காருல தூங்க போறதுக்கு முன்னாடி இதை எல்லாம் செஞ்சிட்டோமானு ஒரு தடவ செக் பண்ணிடுங்க! உசுருக்கே ஆபத்தா போயிரும்!

காரில் தூங்க சென்ற ஓர் நபர் திடீரென ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக பரிதாபமாக உயரிழிந்திருக்கின்றார். இந்த அதிர்ச்சியான சம்பவம் இந்தியாவிலேயே அரங்கேறி இருக்கின்றது. காரில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதற்காக அந்த நபர் கொசுவர்த்தி ஏத்தியதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே காரில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கின்றது.

இதுவே அவர் உயிரிழப்பிற்கும் காரணமாக அமைந்துள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள குல்சும்புரா எனும் பகுதியிலேயே இந்த சோக நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அறியாமையினாலே இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இதுபோன்று, இன்னும் பலர் கார்களில் செய்யக் கூடாத செயல்களை சிலவற்றை செய்து ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு காரில் செய்யக் கூடாத சிலவற்றை பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம். குறிப்பாக காரில் தூங்கச் செல்லும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். அதாவது, தூங்க செல்லும் முன் சில விஷயங்களை கவனிக்க வேண்டி இருக்கின்றது. அவை என்ன என்பதை பார்க்கலாம், வாங்க.

காாரை ஓட்டும்போது மட்டுமல்ல காரிலேயே தூங்க செல்லும்போதும் கட்டாயம் பாதுகாப்பாக இருத்தல் வேண்டும். இதற்கு நீங்கள் இருக்கையில் அமர்ந்தவாறு இருத்தல் வேண்டும். சீட் பெல்ட் அணிந்துக் கொள்ளலாம். ஆனால், படுக்கையில் படுப்பதைப் போல இருக்கையில் படுக்கக் கூடாது. குறிப்பாக, கார் பயணித்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் பயணியின் இருக்கையில் அமர்ந்துக் கொண்டு அலாதியாக உறங்கிக் கொண்டு செல்கின்றீர்கள் என்றால் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து உறங்க வேண்டும்.

திடீரென விபத்து ஏற்படும் எனில் உயிர் காக்கும் ஏர்-பேக் உங்களை விபத்தினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காப்பாற்றும். நீங்கள் படுக்கையில் படுத்துக் கொண்டு உறங்குவதைப் போல் உறங்கினால் ஏர்-பேக்கால் உங்களை பாதுகாக்க முடியாது. எனவேதான், காருக்குள் ஏறியதும் சீட் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

காரை ஓரமாக நிறுத்திவிட்டு உறங்கினாலும் சீட் பெல்ட் அணிந்திருப்பதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். விபத்து எப்படி வேண்டுமானாலும் அரங்கேறலாம். மேலும், சௌகரியமான பயண அனுபவத்தை பெற வேண்டும் எனில் காட்டன், சில்க், லினன் மற்றும் பேம்பூ ரக உடைகளை அணிவது நல்லது. இதேபோல், ஸ்லீப் மாஸ்க்கையும் அணிந்துக் கொள்ளலாம்.

இது வெளிச்சம், பயணத்தின்போது ஏற்படும் குமட்டல் போன்றவற்றை தவிர்க்க பெரும் உதவியாக இருக்கும். சன்-ஷேட்களை ஜன்னல்களில் பயன்படுத்தலாம். இதனால் அதிக வெயில் அல்லது பிற விளக்குகளின் வெளிச்சம் உட்புறத்தில் நுழைவதை தவிர்க்க முடியும். கழுத்துக்கான தலையணையை பயன்படுத்தலாம். இதன் வாயிலாக விரைவில் உடல் சோர்வு அடைவதை தவிர்க்க முடியும்.

குறிப்பாக, தூங்குவதற்கு நல்ல சூழலை இது ஏற்படுத்திக் கொடுக்கும். குறிப்பாக, ஒரு இரவு முழுவதும் காரில் உறங்க இருக்கின்றீர்கள் என்றால், காரை பாதுகாப்பான இடத்தில் நிறுத்துவதை முதலில் செய்ய வேண்டும். மேலும், காருக்கான மெத்தைகளை பயன்படுத்தலாம். இது இப்போது சந்தையில் மிக தாராளமாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.

இதனை தேவைக்கேற்ப காற்றை நிரப்பி விரித்துக் கொள்ள முடியும். மேலும், தேவையற்ற நேரங்களில் காற்றை வெளியேற்றிவிட்டு அவற்று சுருட்டி வைத்துக் கொள்ளவும் முடியும். இத்துடன் காரில் படுத்துத் தூங்க செல்லும் முன் காரில் உள்ள அனைத்துகளும் வெளிப்புறத்தில் இருந்து திறக்க முடியாத வண்ணம் லாக் செய்யப்பட்டு இருக்கின்றதா என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

இத்துடன், எஞ்ஜின் ஆஃப் செய்யப்பட்டுவிட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதேபோல் தேவையற்ற மின்சாதன பொருட்களையும் அனைத்து விடுவது நல்லது. இதுதவிர படுக்கும் முறையிலும் சில யுக்திகளைக் கையாள வேண்டியிருக்கின்றது. மிக முக்கியமாக உங்கள் கார் சமமான தரை தளத்தில் நிறுத்தப்படாமல் சற்று சாய்வாக இருக்கும் எனில் உங்கள் தலை சற்று மேடாக இருக்கும் பகுதியில் இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.

இது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவியாக இருக்கும். மேலும், இதுபோன்று பொதுவெளியில் காரில் படுத்து உறங்க செல்லும்போது ஜன்னல்கள் அனைத்தும் அடைத்திருப்பதையும் நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். முடிந்தால் சன்ஷேடால் ஜன்னல்களை மூடிக் கொள்வது இன்னும் நல்லது. இதுதவிர, தேவையில்லாமல் ஏதேனும் மின்சாதனம் இயங்கிக் கொண்டிருக்கும் அதை அனைத்துவிடுவது நல்லது. குறிப்பாக, தீ பற்றி எரியக் கூடிய பொருட்களை கார்களில் இருந்து அப்புறப்படுத்திவிடுவதையும் தவறாமல் செய்துவிடுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

காரில் உறங்குவது என ஆகிவிட்டால், காரை கட்டாயம் பாதுகாப்பான இடத்தில் நிறுத்துவதே நல்லது. அப்படி என்றால் மட்டுமே காருக்கும், நமக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். நெடுஞ்சாலை ஓரங்களில் காரை நிறுத்திவிட்டு உறங்குவது ஆபத்தானது. அதேவேளையில் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டுவது இன்னும் ஆபத்தானது. ஆகையால் தூக்கம் வந்துவிட்டால் காரை ஆபத்தில்லா இடத்தில் நிறுத்திவிட்டு குட்டி தூக்கம் போட்றுங்க.

Article Published On: Monday, March 27, 2023, 8:41 [IST]
English summary
Safe sleeping tips in car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X