சென்னைல இந்த அளவு விலை உயர்ந்த கார்கள் எல்லாம் வலம் வருதுனா அது இவராலதான்! லெஜண்ட் சரவணாவிடம் இத்தன கார்களா!
நாம நினைச்சுகூட பார்க்க முடியாத அசாத்தியமான ஆடம்பர வாழ்க்கையை நம்ம சரவணா ஸ்டோார் ஓனர் லெஜண்ட் சரவணா வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். தமிழகத்தின் பெரும் தொழிலதிபராக வளர்ந்து வந்திருக்கும் இவர் உண்மையில் ராஜாவைபோல தமிழகத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.
இதற்கு அவரிடத்தில் உள்ள ஆடம்பர கார்களே சான்றாக இருக்கின்றன. ஏகப்பட்ட விலை உயர்ந்த கார்களை லெஜண்ட் சரவணா தன் வசம் வைத்துள்ளார். ஒவ்வொரு காரும் பல கோடி ரூபாய் மதிப்புக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. அப்படி என்னென்ன கார் மாடல்களை அவர் பயன்படுத்தி வருகின்றார்?, குறிப்பாக, அவரிடத்தில் எத்தனை சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பதுகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

லெஜண்ட் சரவணா இடத்தில் இருக்கும் பெரும்பாலான சொகுசு கார்கள் 'வெள்ளை' நிறத்திலும், '3666' என்கிற பதிவெண்களையும் கொண்டதாக இருக்கின்றன. இதனால்தான் இவருடைய சொகுசு கார் கராஜிக்கு '3666 கராஜ்' என பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது. இந்த கராஜை பார்க்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு மட்டுமே இதுவரை கிடைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்தகைய கராஜில் இருக்கும் அரிய வகை கார் மாடல்களை சில நேரங்களில் சென்னை அல்லது பாண்டி சாலைகளில் பார்க்க முடியும். அவ்வாறு அவை தென்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களையும் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் விரைத் (Rolls Royce Wraith): லெஜண்ட் சரவணன் வைத்திருக்கும் இந்த ஒற்றை உலக புகழ்பெற்ற சொகுசு காரின் மதிப்பு மட்டுமே 5 கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும். இத்தகைய விலை உயர்ந்த கார் சென்னை சாலையில் அவ்வப்போது தென்படுகின்றது என்றால் அது லெஜண்ட் சரவணாவால்தான். இந்த சொகுசு காரில் 6.6 லிட்டர் வி12 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
அந்த மோட்டார் 623 பிஎச்பி வரையிலான திறனை வெளியேற்றும். இது ஓர் இரண்டு கதவுகள் மட்டுமே கொண்ட கூபே ரக காராகும். இந்தியாவில் உள்ள முன்னணி தொழிலதிபர்கள் பலரின் பிரியமான ஆடம்பர காராக ரோல்ஸ் ராய்ஸ் விரைத் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான அம்பானியிடமும் இந்த கார் பயன்பாட்டில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost): லெஜண்ட் சரவணா இடத்தில் பயன்பாட்டில் இருக்கும் மற்றுமொரு அரிய வகை ரோல்ஸ் ராய்ஸ் காராக கோஸ்ட் இருக்கின்றது. இதன் சந்தை மதிப்பு ரூ. 6.95 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் பயணிக்கும்போது அரண்மனையே வாகனமாக மாறி உலா செல்லுவதைப் போல் இருக்கும். அந்த அளவிற்கு ஆடம்பர வசதிகளைத் தாங்கிய வாகனமே இதுவாகும்.
ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் VII (Rolls Royce Phantom VII): இது லெஜண்ட் சரவணாவிடம் இருக்கும் மூன்றாவது ரோல்ஸ் ராய்ஸ் தயாரிப்பாகும். இதிலும், பயணிக்கும்போது கப்பலில் பயணிப்பதைப் போன்றே இருக்கும். சென்னை என்ன இந்தியாவின் எந்த மாதிரியான கரடு-முரடான பாதையில் பயணித்தாலும் இந்த மாதிரியான அனுபவமே கிடைக்கும். இதன் மதிப்பு ரூ. 9.5 கோடிக்கும் அதிகம் ஆகும். லெஜண்ட் சரவணாவின் மிகவும் காஸ்ட்லியான சொகுசு காராக இது காட்சியளிக்கின்றது.

லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan): லெஜண்ட் சரவணன் இடத்தில் மற்றுமொரு அரிய வகை மற்றும் சூப்பர் காராக இது இருக்கின்றது. இதன் மதிப்பு ரூ. 3.7 கோடிக்கும் அதிகம் ஆகும். இது ஓர் உயர் திறனை வெளியேற்றும் சூப்பர் காராகும். இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எஞ்ஜின் 572 எச்பி திறனை வெளியேற்றும் திறன் கொண்டது. அதுமட்டுமில்லைங்க மணிக்கு 325 வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாகவும் அது காட்சியளிக்கின்றது.
ஃபெர்ராரி 488 (Ferrari 488): லெஜண்ட் சரவணாவிடம் இந்த காரும் பயன்பாட்டில் இருக்கின்றதா என ஆச்சரியப்பட வைக்கும் ஓர் வாகனமே இதுவாகும். இந்த கார் வெறும் 3 செகண்டுகளிலேயே 0-100 கிமீ வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடும் மணிக்கு 300 கிமீட்டருக்கும் அதிகம். இதன் மதிப்பு ரூ. 3.68 கோடிக்கும் அதிகம் ஆகும்.

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT): லெஜண்ட் சரவணா வைத்திருக்கும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட கார் மாடலாக இது இருக்கின்றது. இந்த கார் ரூ. 5.23 கோடி தொடங்கி ரூ. 8.45 கோடி வரையிலான விலையைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இதன் மைலேஜ் திறனோ லிட்டர் ஒன்றிற்கு 12.9 கிமீ மட்டுமே ஆகும். இத்தகைய மைலேஜ் குறைவான காரையே லெஜண்ட் சரவணா பயன்படுத்தி வருகின்றார்.
அஸ்டன் மார்ட்டின் டிபி11 (Aston Martin DB11): இது ஓர் இரண்டு கதவுகள் மட்டுமே கூபே ரக சூப்பர் காராகும். இதில் சொகுசு வசதிகளும் மிக மிக அதிகமாக வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஹாலிவுட் மட்டுமே இந்த காரை பார்க்க முடியும் என நினைத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் சென்னையில் பார்க்க முடியும் என கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றார் சரவணா. இதன் மதிப்பு ரூ.4 கோடியை தொடுகின்றது.

லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus): உலகின் அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட சொகுசு எஸ்யூவி ரக காராக இது இருக்கின்றது. ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினியும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் விலை ரூ. 5 கோடிக்கும் அதிகம் ஆகும். இந்தியாவில் பல நடிகர்கள் இந்த ஆடம்பர காரை பயன்படுத்தி வருகின்றனர்.
பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் (Bentley Flying Spur): லெஜண்ட் சரவணாவிடம் இந்த அரிய வகை சொகுசு காரும் பயன்பாட்டில் இருக்கின்றது. இதன் சந்தை மதிப்பு ரூ. 5.50 கோடிக்கும் அதிகம் என்பது கவனிக்கத்தகுந்தது. சிறப்பம்சங்களையும், நவீன வசதிகளையும் இந்த காரில் பென்ட்லீ வாரி வழங்கி இருக்கும். இத்தகைய ஆடம்பர காரிலேயே லெஜண்ட் சரவணா அவ்வப்போது சென்னை சாலையில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.

போர்ஷே 911 டர்போ எஸ் (Porsche 911 Turbo S): லெஜண்ட் சரவணா இந்த காரை தன்னுடைய பாண்டிச்சேரி முகவரியில் வாங்கி இருக்கின்றார். இருப்பினும், அவ்வப்போது இந்த காரில் அவர் சென்னையிலும் வலம் வருவார். இந்த காரின் அதிகபட்ச மைலேஜே 9 கிமீ மட்டும்தான். ஆனால், இதன் விலையோ ரூ. 3.34 கோடிக்கும் அதிகம். அதேநேரத்தில் இதன் டாப் ஸ்பீடோ மணிக்கு 300 கிமீ அதிகம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார்களையும், அவற்றின் விலையையும் வைத்து பார்க்கையில் உண்மையில் லெஜண்ட் சரவணா தமிழகத்தின் ராஜாவைப் போல் வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகின்றது. அவர் பயன்படுத்தும் கார்கள் பல அரண்மனையையே மிஞ்சும் வசதியைக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









