என்னங்க இந்த ஷிகர் தவான் ஒரு கருப்பு நிற காருக்காக பல கோடி ரூபாயை வாரி கொடுத்திருக்காரு!

ஷிகர் தவான் மிக அதிக விலைக் கொடுத்து புத்தம் புதிய கருப்பு நிற காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் என்ன காரை வாங்கி இருக்கின்றார்?, அவர் வாங்கி இருக்கும் காரின் உண்மை விலை என்ன?, என்பது உள்ளிட்ட அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான் மிகப் பெரிய கார் காதலர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த நபரிடத்தில் எண்ணற்ற விலை உயர்ந்த சொகுசு மற்றும் அரிய வகை கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

Shikhar dhawan range rover

இந்த நிலையில் அவர் தன்னிடத்தில் சொகுசு கார்களின் வரிசையில் புதிதாக மற்றுமொரு அதிக விலைக் கொண்ட புதிய காரை இணைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக ஷிகர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஓர் ரீல்ஸ் வீடியோவை போட்டிருக்கின்றார்.

அதில் கருப்பு நிற, மிகவும் பிரமாண்ட மற்றும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட கருப்பு நிற காரில் இருந்து இறங்குவதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த காரே அவர் வாங்கிய புதிய சொகுசு காராகும். இந்த கருப்பு நிற காரின் மதிப்பு ரூ. 4 கோடிக்கும் அதிகம் ஆகும்.

Shikhar dhawan

இது லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ஜ் ரோவர் ஆட்டோ-பயோகிராஃபி கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலுக்கு இந்திய பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக பாலிவுட் திரை நட்சத்திரங்கள் மத்தியில் மிக மிக அமோகமான டிமாண்ட் இந்த கார் மாடலுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய அதிகம் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடலையே ஷிகர் தவான் வாங்கி இருக்கின்றார். ஷிகர் தவான் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவரின் ஆட்டோ-பயோகிராஃபியின் எந்த வேரியண்டை வாங்கி இருக்கின்றார் என்கிற துள்ளியமான விபரம் தெரியவில்லை. அதேவேலையில் அவர் வாங்கி இருக்கும் இந்த காரின் ஆரம்ப விலையே ரூ. 3.5 கோடி ஆகும்.

Range rover

இதன் உயர்நிலை வேரியண்ட் ரூ. 4 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இத்தகைய உயரிய விலையைக் கொடுத்தே அவர் சொகுசு காரை வாங்கி இருக்கின்றார். அழகிலும், சொகுசு வசதியிலும் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தக் கூடிய ஓர் சொகுசு காராக இது இருக்கின்றது.

இதில் கொடுத்திருக்கும் ஹெட்லேம்பை ரசிக்கவே ஓர் நாள் போதாது என கூறலாம். அந்த அளவிற்கு மிகவும் நேர்த்தியான மற்றும் கண்களைக் கவரக் கூடிய எல்இடி லைட்டுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் அழகிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக பகல் நேரத்தில் ஒளிரக் கூடிய லைட்டுகளும் ஹெட்லைட்டுடன் சேர்த்து வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஹைட்லைட் மட்டுமில்லைங்க காரின் முகப்பு பகுதி, பக்கவாட்டு பகுதி மற்றும் பின் பகுதி என ஒட்டுமொத்த வெளிப்புறமும் நம்மைக் கவரும் வகையிலேயே உள்ளது. இதன் காரணத்தினாலேயே இந்தி திரை நட்சத்திரங்களின் மிகவும் பிரியமான கார் மாடலாக ரேஞ்ஜ் ரோவர் ஆட்டோபயோகிராஃபி உள்ளது.

இதேபோல், இந்த காரின் கேபினும் நம்மை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் வகையிலேயே இருக்கின்றது. குறிப்பாக வேற லெவல் தொழில்நுட்ப வசதிகளை இந்த காரின் கேபின் கொண்டிருக்கின்றது. மெரிடியனின் 35 ஸ்பீக்கர்கள் அடங்கிய சவுண்ட் சிஸ்டம், ஆக்டீவ் நாய்ஸ் கன்ட்ரோல் வசதி என எக்கசக்க வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

கேபினுக்குள் சின்ன சத்தம்கூட வராது. டயர், எஞ்ஜின் மற்றும் மற்ற வாகனங்களின் சத்தம் என எதுவுமே வராது. இதுதவிர இன்னும் பல சிறப்பு வசதிகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், ஃப்ளோட்டி ரக திரை டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெரிய அளவில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இது 13.1 அங்குல திரை ஆகும். இத்துடன், ஹெட்ஸ்-அப் திரை, மல்டி ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், 4 ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல், பின் இருக்கையாளர்களுக்கு என தனி பொழுதுபோக்கு திரை என ஏராளமான வசதிகள் ரேஞ்ஜ் ரோவர் ஆட்டோபயோகிராஃபி காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

எஞ்ஜினை பொருத்த வரை 4.4 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். பெட்ரோல் மோட்டார் 523 பிஎஸ் மற்றும் 750 என்எம் டார்க்கையும், டீசல் மோட்டார் 346 பிஎஸ் பவரையும், 700 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஷிகர் தவான் இடத்தில் இந்த கார் மட்டுமில்லைங்க இன்னும் பல சொகுசு கார்கள் இருக்கின்றன. அந்தவகையில், பிஎம்டபிள்யூ எம்8 கார்கூட அவரிடத்தில் இடம் இருக்கின்றது. இது ஓர் அதி திறனை வெளிப்படுத்தக் கூடிய கார் ஆகும். இதனால், 592 பிஎச்பி பவர் மற்றும் 750 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதனால் வெறும் 0-100 கிமீ வேகத்தை 3.3 செகண்டுகளில் எட்ட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 22, 2023, 16:10 [IST]
English summary
Shikhar dhawan buys range rover autobiography luxury car worth rs 4 crore
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X