இதுமாதிரி எதையாச்சும் பண்ணா தான் ஸ்கோடா கார்கள் நல்லா சேல்ஸ் ஆகும்!! புதிய வேரியண்ட்கள் விற்பனைக்கு!

ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) காரில் புதிய ஆனிக்ஸ் பிளஸ் (Onyx Plus) வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. விலை உள்பட இந்த புதிய ஸ்கோடா குஷாக் காரின் முக்கிய அம்சங்களையும், இந்த காரை எந்த என்ஜின் உடன் வாங்கலாம் என்பதை பற்றியும் இனி விரிவாக பார்க்கலாம்.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த கார் நிறுவனமான ஸ்கோடா ஆட்டோ இந்தியாவில் அதன் மிட்-சைஸ் எஸ்யூவி காராக குஷாக்கை விற்பனை செய்து வருகிறது. கடந்த 2021 ஜூன் மாதத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கோடா குஷாக் காரில் புதிய வேரியண்ட் 'ஆனிக்ஸ் பிளஸ்' என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

skoda kushaq onyx& slavia ambition

புதிய குஷாக் ஆனிக்ஸ் பிளஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.11.59 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வழக்கமான குஷாக் வேரியண்டகளில் இருந்து புதிய ஆனிக்ஸ் வேரியண்ட் ஆனது தோற்றத்தில் வேறுப்படுகிறது. இந்த புதிய வேரியண்ட்டில் ஜன்னல் கார்னிஷ், முன்பக்க கிரில் ரிப்கள் மற்றும் பின்பக்க கதவில் க்ரோம் வழங்கப்பட்டு உள்ளது.

அத்துடன், புதிய டிசைனிலான 16-இன்ச் அலாய் சக்கரங்கள் இந்த புதிய வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஸ்கோடா குஷாக் ஆனிக்ஸ் பிளஸ் வேரியண்ட்டை வாங்க ஆசைப்படும் வாடிக்கையாளர்கள் இந்த காரை கேண்டி வெள்ளை அல்லது கார்பன் ஸ்டீல் என இரு விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் வாங்கலாம்.

skoda kushaq onyx& slavia ambition

புதிய குஷாக் ஆனிக்ஸ் பிளஸ் வேரியண்ட்டை 1.0 லிட்டர், டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் உடன் வாங்கலாம். அதிகப்பட்சமாக 114 பிஎச்பி மற்றும் 178 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் புதிய ஆனிக்ஸ் பிளஸ் வேரியண்ட்டில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும்.

இதேபோன்று, ஸ்கோடாவின் செடான் காரான ஸ்லாவியாவிலும் புதிய வேரியண்ட் 'அம்பிஷன் பிளஸ்' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.49 லட்சம் ஆகும். புதிய குஷாக் ஆனிக்ஸ் வேரியண்ட்டை போல், புதிய ஸ்லாவியா அம்பிஷன் பிளஸ் வேரியண்ட்டிலும் ஜன்னல் கார்னிஷ், கிரில் மற்றும் பூட் லிட் பகுதிகளில் க்ரோம் ஆட்-ஆன்கள் வழங்கப்பட்டு உள்ளன.

skoda kushaq onyx& slavia ambition

ஸ்லாவியா செடான் காரை எந்தவொரு பெயிண்ட் ஆப்ஷனிலும் இனி டேஷ்போர்டு கேமரா உடன் பெறலாம். இந்த டேஷ்கேம் ஆனது ஸ்கோடா நிறுவனத்தின் தொழிற்சாலையில் பொருத்தப்படும். ஸ்கோடா ஆனிக்ஸ் பிளஸ் காரை போல், ஸ்லாவியா அம்பிஷன் பிளஸ் காரும் அதே 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கும்.

ஆனால், ஸ்லாவியாவின் புதிய அம்பிஷன் பிளஸ் வேரியண்ட்டை இந்த என்ஜின் உடன் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறலாம். ரூ.12.49 லட்சம் என்பது மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இந்த காரின் விலை ஆகும். அதுவே, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் ரூ.13.79 லட்சம். குஷாக் & ஸ்லாவியா கார்களில் புதிய வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியதோடு, அவைகளுக்கு எக்ஸ்சேஞ்ச் மற்றும் கார்ப்பிரேட் சலுகைகளும் வழங்கப்பட்டு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்களின் விற்பனையை மேம்படுத்த இவ்வாறு அவ்வப்போது புது, புது வேரியண்ட்களின் அறிமுகங்கள் தேவை ஆகும். ஏனெனில் அப்போதுதான் அந்த குறிப்பிட்ட வேரியண்ட்டை மார்க்கெட்டில் புத்துணர்ச்சியானதாக வைத்திருக்க முடியும். இதனை மறக்காமல், ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் ஓர் குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்துவிடுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, September 4, 2023, 18:44 [IST]
English summary
Skoda kushaq onyx and slavia ambition launched
மேலும்... #ஸ்கோடா #skoda #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X