Safest Cars in India பட்டியல்ல இருக்குற காரை லாரிலயே கொண்டு போய் மோதுனாலும் ஒன்னும் ஆகாது! லிஸ்ட் இதோ!

இந்தியா மக்களுக்கு தற்போது கார் வாங்க வேண்டும் என்றால் பாதுகாப்பான கார்களை தான் வாங்க வேண்டும் என்ற மன நிலை இருக்கிறது. இந்தியச் சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால் உயிருக்கு ஒரளவு பாதுகாப்பு தருவது இந்த பாதுகாப்பான கார்கள் தான்.

இப்படியாகப் பாதுகாப்பான கார் என்பதற்கு ஒரு காரின் சேஃப்டி ரேட்டிங் மிகவும் முக்கியம். இதற்காக குலோபல் என்கேப் அமைப்பில் வழங்கப்பட்ட ஸ்டார் அளவை வைத்துத் தான் மக்கள் பாதுகாப்பான காரை முடிவு செய்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் டாப் 10 பாதுகாப்பான கார்களின் பட்டியலைக் காணலாம்.

Safest Cars in India Top 10 list

ஸ்கோடா ஸ்லாவியா & போக்ஸ்வேகன் விர்டூஸ்: சமீபத்தில் நடந்த குலோபல் என்கேப் டெஸ்டின்படி இந்தியாவின் பாதுகாப்பான காராக இந்த இரண்டு கார்கள் தான் இருக்கிறது. இந்த இரு கார்களும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான புள்ளியில் 34க்கு 29.71 மார்க்குகளும், குழந்தைகளுக்கான மார்கெட்டில் 49க்கு 42 மதிப்பெண்களும் பெற்றுள்ளது.

ஸ்கோடா குஷாக் & ஃபோக்ஸ்வேகன் டைகுன் : இந்த இரு கார்களும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான ரேட்டிங்கில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளனர். பெரியவர்களுக்கான ரேட்டிங் புள்ளிகளில் 34க்கு 29.64 புள்ளிகளையும் குழந்தைகளுக்கான ரேட்டிங் புள்ளிகளில் 49க்கு 42 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ-என்: இந்த கார் இந்தியாவில் பிரபலமான கார் இது பெரியவர்களுக்கான ரேட்டிங் புள்ளியில் 34க்கு 29.25 புள்ளிகளை பெற்று 5 ஸ்டார் ரேட்டிங்கையும், குழந்தைகளுக்கான ரேட்டிங்கில் 49க்கு 28.93 புள்ளிகள் பெற்று 3 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.

டாடா பஞ்ச்: தற்போது இந்தியாவில் பரபரப்பாக விற்பனையாகி வரும் கார் இது. ரூ10 லட்சத்திற்குக் குறைவாக இருப்பதால் பலரது தேர்வு இதுவாக இருக்கிறது. இந்த கார் பெரியவர்களுக்கான ரேட்டிங் புள்ளியில் 17க்கு 16.45 புள்ளிகளையும் குழந்தைகளுக்கான ரேட்டிங் புள்ளியில் 49க்கு 40.89 புள்ளிகளையும் பெற்றுள்ள பெரியவர்களுக்கு 5 ஸ்டார், குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்கு 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 300: இந்த காரும் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங்கையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான ரேட்டிங் புள்ளியில் 17க்கு 16.42புள்ளிகளையும், குழந்தைகளுக்கான ரேட்டிங் புள்ளியில் 49க்கு 37.44 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

டாடா அல்ட்ராஸ்: இந்த பட்டியலில் இருக்கும் ஒரே ஹேட்ச் பேக் கார் இது தான். இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு ரேட்டிங்கில் 17க்கு 16.13 புள்ளிகளைப் பெற்று 5 ஸ்டார் ரேட்டிங்கும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 29 புள்ளிகளைப் பெற்று 3 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

டாடா நெக்ஸான்: இந்தியாவில் தயாரித்து 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற முதல் கார் இது. இந்த கார் பெரியவர்களுக்கு 5 ஸ்டார் ரேட்டிங் மற்றும் குழந்தைகளுக்கு 3 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான ரேட்டிங் புள்ளியில் 17க்கு 16.06 புள்ளிகளையும், குழந்தைகளுக்கு 49க்கு 25 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700: இந்தியாவில் நீண்ட காத்திருப்பு காலம் கொண்ட கார் இது இந்த கார் பெரியவர்களுக்கான ரேட்டிங் புள்ளியில் 17க்கு 16.03 புள்ளிகளையும், குழந்தைகளுக்கு 49க்கு 41.66 புள்ளிகளையும் பெற்று, முறையே 5 மற்றும் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

குலோபல் என்கேப் சமீபத்தில் தனது புரோட்டோகாலை அப்டேட் செய்தது அப்பொழுது பெரியவர்களுக்கான ரேட்டிங் புள்ளியை 34 என்பதை அடிப்படையாக வைத்துள்ளது. முன்னர் பழைய ரேட்டிங்கின் படி 17 தான் அதிகமான புள்ளிகளாக இருந்தது. இதன் அடிப்படையில் சில கார்களுக்கான புள்ளிகள் மாறுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 8, 2023, 9:37 [IST]
English summary
Safest cars in india top 10 list with gncap rating
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+