மொத்தமா கருப்பு நிறத்தில் இப்படியொரு காரை வாங்கினால் ஊரே அதிர்ந்து போகும்!! ஸ்கோடா அறிமுகம் செஞ்சி இருக்கு!
ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) இந்தியா நிறுவனம் அதன் குஷாக் மற்றும் ஸ்லாவியா கார்களில் புதியதாக எலெகன்ஸ் எடிசன்களை அறிமுகம் செய்து உள்ளது. இந்த புதிய ஸ்கோடா கார்களை பற்றிய கூடுதல் விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம், வாங்க.
செக் குடியரசு நாட்டை சேர்ந்த கார் நிறுவனமான ஸ்கோடா ஆட்டோ இந்தியாவில் பல டிரெண்டியான கார்களை விற்பனை செய்கிறது. குஷாக் மற்றும் ஸ்லாவியா என்பன அத்தகைய ஸ்கோடா கார்கள் ஆகும். கடந்த 2 வருடங்களில் இவை இரண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

இந்த ஸ்கோடா கார்களில்தான் புதியதாக எலெகன்ஸ் எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இதில், குஷாக் எலெகன்ஸ் எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.18.31 லட்சமாகவும், ஸ்லாவியா எலெகன்ஸ் எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17.52 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. இவை இரண்டும் லிமிடெட் எடிசன் கார்கள் ஆகும்.
அதாவது, இந்த எலெகன்ஸ் எடிசன் கார்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே விற்பனையில் இருக்கும். இந்த லிமிடெட் எடிசன் குஷாக் மற்றும் ஸ்லாவியா கார்கள் முற்றிலுமாக கருப்பு நிறத்தில் ஜொலிக்கின்றன. இவை இரண்டும் வழக்கமான குஷாக் & ஸ்லாவியா கார்களை காட்டிலும் விலைமிக்கவை ஆகும்.

ஏனெனில், இந்த புதிய எலெகன்ஸ் எடிசன்கள் வழக்கமான குஷாக் மற்றும் ஸ்லாவியா கார்களின் டாப் ஸ்டைல் வேரியண்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், குஷாக் மற்றும் ஸ்லாவியா எலெகன்ஸ் எடிசன்கள் முற்றிலும் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளன. அதேநேரம், பளபளப்பான க்ரோம் பிட்கள் காரை சுற்றிலும் வழங்கப்பட்டு உள்ளன.
'எலெகன்ஸ்' முத்திரையை கார்கள் இரண்டிலும் B-பில்லர்களில் காண முடிகிறது. ஸ்லாவியா செடான் காரின் எலெகன்ஸ் எடிசனில் க்ரோம் பிட்கள் காரின் பின்பக்க பூட் பகுதியில் கூடுதலாக இடம்பெற்றுள்ளன. குஷாக் எலெகன்ஸ் எடிசனில் 17-இன்ச்சில் புதிய ட்யூயல்-டோன் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்தகைய அலாய் சக்கரங்களை குஷாக்கின் மோண்டே கார்லோ வேரியண்ட்டிலும் பார்க்க முடியும்.

இந்த இரு எலெகன்ஸ் எடிசன் கார்களிலும் பெடில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. காருக்கு உள்ளே ஸ்டேரிங் சக்கரம் மற்றும் சீட் குஷின்களில் எலெகன்ஸ் முத்திரைகளை காண முடிகிறது. அத்துடன், கேபினுக்குள் இந்த இரு ஸ்பெஷல் எடிசன் கார்களிலும் அலுமினியம் பெடல்கள் மற்றும் ஹெட்ரெஸ்ட் குஷின்களையும் பார்க்க முடிகிறது.
ஸ்லாவியா எலெகன்ஸ் எடிசனில் மட்டும் டோர் சில்களில் வழங்கப்பட்ட ஸ்கஃப் தட்டுகள் 'ஸ்லாவியா' பெயர் முத்திரையை கொண்டுள்ளன. குஷாக் மற்றும் ஸ்லாவியா கார்களின் டாப் ஸ்டைல் வேரியண்ட்களில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. அதே டர்போ பெட்ரோல் என்ஜின் தான் இந்த புதிய எலெகன்ஸ் எடிசனில் என்ஜின் ஆப்ஷனாக கொடுக்கப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியா கார்கள் ஏற்கனவே மாடர்ன் தரத்திலானவை ஆகும். இருப்பினும், வழக்கமான குஷாக் & ஸ்லாவியா கார்களை காட்டிலும் வித்தியாசமான & பளபளப்பான தோற்றத்தை எதிர்பார்ப்பவர்கள் இந்த எலெகன்ஸ் எடிசன்களை வாங்கலாம். இவற்றின் அறிமுகத்திற்கு காரணம் வேறொன்றும் இல்லை, விற்பனையை அதிகரிப்பதுதான்.


Click it and Unblock the Notifications









