3-இல் ஒருத்தர் வாங்கும் மஹிந்திரா கார் இதுதான்!! நாளுக்கு நாள் செம்ம டிமாண்ட்

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் தவிர்க்க முடியாத முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். குறிப்பாக எஸ்யூவி கார்கள் விற்பனையில் கொடிக்கட்டி பறந்துவரும் இந்த நிறுவனத்தில் இருந்து கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் எத்தனை கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, ஒவ்வொரு மஹிந்திரா காரும் எத்தனை யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன என்பது தெரியவந்துள்ளது. அதன்படி பார்க்கும்போது, கடந்த அக்டோபர் மாதத்தில் மஹிந்திராவில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தை பிடித்திருப்பது, ஸ்கார்பியோ (Scorpio) ஆகும்.

scorpio most sold mahindra car

கடந்த சில வருடங்களாக மஹிந்திராவின் சிறந்த விற்பனை காராக பொலிரோ இருந்துவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மஹிந்திராவில் இருந்து ஸ்கார்பியோ கார்களை மக்கள் அதிகமாக வாங்க ஆரம்பித்துள்ளனர். இதனால், பொலிரோ 2வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. முதலிடத்தை பிடித்திருக்கும் ஸ்கார்பியோ கடந்த மாதத்தில் மொத்தம் 13,578 யூனிட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

ஆனால், 2022ஆம் ஆண்டின் இதே அக்டோபர் மாதத்தில் வெறும் 7,438 ஸ்கார்பியோ கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. மஹிந்திரா நிறுவனத்தை தேடிவரும் வாடிக்கையாளர்களுள் 3இல் ஒருவர் ஸ்கார்பியோ காரை தேர்வு செய்கின்றனர். இந்திய மார்க்கெட்டில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் மொத்தம் 2 விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

scorpio most sold mahindra car

ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என்பன அவை ஆகும். இவை இரண்டையும் கடந்த 2022ஆம் ஆண்டில்தான் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதன் பின்னரே, ஸ்கார்பியோ கார்களின் விற்பனை அதிகரிக்க துவங்கியது. 2வது இடத்தில் உள்ள மஹிந்திரா பொலிரோ கார்கள் இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 9,647 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

ஆனால், 2022 அக்டோபரில் 8,772 பொலிரோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 3வது இடத்தில் உள்ள எக்ஸ்யூவி700 கிட்டத்தட்ட பொலிரோ கார்கள் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கையில், கடந்த மாதத்தில் மஹிந்திரா நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. எக்ஸ்யூவி700 கார்கள் கடந்த மாதத்தில் 9,297 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

scorpio most sold mahindra car

பொலிரோவை காட்டிலும் வெறும் 350 எக்ஸ்யூவி700 கார்கள் மட்டுமே கடந்த மாதத்தில் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2022 அக்டோபரில் வெறும் 5,815 எக்ஸ்யூவி700 கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. இந்த வகையில், 2022 அக்டோபரை காட்டிலும் கடந்த மாதத்தில் 3,482 எக்ஸ்யூவி700 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

4வது மற்றும் 5வது இடங்களில் தார் மற்றும் எக்ஸ்யூவி300 கார்கள் உள்ளன. இவை இரண்டின் கடந்த அக்டோபர் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 5,593 மற்றும் 4,865 ஆகும். இதில் தார் வாகனத்தின் விற்பனை 2022 அக்டோபரை காட்டிலும் 52.56% அதிகரித்துள்ள நிலையில், எக்ஸ்யூவி300 சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரின் விற்பனை 22.56% குறைந்துள்ளது. இவை இல்லாமல், எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் (639) மற்றும் மராஸ்ஸோ (89) கார்களும் மஹிந்திரா பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன.

scorpio most sold mahindra car

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், வாடிக்கையாளர்கள் அதிக பேர் தேடிச் செல்லும் தவிர்க்க முடியாத கார் நிறுவனமாக மஹிந்திரா ஒவ்வொரு மாதமும் வளர்ச்சிக் கண்டு வருகிறது. எந்த அளவிற்கு என்றால், 2022 அக்டோபரை காட்டிலும் கடந்த அக்டோபர் மாதத்தில் சுமார் 11,522 கார்களை கூடுதலாக இந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 14, 2023, 22:19 [IST]
English summary
Scorpio most sold mahindra car in 2023 october check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X