டூர் சொட்டை ஆகியது. இந்த நிலையிலேயே டியாகோ இவியை தற்போது ருதுராஜ் புகழ்ந்து பேசி இருக்கின்றார். இந்தியாவில் ரூ. 8.69 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து டியாகோ இவி விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் உயர்நிலை வேரியண்ட் ரூ. 11.99 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் டியாகோ இவி விற்பனைக்குக் கிடைக்கிறது. எக்ஸ்இ (XE), எக்ஸ்டி (XT), எக்ஸ்இசட் பிளஸ் (XZ+), எக்ஸ்இசட் பிளஸ் டெக் லக்ஸ் (XZ+ Tech LUX) ஆகியவையே அவை ஆகும். இதுதவிர இரு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்களிலும் இந்த கார் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன.
19.2 kWh மற்றும் 24 kWh ஆகியவையே அந்த பேட்டரி பேக்குகளே அவை ஆகும். இதில், 19.2 kWh பேட்டரி பேக் 250 கிமீ ரேஞ்ஜையும், 24 kWh பேட்டரி பேக் 315 கிமீ ரேஞ்ஜையும் ஓர் முழு சார்ஜில் வழங்கும். டியாகோ இவியில் 74 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் வெளியேற்றக் கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒற்றை மின் மோட்டார் தேர்வில் மட்டுமே டியாகோ இவி விற்பனைக்குக் கிடைக்கும். இந்த மோட்டார் வெறும் 5.7 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இரு விதமான ரைடிங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகியவையே அவை ஆகும். இதேபோல், பாதுகாப்பு விஷயத்திலும் இந்த எலெக்ட்ரிக் கார் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது. ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட வசதிகளும் எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. அதிலும், டியாகோ இவிக்கு கிடைக்கத் தொடங்கி இருக்கும் வரவேற்பு மிக சூப்பரானதாக இருக்கின்றது. இந்த காருக்கு போட்டி அளிக்கும் விதமாகவே எம்ஜி நிறுவனம் கோமெட் இவியை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









