இந்தியாவில் ஸ்கோடா கார்கள் விற்பனையில் இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல!! பலர் தங்களோட முடிவ மாத்திட்டாங்க போல!
ஸ்கோடா நிறுவனம் கடந்த 2023 ஜனவரியில் இருந்து செப்டம்பர் மாதத்திற்கு உள்ளாக சுமார் 35,600 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டை விட இது அதிகமா அல்லது குறைவா என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சில வெளிநாட்டு கார் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. அதன் மூலமாக, நிறைய வருவாய்களையும், இலாபங்களையும் ஈட்டியுள்ளன. அந்த வகையில் தற்சமயம் இந்தியாவில் வரவேற்பை பெற்றுவரும் வெளிநாட்டு கார் நிறுவனம் தான் ஸ்கோடா ஆகும்.

இருப்பினும், கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்துள்ளது. எந்த அளவிற்கு கிட்டத்தட்ட 7.1% ஸ்கோடா கார்கள் இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் இந்தியாவில் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில், 2022ஆம் ஆண்டில் 38,300 கார்களை ஸ்கோடா விற்பனை செய்திருந்தது.
2022ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் (ஜனவரி - செப்டம்பர்) ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை இதுவாகும். ஆனால், இந்த 2023ஆம் வருடத்தின் முதல் 9 மாதங்களில் சற்று குறைவாக 35,600 கார்களை மட்டுமே ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. கடந்த 2022ஆம் வருடத்தில் ஸ்கோடா கார்களின் விற்பனை எண்ணிக்கை அதிகமாக இருந்ததற்கு சில காரணங்கள் உள்ளன.

அவற்றுள் முக்கிய காரணம், அந்த சமயத்தில்தான் குஷாக் எஸ்யூவி காரை ஸ்கோடா அறிமுகப்படுத்தியது. மார்க்கெட்டிற்கு புதிய கார் என்பதால், பலர் குஷாக்கை போட்டி போட்டு வாங்கினர். ஆனால், 2023 ஜனவரி - செப்டம்பரில் கிட்டத்தட்ட இந்த 9 மாதங்களில் மொத்தமாகவே 19,300 குஷாக் எஸ்யூவி கார்களை மட்டுமே ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.
குஷாக்கிற்கு அடுத்து ஸ்லாவியா செடான் கார்களை ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்துள்ளது. இந்த வருட ஜனவரி - செப்டம்பரில் மொத்தம் 14,100 ஸ்லாவியா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் விற்பனையில் இவற்றிற்கு அடுத்தே மற்ற ஸ்கோடா கார்கள் உள்ளன. கடந்த சில வருடங்களில் குஷாக், ஸ்லாவியா என சில புதிய கார்களை ஸ்கோடா அறிமுகப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கூட, வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு ஸ்பெஷல் எடிசன் கார்களை ஸ்கோடா அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு மத்தியில் ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப் என சில கார்களின் விற்பனையையும் இந்தியாவில் ஸ்கோடா நிறுத்தியுள்ளது. இதில் ஆக்டேவியா கார்களின் விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்திலும், சூப்பர்ப் கார்களின் விற்பனை மிக சமீபத்தில் கடந்த அக்டோபர் மாதத்திலும் தான் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு சில கார்களின் விற்பனையை நிறுத்தியதும் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனை குறைந்திருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆதலால், நிறுத்தப்பட்ட கார்களை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும் அல்லது அவற்றின் இடத்திற்கு வேறொரு புத்தம் புதிய காரை கொண்டுவர ஸ்கோடா நிறுவனம் திட்டமிட வேண்டிய கட்டத்திற்கு வந்துவிட்டது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


Click it and Unblock the Notifications
