இன்னோவா ஹைகிராஸை வாங்கலாமா இல்ல மாருதி இன்விக்டோ வர வரைக்கும் காத்திருக்கலாமா?.. ரெண்டுல எதை தேர்வு செய்யலாம்!

இந்தியாவின் எம்பிவி கார்கள் மார்கெட்டில் விற்பனையில் ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டிருக்கும் கார் மாடலே டொயோட்டா இன்னோவா ஹாகிராஸ். இந்த கார் மாடலுக்கு போட்டியாக இந்திய எம்பிவி கார்கள் சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் இன்விக்டோ எனும் புதிய கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இந்த காருக்கான அறிமுக நாளாக வரும் ஜூலை 5ஆம் தேதியை மாருதி சுஸுகி குறித்து வைத்து உள்ளது. ஆகையால், இந்த நாளுக்காக இந்தியர்கள் பலர், குறிப்பாக, மாருதி சுஸுகி கார் விரும்பிகள் எக்கச்சக்கமானோர் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே புக்கிங் பணிகள்கூட இந்த காருக்கு நம் நாட்டில் தொடங்கிவிட்டன.

Maruti invicto vs toyota innova hycross

ரூ. 25 ஆயிரத்தை முன் பணமாக கட்டினால் போதும் அக்காரை நம்மால் புக் செய்துக் கொள்ள முடியும். இதன் டெலிவரி பணிகளும் வெகு விரைவிலேயே தொடங்கப்பட உள்ளன. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள், அந்த கார் ஜூலை மாத இறுதிக்குள் தொடங்கிவிடலாம் என தெரிவிக்கின்றன.

இந்த நிலை, பலரின் மனதில் ஓர் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதாவது, காத்திருந்து இன்விக்டோ காரை வாங்கிக்கலாமா?, அல்லது, ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கும் டொயோட்டா இன்னவோ ஹைகிராஸை வாங்கலாமா என்கிற சந்தேகத்திலேயே பலர் திரிந்துக் கொண்டிருக்கின்றனர்.

Toyota innova hycross front view

இந்த குழப்பத்தை போக்கும் விதமாகவும், எந்த காரை தேர்வு செய்யலாம் என்பதற்கான தெளிவை ஏற்படுத்தும் விதமாகவே இந்த பதிவை நாங்கள் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.. மாருதி சுஸுகி இன்விக்டோ மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் இரண்டும் வெவ்வேறு கார்கள் அல்ல. இரண்டும் ஒன்றே என்பதை நாம் இங்கு புரிந்துக் கொள்ள வேண்டும்.

மாருதி சுஸுகி-டொயோட்டா இரண்டும் கூட்டணியை தொடங்கி இருக்கின்றன என்பது நம்மில் பலர் அறிந்த ஒன்றே. இதை அறியாதவர்கள் இப்போது நீங்கள் அவர்கள் இருவரும் கூட்டாளிகள் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். இந்த கூட்டணியின் அடிப்படையிலேயே தற்போது இந்திய சந்தையில் இன்னோவா ஹைகிராஸ் என்கிற பெயரில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் எம்பிவி காரை மாருதி அதன் பிராண்டின்கீழ் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

Toyota innova hycross rear profile

இதுபோன்று ரீபேட்ஜ் செய்யப்பட்ட கார் இந்தியாவில் விற்பனைக்கு வருவது புதிது அல்ல. ஏற்கனவே டொயோட்டா நிறுவனம், மாருதியின் தயாரிப்புகள் சிலவற்றை ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு வழங்கியது, வழங்கிக் கொண்டும் இருக்கின்றது. அந்தவகையில், பலினோவை கிளான்ஸா என்கிற பெயரிலும், விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவியை அர்பன் க்ரூஸர் என்கிற பெயரிலும் ரீபேட்ஜ் செய்து அது விற்பனைக்கு வழங்கியது.

