ஸ்கோடா மழைக்கால சர்வீஸ் முகாம் அறிவிப்பு... எப்போது வரை தெரியுமா?

இந்திய சந்தையில் தத்தளித்து கொண்டிருந்த ஸ்கோடா (Skoda) நிறுவனம், ஒரு சில புதிய கார்களின் அறிமுகத்திற்கு பிறகு மீண்டும் தலை நிமிர தொடங்கியுள்ளது. இந்த சூழலில் இந்தியாவில் பருவமழை (Monsoon) தீவிரமடைந்து வருவதையடுத்து, அதிரடியான அறிவிப்பு ஒன்றை ஸ்கோடா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

அது மழைக்கால சர்வீஸ் முகாம் தொடர்பானது ஆகும். 2023ம் ஆண்டு பருவமழை காலத்தை முன்னிட்டு ஸ்கோடா நிறுவனம் தனது கார்களுக்கு இந்த சர்வீஸ் முகாமை அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள ஸ்கோடா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற அனைத்து டீலர்ஷிப்களிலும், வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வரை இந்த சர்வீஸ் முகாம் நடைபெறவுள்ளது.

Skoda Slavia

இந்த மழைக்கால சர்வீஸ் முகாம்களில் ஸ்கோடா கார் உரிமையாளர்களுக்கு பல்வேறு வகையான பலன்கள் கிடைக்கவுள்ளன. இதன்படி குறிப்பிட்ட பாகங்களுக்கு 15 சதவீத தள்ளுபடியை ஸ்கோடா நிறுவனம் வழங்கவுள்ளது. இதுதவிர குறிப்பிட்ட மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படவுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

மேலும் ரோடுசைடு அஸிஸ்டன்ஸ் சேவையின் 2வது மற்றும் 3வது ஆண்டு நீட்டிப்புகளுக்கு, 20 சதவீத தள்ளுபடி கொடுக்கப்படவுள்ளது. ஸ்கோடா நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஸ்லாவியா (Slavia), குஷாக் (Kushaq) மற்றும் கோடியாக் (Kodiaq) உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வருகிறது.

Skoda Kodiaq

இதில், ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகிய 2 கார்கள்தான் இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் சமீபத்திய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கின்றன. இதில் ஸ்லாவியா காரானது, செடான் ரகத்தை சேர்ந்தது ஆகும். மறுபக்கம் குஷாக் காரானது, எஸ்யூவி செக்மெண்ட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்கோடா ஸ்லாவியா கார் இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி (Honda City), ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) ஆகிய கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. மறுபக்கம் ஸ்கோடா குஷாக் காரானது, மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் பல்வேறு கார்களுக்கு சவால் அளித்து வருகிறது.

ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) போன்றவை மிகவும் முக்கியமான கார்கள் ஆகும். இதுதவிர ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) ஆகிய கார்களுக்கும் ஸ்கோடா குஷாக் விற்பனையில் சவால் அளித்து கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது ஸ்கோடா நிறுவனத்தின் கார்களை வைத்திருப்பவர்கள், இந்த மழைக்கால சர்வீஸ் முகாம்களை பயன்படுத்தி கொள்ளலாம். மழைக்காலங்களில் கார்களுக்கு சர்வீஸ் மிகவும் முக்கியம் என்பதால், தள்ளுபடி விலையில் அதனை செய்து கொள்வதற்கு இது மிகச்சிறந்த ஒரு வாய்ப்பு ஆகும்.

More from DriveSpark

Article Published On: Sunday, July 30, 2023, 23:52 [IST]
English summary
Skoda monsoon service camp all details here
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+