இந்தியாவின் டெக்னாலஜியை காப்பியடித்த ஸ்கோடா! இதெல்லாம் மத்திய அரசு கொண்டு வந்து பல வருஷம் ஆச்சு பாஸ்!
காரிலேயே கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இல்லாமல் நேரடியாக இ-பேமென்ட் செய்யும் தொழில்நுட்பத்தை ஸ்கோடா நிறுவனம் தனது கார்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. நாம் எப்படி செல்போனில் யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்கிறோமோ அதை போல காரிலேயே நேரடியாக பணப்பரிவினை செய்ய முடியும். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் உலகிற்க்கே முன்மாதிரியாக இருக்கிறது. இன்று இந்தியாவில் உள்ள யுபிஐ என்ற தொழில்நுட்பம் உலக அளவில் பேசப்படுகிறது. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பணம் இல்லாமல் நேரடியாக ஆன்லைன் முறையில் டிஜிட்டலாக பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும். இதை செய்ய கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும்.

இந்நிலையில் ஸ்கோடா நிறுவனம் தனது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் கார்களில் இ-பேமென்ட் என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக நிறுவனம் பார்க்கோபீடியா, மாஸ்டர் கார்டு ஆகிய நிறுவனங்களுடன் சேர்ந்து புதிய தொழில்நுட்பத்தை தனது காரில் உட்பகுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் ஸ்கோடாவின் பெட்ரோல், டீசல் இன்ஜின் கார்களுக்கு மட்டுமே சர்வதேச மார்க்கெட்டில் உள்ள கார்களுக்கு பொருத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி காரில் உள்ள இன்ஃபோடெயின்மெண்ட்ஸ் ஸ்கிரீனில் இ-பேமென்ட் குறித்த ஆப்ஷன்கள் இருக்கும் எனவும் அந்த காரில் பெட்ரோல் குறையும் போது காருக்கு அருகே உள்ள பெட்ரோல் பங்கை கண்டறிந்து காரில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் டிரைவருக்கு அந்த பெட்ரோல் பங்க் குறித்த தகவலை தெரிவிக்கும். அந்த பெட்ரோல் பங்க் உள்ளே கார் சென்றவுடன் டிரைவர் அவரது காரிலேயே எவ்வளவு பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்ற எண்ணை உள்ளிட வேண்டும்.

பெட்ரோல் நிரப்பப்பட்ட பின்பு அதற்கான தொகையை கணக்கிட்டு நேரடியாக காரின் உரிமையாளர் வங்கிக் கணக்கிலிருந்து பெட்ரோல் பங்க் வங்கி கணக்கிற்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டு விடும் இந்த பரிவர்த்தனையை ஸ்கோடா காரில் உள்ள புதிய இ பேமென்ட் தொழில்நுட்பம் செய்துவிடும். இந்தியாவில் உள்ள யூபிஐ போலவே இது செயல்படும்.
ஸ்கோடா நிறுவனம் இந்த அம்சத்தை 6 ஐரோப்ப நாடுகளுக்கு மட்டும் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது அதன்படி டென்மார்க் பெல்ஜியம், ஜெர்மனி, லக்சம்பர், சுவிட்சர்லாந்து ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் இந்த தொழிற்நுட்பம் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கும் இந்த தொழில்நுட்பம் விரிவு படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நாடுகளில் எல்லாம் இந்த தொழில்நுட்பம் வெற்றி பெற்றால் விரைவில் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் ஸ்கோடா காரிலேயே இப்படியான தொழில்நுட்பம் இடம்பெற வாய்ப்புள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எந்தவித டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு எதையும் எடுத்துச் செல்ல வேண்டியது இல்லை அவர்கள் காரை கொண்டு சென்றாலே போதும். அதிலிருந்து தானாக பேமென்ட் செய்துவிட முடியும்.
ஸ்கோடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த தொழில்நுட்பம் மற்ற உலக நாடுகளை விட இந்தியாவிற்கு மிக பொருத்தமாக இருக்கும். வெறும் பெட்ரோல் பங்குகளில் மட்டுமல்லாமல் அனைத்து விதமான தேவைகளுக்கும் இந்த பேமென்ட் வசதி மூலம் பணத்தை செலுத்தலாம் என்ற விதத்தில் இது கட்டமைக்கப்பட்டால் இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பு கிடைக்கும்.
இந்தியாவில் உள்ள யுபிஐ என்ற தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து இதை கட்டமைக்க முடியும். இதனால் நீண்ட தூர பயணம் செய்யும் பயணிகள் தங்கள் கார்களில் இருந்தபடியே மோட்டல், பெட்ரோல் பங்க், முதல் சாலை ஓர வியாபாரிகள் வரை அவர்களுக்கான செலவை டிஜிட்டல் முறையில் செய்து கொள்ள முடியும். இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து வாகன தயாரிப்பு நிறுவனங்கள் யோசிக்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா நிறுவனத்தின் எந்த தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் ஏற்கனவே டிஜிட்டல் மயமாகி வரும் இந்திய பண பரிவர்த்தனை மேலும் டிஜிட்டல் மையம் ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வாகன ஓட்டிகளுக்கு இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக மாருதி நிறுவனம் தனது வாகனங்களில் இதை அறிமுகப்படுத்தும் பட்சத்தில் நிச்சயம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








