ஜாகுவார் காரை வாங்கிய ஷாலுமா.. காரோட விலையை கேட்டு தூக்கி வாரி போட்ருச்சு! 'ஓ இப்படிதான் காரை வாங்கினாங்களா'..

முன்னணி பின்னணி நடிகைகளில் ஒருவரே ஷாலு ஷம்மு. இவரே இளைஞர்கள் பலரின் கனவு வாகனமாக இருக்கும் ஜாகுவார் சொகுசு காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் வாங்கி இருக்கும் காரின் விலை மற்றும் அதன் சிறப்புகள் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்க உள்ளோம், வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பிரபல முன்னணி பின்னணி நடிகைகளில் ஒருவராக ஷாலு ஷம்மு இருந்து வருகின்றார். இவரே தற்போது இந்தியாவின் விலையுயர்ந்த கார் மாடல்களில் ஒன்றான ஜாகுவார் எஃப் பேஸ் சொகுசு காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை கேட்டு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் தற்போது ஆடிப் போயிருக்கின்றது.

Shalu shamu buys jaguar f pace

இதற்கு காரின் உயரிய விலை காரணமாக உள்ளது. ஷாலு ஷம்மு வாங்கி இருப்பது ஜாகுவார் எஃப் பேஸ் மாடலின் எஸ்விஆர் தேர்வு என யூகிக்கப்படுகின்றது. ஷாலு ஷம்மு பகிர்ந்திருக்கும் படத்தை வைத்தே இதை நாங்கள் உறுதி செய்திருக்கின்றோம். இந்த கார் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 1.51 கோடிக்கும் அதிகம் ஆகும்.

ஆனால், ஆன்-ரோடில் இதன் விலை மிக மிக அதிகமாக இருக்கும். இத்தகைய மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரையே பெரிய அளவில் மார்க்கெட் இல்லாத நிலையில் ஷாலு ஷம்மு தற்போது வாங்கி இருக்கின்றார். கடந்த காலங்களில்கூட ஷாலு ஷம்மு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Shaluma

2013 ஆம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வாயிலாகவே ஷாலு ஷம்மு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகினார். இதற்கு அடுத்தபடியாக 2015இல் வெளியாகிய தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருட்டு பயலே இரண்டாம் பாகம், ரேக்கா, மிஸ்டர் லோக்கல் மற்றும் இரண்டாம் குத்து உள்ளிட்ட படங்களிலும் சைடு கேரக்டர்களில் அவர் நடித்திருப்பார்.

ஆனால், இவர் நடித்த பெரும்பாலான படங்கள் அட்டு ஃபிளாப் ஆகியவை ஆகும். இதனாலேயோ என்னமோ இவருக்கு தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆகையால், தற்போது இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் யுட்யூப் வீடியோக்களில் அதிக கவனத்தைச் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையிலேயே அவர் ஜாகுவார் சொகுசு காரை வாங்கி இருக்கின்றார்.

Shalu shamu with jaguar f pace luxury car

இவரின் இந்த விலையுயர்ந்த கார் கொள்முதலுக்கு இன்ஸ்டா மற்றும் யுட்யூப்-இல் இருந்து ஈட்டப்பட்ட வருமானம் காரணமாக இருக்கலாம் என யூகிக்க முடிகின்றது. எச்எஃப் கார்ஸ் எனும் நிறுவனத்தின் வாயிலாகவே ஷாலு ஷம்மு இந்த காரை வாங்கி இருக்கின்றார். இந்த நிறுவனம் செகண்ட் ஹேண்ட் சொகுசு கார்களை விற்பனைச் செய்யும் நிறுவனம் ஆகும்.

ஆகையால், ஷாலு ஷம்மு வாங்கி இருப்பதும் செகண்ட் ஹேண்ட் காராகவே இருக்கும் என யூகிக்கப்படுகின்றது. இதனாலேயே அவரால் ஜாகுவார் எஃப் பேஸ் சொகுசு காரை வாங்க முடிந்திருக்கின்றது. யூஸ்டு மார்க்கெட்டில் இந்த காரை மிகவும் குறைவான விலையில் வாங்கிக் கொள்ள முடியும்.

புதியதைக் காட்டிலும் பல லட்ச ரூபாய் குறைவான விலையில் ஜாகுவார் எஃப் பேஸ் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக தாராளமான சொகுசு வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காரின் விலை மிக மிக அதிகமாக இருக்கின்றது. இருக்கை மற்றும் ஸ்டியரிங் வீலில்கூட லெதரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

அவை பிரீமியம் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். இருக்கைகளை குளிர்ச்சி மற்றும் சூடாக்கிக் கொள்ளும் வசதி, இன்டெராக்டீவ் டிரைவர் திரை, மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் சார்ஜர், பிவி ப்ரோ வசதிக் கொண்ட 11.4 அங்குல தொடுதிரை, ஒயர்லெஸ் கார் ப்ளே மற்றும் ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஜாகுவார் ரிமோக் செயலி என எக்கசக்க அம்சங்களஅ ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர கூடுதல் தொழில்நுட்ப வசதிகளாக ஸ்டியரிங் அசிஸ்ட் வசதி உடன் கூடிய அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் கொல்லிசன் மானிட்டர், 3டி பார்வை திறன் கொண்ட கேமிரா, பிளைண்ட் ஸ்பாட்டுகளில் வழிநடத்தும் வசதி, பின் பக்கத்தில் உள்ள டிராஃபிக்கை கண்கானிக்கும் வசதி, லேன் கீப் அசிஸ்ட், டிராஃபிக் சைன்களைக் கண்டு அதுகுறித்து எச்சரிக்கையை வழங்கும் அம்சம் ஆகியவையும் இந்த சொகுசு காரில் இடம் பெற்றிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

இத்தகைய பன்முக ஆடம்பர வசதிகளைக் கொண்ட காரையே ஷாலு ஷம்மு தற்போது வாங்கி இருக்கின்றார். இந்த காரால் அதிக வேகத்தில் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மணிக்கு 286 கிமீ வேகத்தில் ஜாகுவார் எஃப் பேஸால் பயணிக்க முடியும். மேலும் வெறும் 4.0 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து அதனால் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஷாலு ஷம்முவிற்கு தற்போது பட வாய்ப்புகள் வேண்டுமானால் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு சமூக வலைதளங்களில் மிகப் பெரிய ஃபேன் பேஸ் உருவாகி இருக்கின்றது. ஆகையால், யுட்யூப் மற்றும் இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் வாயிலாக அவருக்கு வருமானம் கொட்டிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருமானத்தை வைத்தே முன்னணி நடிகர்களுக்கு இணையான ஆடம்பர காரை அவர் தற்போது வாங்கி இருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 29, 2023, 12:10 [IST]
English summary
Shalu shamu buys jaguar f pace luxury car from hf cars
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X