1.5லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜினை பெற்ற இரு முன்னணி கார் மாடல்கள்! இந்த எஞ்ஜினுக்காகவே 2 காரையும் வாங்கலாம்!
முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஸ்கோடா, அதன் இரு புகழ்பெற்ற கார் மாடல்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் டிஎஸ்ஐ எஞ்ஜின் ஆப்ஷனை புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. குஷாக் மற்றும் ஸ்லேவியா ஆகியவற்றிலேயே புதிய எஞ்ஜின் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.
இந்த இரண்டின் ஆம்பிசன் தேர்விலேயே 1.5 டிஎஸ்ஐ மோட்டார் ஆப்ஷன் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் அதிக திறனை வெளியேற்றக் கூடிய பவர்ஃபுல் மோட்டார் ஆகும். 150 எச்பி மற்றும் 250 என்எம் டார்க் வரை இது வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்த மோட்டாருடன் சேர்த்து 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்சன் வழங்கப்படுகின்றது. முன்னதாக 1.0 லிட்டர் மோட்டார் ஆப்ஷன் மட்டுமே விற்பனைக்கு வழங்கப்பட்டு வந்தநிலையில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மோட்டார் தேர்வு வழங்கும் விதமாக 1.5 லிட்டர் பெட்ரோல் டிஎஸ்ஐ எஞ்ஜின் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.
குஷாக் ஆம்பிசன் 1.5 லிட்டர் மேனுவலுக்கு ரூ. 14.99 லட்சமும், இதன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விற்கு ரூ. 16.79 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல், ஸ்லேவியா ஆம்பிசன் 1.5 லிட்டர் மேனுவலுக்கு ரூ. 14.94 லட்சமும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விற்கு ரூ. 16.24 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இது 1.0 லிட்டர் மோட்டார் கொண்ட ஆம்பிசன் வேரியண்டுகளைக் காட்டிலும் ரூ. 1.8 - ரூ. 1.95 லட்சம் மட்டுமே அதிக விலை ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது. இரு கார் மாடல்களின் ஆம்பிசன் தேர்வில் இந்த மாற்றம் மட்டுமே புதிய தேர்வாகக் கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஏற்கனவே விற்பனைக்குக் கிடைத்து வந்த 1.0 லிட்டர் மோட்டாருடன் இப்புதிய மோட்டார் தேர்வும் விற்பனைக்குக் கிடைக்கும். இதேபோல், முன்னதாக வழங்கப்பட்ட பிரீமியம் அம்சங்களும் ஆம்பிசன் தேர்வில் அப்படியே வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக சமீபத்திலேயே ஸ்கோடா நிறுவனம் அதன் குஷாக் காரில் ஓனிக்ஸ் எனும் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
இதன் அறிமுகம் அரங்கேற்றப்பட்ட சில தினங்களிலேயே புதிய மோட்டார் தேர்வை தன்னுடைய புகழ்பெற்ற கார்களில் புதிதாக ஸ்கோடா விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. வழக்கமான ஸ்கோடா குஷாக்கைக் காட்டிலும் சற்று கவர்ச்சியான தோற்றம் கொண்ட பதிப்பாகவே குஷாக் ஓனிக்ஸ் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. வெளிப்புற தோற்றம் தொடங்கி காரின் உட்பக்க அலங்கரிப்பு வரையில் என அனைத்திலும் தனித்துவமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
ஓனிக்ஸ் எடிசனுக்கு அறிமுக விலையாக ரூ. 12.39 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. சிறப்பு அலங்கரிப்பாக, காரின் பக்கவாட்டில் கிரே நிறத்திலான கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டு உள்ளன. இதுவே புதிய ஓனிக்ஸ் பதிப்பை வழக்கமான குஷாக்கிடம் இருந்து வேறுப்படுத்தி காட்டுகிறது.

இதுதவிர பி-பில்லரில் 'ஓனிக்ஸ்' எனும் லோகோவும், முன்பக்க பம்பரில் ஃபாக்ஸ் டிஃப்யூஸர், முன்பக்க க்ரில்லை சுற்றிலும் க்ரோம் அணிகலன் மற்றும் 16 அங்குல வீல் உள்ளிட்டவையும் வழக்கமான குஷாக்கிடம் இருந்து வேறுபடுத்துக் காட்டும் வகையில் குஷாக் ஓனிக்ஸ் பதிப்பில் வழங்கப்பட்டு உள்ளன. இதேபோல், காரின் உட்பக்கத்திலும் அதிக சிறப்பு அலங்கரிப்புகளை நம்மால் காண முடிகின்றது.
முக்கியமாக இருக்கை மற்றும் டேஷ்போர்டில் கண்களைக் கவரும் வகையில் சிறப்பு வேலைபாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும், ஓனிக்ஸ் எனும் முத்திரைகளையும் ஆங்காங்கே நம்மால் பார்க்க முடிகின்றது. மோட்டாரை பொருத்தவரை 1.0 லிட்டர், 3 சிலிண்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் ஆப்ஷனே இதில் வழங்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 115 பிஎச்பி மற்றும் 178 என்எம் டார்க் திறனை வெளியேற்றும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இந்தியர்கள் மத்தியில் அதிக திறனை வெளியேற்றும் மோட்டார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தன்னுடைய அதிகம் விற்பனையாகும் இரு கார் மாடல்களிலும் (குஷாக், ஸ்லேவியா) புதிய பவர்ஃபுல் மோட்டார் ஆப்ஷனை ஸ்கோடா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இவற்றிற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









