Shahrukh Khan Rolls Royce காரை சொந்தமாக வாங்கினாரா? விலையை கேட்டா உங்களுக்கு மயக்கமே வந்துடும்!
பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் இந்தியில் பிரபலமான நடிகர். இவர் சமீபத்தில் நடித்த பதான் திரைப்படம் ரூ1000 கோடியை வசூலித்து பிரம்மாண்ட சாதனையைப் படைத்தது. ஷாரூக்கான் சமீபத்தில் ரூ10 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கல்லீனன் பிளாக் பேட்ஜ் காரை சொந்தமாக வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோல்ஸ்ராய்ஸ் கல்லீனன் பிளாக்பேட்ஜ் கார் நடிகர் ஷாரூக்கான் வீட்டிற்குச் சென்ற வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் உள்ள கார் ஷாரூக்கான் கார்களின் எண்ணான 555 என்ற எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது.அவரது கார்கள் எல்லாம் இந்த எண்ணில்தான் பதிவு செய்யப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

இந்த கார் மும்பையில் உள்ள அவரது மன்னால் வீட்டின் உள்ள சென்ற வீடியோவும் வைரலாக பரவி வருவதால் இந்த காரை ஷாரூக்கான சொந்தமாக வாங்கியிருக்கலாம் என் பேச்சு பரவலாக நிலவி வருகிறது. ஆனால் இதை அவர் தரப்பிலிருந்து உறுதியாக எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.
இந்த ரோல்ஸ்ராய்ஸ் கல்லீனன் காரை பொருத்தவரை இந்தியாவில் ரூ8.20 கோடி என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனையாகிறது. இதில் சில பெர்னலைஸ்களை செய்யும் ஆப்ஷனையும் வழங்குகிறது. அப்படிச் செய்தால் இதன் விலை ரூ10 கோடி வரை செல்லும் வாய்ப்பும் உள்ளது.

நடிகர் ஷாரூக்கான் பதான் திரைப்பட வெற்றிக்குப் பிறகு அதிக விலை கொண்ட பொருட்களை வாங்கி வருவதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. அதன்படி இவர் சமீபத்தில் ரூ5 கோடி மதிப்பிலான வாட்ச் ஒன்றை பதான் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு அணிந்தது வந்தது பெறும் பேசு பொருளானது.
இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் ஷாரூக்கான் தனது ட்விட்டர் பதிவில் ஒரு ரசிகர் எழுப்பிய கேள்விக்கு தன்னிடம் ஹூண்டாய் தவிர வேறு எந்த விதமான விலையுயர்ந்த காரும் இல்லை எனக் கூறியிருந்தார். அப்பொழுது அவரிடம் உள்ள கார் பட்டியல் என்று வெளியான செய்திகள் எல்லாம் பொய்யானவை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
நடிகர் ஷாரூக்கான் ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிட்டராக இருக்கிறார். அவரது பெயரில் ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் இருக்கிறது. இந்த காரை ஷாரூக்கான் வாங்கியிருந்தால் அவரது குடும்பத்தினரின் பெயரில் வாங்கியிருக்கத்தான் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அவர் பெயரில் இந்த காரை வாங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு தான்.
இந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லீனன் பிளாக் பேட்ஜ் காரை ஷாரூக்கான் வாங்கியிருந்தால் இந்த காரை வாங்கிய இந்தியாவின் 3வது நபர் இவர் தான். ஏற்கனவே ஐதராபாத்தைச் சேர்ந்த நசீர்கான், மற்றும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் இந்த காரை வைத்திருக்கின்றனர்.
ரோல்ஸ்ராய்ஸ் கல்லீனன் காரை பொருத்தவரை டார்க் க்ரோம் நிறத்தில் இந்த காரின் ஸ்பிரிட் ஆஃப் எஸ்டெஸி வழங்கப்பட்டுள்ளது. டபுள் ஆர் கொண்ட கருப்பு மற்றும் சில்வர் நிற முத்திரை காரின் முன்,பின்பக்கங்களில் பொருத்தப்பட்டிருக்கும். இது போக இந்த காரில் 22 இன்ச் ஃபோர்ஜ்டு அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கல்லீனன் பிளாக் பேட்ஜ் காரை பொருத்தவரை 6.75 லிட்டர் ட்வின் டர்போ வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இது 600 எச்பி பவரையும், 900 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 4 வீலுக்கும் பவர் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








