நண்பருக்கு 80 லட்ச ரூபாய் கார் பரிசு! இவர்தான் குடுத்தாரா! அதான் அவங்க கைல எல்லாம் காசு விளையாடுது!

தாய், தந்தையை தேர்ந்து எடுக்கும் உரிமை நம்மிடம் இல்லை. ஆனால் நல்ல நண்பர்களை தேர்ந்து எடுத்து கொள்ளும் வாய்ப்பு நம்மிடம் இருக்கிறது. அப்படி நல்ல நண்பர்கள் அமைந்து விட்டால், வாழ்க்கையில் நாம் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இந்த சூழலில் பிரபல பாடகர் ஒருவர் தனது நண்பருக்கு மிகவும் விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பாலிவுட் பாடகரான மில்கா சிங்தான் அந்த நபர். தனது குழந்தை பருவ நண்பர் ஒருவருக்கு, மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 250டி (Mercedes Benz GLE 250d) காரை அவர் பரிசாக வழங்கியுள்ளார்.

நண்பருக்கு 80 லட்ச ரூபாய் கார் பரிசு! இவர்தான் குடுத்தாரா! அதான் அவங்க கைல எல்லாம் காசு விளையாடுது!

எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த இந்த காரின் விலை 80 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது. தனது குழந்தை பருவ நண்பரான கன்வால்ஜீத் சிங் என்பவருக்குதான், பாடகர் மில்கா சிங் இவ்வளவு விலை உயர்ந்த பரிசை வழங்கி அசத்தியுள்ளார். இந்த புதிய காருடன் தானும், மில்கா சிங்கும் இருக்கும் புகைப்படத்தை கன்வால்ஜீத் சிங் சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளார்.

''30 வருடங்களுக்கு மேலாக நாம் ஒன்றாக இருந்து வருகிறோம். அவர் (மில்கா சிங்) வெறும் எனக்கு நண்பரோ, முதலாளியோ அல்ல. அனைத்து உறவுகளுக்கும் அப்பால் நாங்கள் சகோதரர்கள். எனக்கு மிகவும் பிடித்த காரை பரிசாக வழங்கியதற்கு நன்றி. இது மிகவும் அற்புதமாக உள்ளது'' என கன்வால்ஜீத் சிங் சமூக வலை தளங்களில் எழுதியுள்ளார்.

நண்பருக்கு 80 லட்ச ரூபாய் கார் பரிசு! இவர்தான் குடுத்தாரா! அதான் அவங்க கைல எல்லாம் காசு விளையாடுது!

இந்த பரிசை வழங்கிய மில்கா சிங், கார்களையும் மிகவும் நேசிக்க கூடியவர் ஆவார். அவரிடம் ஹம்மர் ஹெச்2 (Hummer H2) கார் ஒன்று உள்ளது. இந்த எஸ்யூவி ரக காரை மில்கா சிங் அடிக்கடி ஓட்டி வருகிறார். இந்த ஹம்மர் ஹெச்2 எஸ்யூவி காரில் மிகவும் சக்தி வாய்ந்த, 6.2 லிட்டர், வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,700 ஆர்பிஎம்மில் 393 பிஎஸ் பவரையும், 4,300 ஆர்பிஎம்மில் 415 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காரின் 4 சக்கரங்களுக்கும் இன்ஜின் சக்தி செலுத்தப்படுகிறது.

மில்கா சிங் மிகவும் பிரபலமான பாடகராக இருப்பதால்தான், இதுபோன்ற விலை உயர்ந்த கார்களை வாங்க முடிகிறது. இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களான எம்.எஸ்.டோனி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரிடமும் கூட ஹம்மர் ஹெச்2 கார் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஹம்மர் ஹெச்2 தவிர, முந்தைய தலைமுறை ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue) காரும் கூட, பாடகர் மில்கா சிங்கிடம் இருக்கிறது. இதுவும் கூட எஸ்யூவி ரகத்தை சேர்ந்ததுதான். இதன் மூலம் பாடகர் மில்கா சிங்கிற்கு எஸ்யூவி ரக கார்கள் மிகவும் பிடிக்கும் என்பது நமக்கு தெரியவருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, March 6, 2023, 17:10 [IST]
English summary
Singer mika singh mercedes benz gle 250d suv gift friend
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+