வாழ்க்கையில் முதல் முறையா எலெக்ட்ரிக் கார் வாங்கிய பிரபல நடிகர்! இனி சேல்ஸ் எங்கயோ போக போகுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5). இது ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில்தான் (2023 Auto Expo), ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது.

இன்னும் ஒரு ஆண்டு கூட முழுமையாக முடிவடையாத நிலையில், 1,000 யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் சமீபத்தில் எட்டியது. இந்த செய்தியை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனடியாக வழங்கியது என்பது இங்கே நினைவு கூறதக்கது.

Hyundai Ioniq 5

இந்த சூழலில் தற்போது மற்றொரு முக்கியமான விற்பனை மைல்கல்லை ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் தற்போது கடந்துள்ளது. 1,100 யூனிட்கள் விற்பனை என்பதுதான் அந்த மைல்கல். மேற்கொண்டு 100 கார்கள் மட்டுமே அதிகமாக விற்பனையாகி இருக்கும்போது, இதில் என்ன ஸ்பெஷல் இருக்கிறது? என நீங்கள் நினைப்பது புரிகிறது.

ஸ்பெஷல் இருக்கிறது. ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் 1,100-வது யூனிட்டை டெலிவரி பெற்றிருப்பவர் ஷாருக்கான் (Shah Rukh Khan) ஆவார். பிரபல பாலிவுட் நடிகரான (Bollywood Actor) ஷாருக்கானுக்கு அறிமுகமே தேவையில்லை. அந்த அளவிற்கு அனைவர் மத்தியிலும் அவர் பிரபலம்.

Shah Rukh Khan Takes Delivery Of Hyundai Ioniq 5

இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. மற்ற பாலிவுட் நடிகர்களை போலவே, ஷாருக்கானின் கார் கலெக்ஸனும் (Car Collection) மிகவும் பெரியது. ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் (Rolls Royce Cullinan Black Badge) மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் ட்ராப்ஹெட் கூபே (Rolls Royce Phantom Drophead Coupe) போன்ற கார்கள் எல்லாம் ஷாருக்கானிடம் உள்ளன.

இவை மட்டுமல்லாது, பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT) மற்றும் பிஎம்டபிள்யூ ஐ8 (BMW i8) போன்ற கார்களும் ஷாருக்கானிடம் இருக்கின்றன. ஆனால் ஷாருக்கானிடம் ஒரு எலெக்ட்ரிக் கார் கூட இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது அந்த குறை நிவர்த்தியாகியுள்ளது. ஆம், இதுதான் ஷாருக்கானின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில், 72.6 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 631 கிலோ மீட்டர் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் (Range) ஆகும்.

350kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், இந்த பேட்டரியை வெறும் 18 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் நிரப்பி விட முடியும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலை (Price) 45.95 லட்ச ரூபாய் மட்டுமே.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஷாருக்கான் டெலிவரி எடுத்திருப்பதன் மூலம், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் பிரபலம் வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும் என நாங்கள் கருதுகிறோம். இதன் காரணமாக ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விற்பனை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, December 4, 2023, 13:48 [IST]
English summary
Shah rukh khan takes delivery of hyundai ioniq 5 electric car details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+