500 யூனிட்டை மட்டும் விற்பனைக்கு கொண்டாந்திருக்காங்க... இத வாங்க அடி-தடியே நடந்தாலும் ஆச்சரியப்பட ஒன்னுமில்ல!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஸ்கோடா, இந்தியாவில் விற்பனைச் செய்துக் கொண்டிருக்கும் பிரபலமான கார் மாடல்களில் குஷாக்-ம் ஒன்று. இந்த கார் மாடலிலேயே சிறப்பு பதிப்பு ஒன்றை அந்நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. குஷாக் மேட் எடிசன் எனும் காரையே விற்பனைக்குக் களமிறக்கி உள்ளது.

இதற்கு அறிமுக விலையாக ரூ. 16.19 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலை வழக்கமான குஷாக் மேட் எடிசனைக் காட்டிலும் ரூ. 40 ஆயிரம் அதிகம் ஆகும். இந்த அதிக விலைக்கு சிறப்பு வண்ண பூச்சைப் பயன்படுத்தி இருப்பதே காரணமாக உள்ளது.

Skoda kushaq matte edition

கார்பன் ஸ்டீல் ஷேடே காரின் பாடி பேனலில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது மேட் ஃபினிஷிங்கில் இருக்கின்றது. அதேவேளையில், இதன் பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள், டோர் ஹேண்டில்கள் மற்றும் ரியர் ஸ்பாய்ளர்கள் ஆகியவற்றில் பளபளக்கும் கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, காரின் க்ரில், ட்ரங்க் மற்றும் விண்டோக்களில் குரோம் அணிகலன்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட சிறப்பு பதிப்பை ஒட்டுமொத்தமாக 500 யூனிட்டுகள் வரை விற்பனைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் மேட் எடிசன் விற்பனைக்குக் கிடைக்கும்.

Skoda kushaq matte edition rear view

சிறப்பு வசதிகள் பலவற்றை மேட் எடிசனில் ஸ்கோடா வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 25.4 செமீ அளவுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஸ்மார்ட் லிங்க் இணைப்பு வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டையும் இந்த திரை சப்போர்ட் செய்யும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஸ்கோடா நிறுவனம் குஷாக் கார் மாடலை இந்திய சந்தையில் முதல் முறையாக 2021 ஜூலையிலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனை தனது புகழ்பெற்ற எம்க்யூபி-ஏ0-இன் பிளாட்பாரத்தில் வைத்தே ஸ்கோடா நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்தியாவிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பு தளமே இது ஆகும்.

இந்த தளத்தில் வைத்து இக்காரை வடிவமைத்ததனாலேயோ என்னமோ குஷாக் அதிக கவர்ச்சியான காராக தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. இது கவர்ச்சியான கார் மட்டுமல்ல அதிக பாதுகாப்பான வாகனமும்கூட. ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்ற கார் மாடலாகவும் காட்சியளிக்கின்றது. இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக பல சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

இரட்டை ஏர்பேக்கு, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஐசோஃபிக்ஸ் சிறுவர் இருக்கைக்கான மவுண்டுகள், ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூசன் வசதி, எலெக்ட்ரானிக் லாக் சிஸ்டம், டிராக்சன் கன்ட்ரோல், பிரேக் டிஸ்க் வைப்பிங், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ரோல் ஓவர் பாதுகாப்பு அம்சம் உள்ளிட்டவையே வழங்கப்பட்டு உள்ளன.

இதுதவிர, ரிமோட் கன்ட்ரோல் மற்றும் மடித்துக் கொள்ளும் வசதிக் கொண்ட சாவி, மேனுவல் ஏர் கன்டிஷனிங் சிஸ்டம், முன்பக்க ஆர்ம்ரெஸ்ட் ஸ்டோரேஜ் வசதி, ஃபேப்ரிக் இருக்கை, இரட்டை ஸ்போக் கொண்ட ஸ்டியரிங் வீல், உயரம் மற்றும் நீளத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல், பின் பக்கத்திற்கான ஏசி வெண்ட் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே மிக அழகிய காராக ஸ்கோடா குஷாக் காட்சியளிக்கின்றது. இந்த காரையே சிறப்பு பதிப்பு என்கிற பெயரில் கூடுதல் அழகானதாக ஸ்கோடா நிறுவனம் மாற்றி இருக்கின்றது. என்ன சற்று அதிக விலையில் அது விற்பனைக்கு வந்திருக்கின்றது. இது தற்போது விற்பனைக்கு களமிறக்கி இருக்கும் அனைத்து 500 யூனிட்டுகளும் விரைவில் விற்பனையாகி தீரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, July 3, 2023, 17:54 [IST]
English summary
Skoda kushaq matte edition launched here is price special features details
மேலும்... #ஸ்கோடா #skoda #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+