இதில், இப்போது கிளான்ஸாவை மட்டுமே டொயோட்டா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி இரு நிறுவனங்களும் இணைந்து புதிய காரை உருவாக்கி அந்தந்த நிறுவனங்களுக்கு ஏற்ப கணிசமான மாற்றங்களை மட்டும் செய்து விற்பனைக்கு வழங்கிக் கொண்டும் இருக்கின்றன. அப்படியான கார் மாடலே மாருதியின் கிராண்ட் விட்டாராவும், டொயோட்டாவின் அர்பன் க்ரூஸர் ஹைரைடரும் ஆகும்.

Maruti suzuki invicto headlight

இந்த கார்களை போலவே இன்னோவா ஹைகிராஸ் ரீபேட்ஜ் செய்யப்பட உள்ளது. ஆனால், இம்முறை டொயோட்டாவின் தயாரிப்பை மாருதி சுஸுகி ரீபேட்ஜ் செய்து இன்விக்டோ என்கிற பெயரில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இன்னோவாவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அதே பிளாட்பாரத்தை பயன்படுத்தியே இன்விக்டோவும் தயாரிக்கப்படுகின்றது.

டிஎன்ஜிஏ பிளாட்பாரமே அந்த தளம் ஆகும். ஒரே பிளாட்பாரம் என்பதால் அளவிலும், முக்கிய சிறப்பு வசதிகளிலும் இரு கார்களும் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆனால், வெளிப்புற தோற்றத்திலும், வேறு சில குறிப்பிட்ட விஷயங்களிலும் இன்விக்டோ லேசான மாற்றங்களைக் கொண்டிருக்கும். இன்னோவா ஹைகிராஸ் இடம் இருந்து மாறுபட்டு காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக புதிய அம்சங்கள் சில சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

Maruti suzuki invicto badge

அந்தவகையில், புதிய கிரில், லைட் செட்-அப் உள்ளிட்டவை இன்விக்டோவில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க, இந்த காரின் பின் பக்கமும் லேசாக மாற்றப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டெயில் லைட் மற்றும் பூட்லிட் என பல வித்தியாசமான ஸ்டைலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

தொடர்ந்து, டூயல் டோன் அலாய் வீல்களும் இந்த காரில் இடம் பெற இருக்கின்றன. இவையே இன்னோவா ஹைகிராஸிடம் இருந்து இன்விக்டோவை மாறுபட்ட ஸ்டைலில் காட்சியளிக்க வைக்க இருக்கின்றன. இதுதவிர பலதரப்பட்ட பிரீமியம் அம்சங்களையும் இந்த காரில் மாருதி சுஸுகி வழங்க இருக்கின்றது.

அந்தவகையில், ஹெட்ஸ்-அப் திரை, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, வண்ண மயமான உட்பக்கம், தரமான இருக்கைகள் மற்றும் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை எல்லாம் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளயாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், சொகுசான பயண அனுபவத்தை பெறும் விதமாக காற்றோட்ட வசதிக் கொண்ட இருக்கைகளை வழங்க இருக்கின்றது.

இதன் வாயிலாக சிறப்பு வசதிகள் மற்றும் பிரீமியம் அம்சங்களில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸையே தூக்கி சாப்பிடும் வகையில் இன்விக்டோ இருக்கும் என தெளிவாக தெரிகின்றது. இதுமட்டுமில்லைங்க விலையிலும் இந்த கார் இன்னோவா ஹைகிராஸைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும் என கூறப்படுகின்றது. இன்னோவா ஹைகிராஸின் ஆரம்ப விலை ரூ. 21.66 லட்சம் ஆகும். ஆனால் இன்விக்டோ ரூ. 20 லட்சத்துக்கும் குறைவாகவே விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே வழங்கி இருக்கும் தகவல்கள் உங்களுக்கு ஓர் தெளிவான பார்வையை வழங்கி இருக்கும் என நம்புகின்றோம். விலை மற்றும் சிறப்பு வசதிகளில் மிக சிறந்த தயாரிப்பாக இன்விக்டோ எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், கொஞ்சம் நாள் காத்திருந்து எந்த காரை வாங்கலாம் என திட்டமிடுவதே நல்லதாக இருக்கும். இன்விக்டோ வருகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 1, 2023, 13:10 [IST]
English summary
Should we buy innova hycross or wait for maruti invicto here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X