ஆடி காருக்கு பேன்ஸி நம்பர் வாங்க ரூ28 லட்சம் செலவு செய்த பாடகர்!
இந்திய ராப் இசை பாடகர் ஹனிசிங் தனது ஆடி ஆர்8 காருக்கு பேன்ஸி நம்பர் பிளேட்டை வாங்க ரூ28 லட்சம் செலவு செய்ததாக ஒரு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.
இந்தியாவில் பிரபலமான பாடகர் ஹனி சிங், இவர் பாடிய பல பாடல்கள் இந்தியா முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இவர் தமிழில் கூட இசையமைப்பாளர் அனிரூத் இசையில் எதிர்நீச்சல் என்ற திரைப்படத்திற்குப் பாடல் எல்லாம் படியிருந்தார். அந்த பாடலும் மிகப்பெரிய அளவில் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. இவர் சமீபத்தில் தனது கேரியருக்கு சிறிது காலம் பிரேக் எடுத்துவிட்டு சமீபத்தில் புதிய ஆல்பம் ஒன்றை வெளியிட்டார்.

ரூ28 லட்சம் நம்பர் பிளேட்!
அந்த ஆல்பத்திற்கான புரோமோஷன் வீடியோ ஒன்று சமீபத்தில் யூடியூபில் வெளியானது. அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயம் சமீபத்தில் வைரலாக பரவி வருகிறது. அவர் அந்த வீடியோவில் தனது ஆடி ஆர்8 சூப்பர் காருக்கு ஃபேன்ஸி நம்பர் பிளேட் வாங்க ரூ28 லட்சம் செலவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேஷபிள் இந்தியா என்ற யூடியூப் சேனில் இந்த வீடியோ வெளியாகியிருந்தது. பாலிவுட்டில் உள்ள பல நடிகர், நடிகைகள், பாடகர்களைப் போல ஹனி சிங்கும் விலையுயர்ந்த கார்களை வாங்கி கலெக்ஷன் செய்வதில் ஆர்வம் கொண்டவர். இவரிடம் ஆடி க்யூ5, க்யூ7, ஜாக்குவார் எக்ஸ்எஃப், உள்ளிட்ட ஏகப்பட்ட கார்கள் அவரது கராஜில் இருக்கிறது. இதில் ஒரு முக்கியமான கார் தான் ஆடி ஆர்8 கார்.
இப்ப விற்பனையில்லை!
ஆடி நிறுவனம் இந்த ஆர்8 காரை தற்போது தயாரிப்பதில்லை. இந்த கார் இந்திய மார்கெட்டில் இருந்த போது இவர் இந்த காரை வாங்கினார். இந்த கார் 160 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் வரும் கார். இந்த காரின் சீட்டிற்கு முன்புறமும் பின்புறமும் ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட்கள் இருக்கிறது. இந்த கார் ஆடி நிறுவனத்திற்கு ஒரு ஹாலோ காராக இருந்தது. இந்நிலையில் 2019ம் ஆண்டு ஆடி நிறுவனம் இந்த காரை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டது.
இந்த ஆடி ஆர்8 கார் இந்தியாவிலிருந்து வெளியேறும் போது ரூ2.30 கோடி என்ற விலையில் விற்பனையாகிவந்தது. இந்த காரை வாங்கிய வெகுசிலர்களில் ஹனி சிங்கும் ஒருவர். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்று ஒரு காலத்தில் விலை உயர்ந்த கார்கள் மற்றும் எஸ்யூவிகளை வாங்குவதில் இவருக்கு அதிக ஆர்வம் இருந்ததாகவும் தற்போது அது குறைந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இவர் தனது ஆடி ஆர்8 காருக்கு ஃபேன்ஸியான நம்பரை வாங்க அதிக பணம் செலவு செய்தது தெரியவந்துள்ளது. இவர் தனது ஆர் 8 காருக்கு தற்போது MH 04 AR 8 என்ற காரை வாங்கியுள்ளார். இந்த நம்பரை வாங்க அவர் ரூ28 லட்சம் செலவு செய்ததாகக் கூறியுள்ளார். காரின் பெயர் ஆர்8 என்பதால் வாகனத்தின் எண்ணும் R8 ஆக இருக்க வேண்டும் என்பதால் இந்த காரை மகாராஷ்டிராவில் பதிவு செய்துள்ளார்.
காரை விற்றுவிட்டார்!
இவருக்குச் சமீபத்தில் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் தன்னிடம் இருந்த பல கார்களை விற்பனை செய்துவிட்டார். அதன் பிறகு அவர் கார் ஓட்டுவதையும் விரும்புவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இவருக்குச் சமீபத்தில் பைபோலார் டிஸ் ஆர்டர் என்ற பிரச்சனை இருந்தது. இதற்காக இவர் 5 ஆண்டுகள் சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஆடி ஆர்8 காரை பொருத்தவரை முன்னாள் கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் இந்த காரை வைத்திருந்தார்.


Click it and Unblock the Notifications