இந்த தீபாவளியில் வாங்குவதற்கு ஓர் சரியான ஸ்கோடா கார் விற்பனைக்கு வந்தாச்சு!! இப்போதே புக் செய்து வைங்க!

ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) காரில் புதியதாக மேட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி சமயத்தில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய ஸ்லாவியா மேட் எடிசனின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.15,51,999 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

வருட இறுதி பண்டிகை நாட்களை டார்க்கெட் செய்து ஸ்கோடா மட்டுமின்றி, மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களும் கடந்த சில மாதங்களாக பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. ஏனெனில் இந்த காலத்தில் புதிய கார்களை வாங்கவே நம் இந்தியர்கள் பெரும்பாலும் விரும்புவர்.

skoda slavia matte edition launched

இந்த வரிசையில், ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய கார் தான் ஸ்லாவியா மேட் எடிசன் ஆகும். அதாவது, கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்லாவியா காரில் புதியதாக மேட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்லாவியா மேட் எடிசனின் அறிமுகத்தை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டது.

தற்போது இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஸ்கோடாவின் செடான் காரான ஸ்லாவியாவின் ஸ்டைல் வேரியண்ட்டின் அடிப்படையில் புதிய மேட் எடிசன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஸ்லாவியா ஸ்டைல் வேரியண்ட்டின் விலையை காட்டிலும் அதனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய மேட் எடிசனின் ஆரம்ப விலை ரூ.40,000க்கும் மேல் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

skoda slavia matte edition launched

அதிகப்பட்சமாக ரூ.19,11,999 வரையில் புதிய ஸ்லாவியா மேட் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்பெஷல் எடிசன் காருக்கு கார்பன் ஸ்டீல் கருப்பு நிறத்தில் பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த பெயிண்ட்டிற்கு இறுதியாக மேட் ஃபினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால்தான், இந்த ஸ்பெஷல் எடிசன் கார் படங்களில் பார்க்கும்போது பளபளப்பானதாக இல்லாமல், சொரசொரப்பான பெயிண்ட்டில் காட்சியளிக்கிறது.

ஆனால், அதேநேரம் ஸ்லாவியா மேட் எடிசனின் கதவு கைப்பிடிகள் மற்றும் காரின் பின்புறத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகளின் மூடிகள் பளபளப்பான கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, காரில் இருந்து இந்த குறிப்பிட்ட பாகங்கள் மட்டும் தனியாக தெரிக்கின்றன.

skoda slavia matte edition launched

காரின் உட்பக்கத்தில், டேஸ்போர்டில் வயர்லெஸ் மொபைல் இணைப்பு வசதி உடன் 10 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சப் வூஃப்பர் உடன் 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், பவர்டு முன் இருக்கைகள் மற்றும் முன் இருக்கை பயணிகள் கால் வைக்கும் பகுதியில் ஒளிரும் விளக்குகள் உள்ளிட்டவையும் இந்த ஸ்பெஷல் எடிசனில் இடம்பெற்றுள்ளன.

புதிய ஸ்லாவியா மேட் எடிசனை மொத்தம் 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் வாங்கலாம். 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்பவை ஆகும். இவற்றுடன், கியர்பாக்ஸ் ஆப்ஷன்களாக 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸை பெறலாம்.

skoda slavia matte edition launched

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இவ்வாறான ஸ்பெஷல் எடிசன்கள் இந்த சமயத்தில் அறிமுகம் செய்யப்படுவது வருட இறுதி பண்டிகை நாட்களை டார்க்கெட் செய்தே ஆகும். மேலும், இவ்வாறான ஸ்பெஷல் எடிசன் கார்களை வாங்குவதன் மூலம் மற்றவர்களிடம் இருந்து நீங்கள் வித்தியாசத்துடன் இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 10, 2023, 22:10 [IST]
English summary
Skoda slavia matte edition launched at rs 15 52 lakhs
மேலும்... #ஸ்கோடா #skoda #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X