Skoda Kushaq & Slavia கார்களில் புதிய ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம்... பெயிண்ட் கலர் சூப்பரா இருக்கு!!
ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியா (Skoda Kushaq & Slavia) கார்களில் புதிய ஸ்பெஷல் எடிசன்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த புதிய ஸ்கோடா கார்களை பற்றிய முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
கார்களின் விற்பனையை அதிகரிக்க அவ்வப்போது அவற்றில் ஸ்பெஷல் எடிசன்களை அறிமுகப்படுத்த வேண்டியது கட்டாயம் ஆகிறது. அதன்படி, ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் அதன் ஸ்லாவியா மற்றும் குஷாக் கார்களில் புதிய ஸ்பெஷல் எடிசன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2021 ஜூன் மாதத்தில் முதன்முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட குஷாக்கில் தற்போது, லாவா ப்ளூ எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்லாவியா செடான் காரில் ஆண்டுநிறைவு எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஸ்லாவியா இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு 1 வருடம் நிறைவடைந்துள்ளதை நினைவுக்கூரும் விதமாக இத்தகைய எடிசனை ஸ்லாவியாவில் ஸ்கோடா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் குஷாக் லாவா ப்ளூ எடிசனின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலையில் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் குஷாக் லாவா ப்ளூ எடிசன் கார் விற்பனைக்கு கிடைக்கும். அதுவே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.19.19 லட்சம் ஆகும். மறுப்பக்கம், ஸ்லாவியா செடானின் ஆண்டுநிறைவு எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை மேனுவல் கியர்பாக்ஸ் உடன் ரூ.17.28 லட்சமாகவும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் ரூ.18.68 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

ஸ்கோடா கார்களில் லாவா ப்ளூ எடிசன்கள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கமான ஒன்றே. ஏற்கனவே ஆக்டேவியா, சூப்பர்ப் மற்றும் கோடியாக் போன்ற ஸ்கோடா கார்களில் கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் ஸ்கோடா ஆட்டோவின் மாடர்ன் கார்களாக வர்ணிக்கப்படும் குஷாக் மற்றும் ஸ்லாவியா கார்களில் இத்தகைய எடிசன் கொண்டுவரப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.
படங்களில் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் கார்களின் தோற்றத்தை பார்க்கும்போதே தெரிந்திருக்கும், குஷாக் மற்றும் ஸ்லாவியா கார்களுக்கு ஒரே மாதிரியான லாவா நீல நிற பெயிண்ட் தேர்வு புதியதாக வழங்கப்பட்டுள்ளது என்பது. ஆனால் இந்த பெயிண்ட் குஷாக்கில் அதே லாவா ப்ளூ என்ற பெயரிலும், ஸ்லாவியாவில் வித்தியாசமாக ஆண்டுநிறைவு எடிசன் என்கிற பெயரிலும் வழங்கப்பட்டுள்ளது. ஸ்லாவியாவின் வேரியண்ட்கள் வரிசையில் டாப் வேரியண்ட்டாக புதிய ஆண்டுநிறைவு எடிசன் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.

ஸ்லாவியாவின் ஸ்டைல் வேரியண்ட்டில் வழங்கப்படும் அனைத்து சவுகரிய மற்றும் பாதுகாப்பு அம்சங்களை இந்த புதிய ஆண்டுநிறைவு எடிசனில் பெறலாம். குஷாக் காரில் புதிய லாவா ப்ளூ எடிசன் ஆனது ஸ்டைல் மற்றும் மோண்டே கார்லோ வேரியண்ட்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதாவது குஷாக் காரில் புதிய லாவா ப்ளூ எடிசன் விலைமிக்க வேரியண்ட் கிடையாது. அதனை காட்டிலும் அதிகப்படியான விலையில் மோண்டே கார்லோ எடிசன் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
ஏற்கனவே கூறியதுதான், கார்களின் விற்பனையை அதிகரிக்க அவ்வப்போது இவ்வாறான ஸ்பெஷல் எடிசன் கார்களின் அறிமுகங்கள் அவசியமான ஒன்றாகும். அதுமட்டுமின்றி, கார் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு குறிப்பிட்ட காலம் கடந்துள்ளதை வாடிக்கையாளர்களுடன் சம்பந்தப்பட்ட கார் நிறுவனம் நினைவுக்கூர வேண்டும். அப்போதுதான் அந்த கார் மேலும் கூடுதல் வாடிக்கையாளர்களை சென்றடையும்.


Click it and Unblock the Notifications









