குறைவான விலையில் புதிய காரை களமிறக்கும் ஸ்கோடா! மாருதி, டாடா நிறுவனங்கள் வயித்துல புளியை கரைச்சுட்டாங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub-4 Meter Compact SUV) ரக கார்களுக்கு மிகப்பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு இந்த செக்மெண்ட்டில் புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளன.
தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet), டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) ஆகிய கார்கள் இந்த செக்மெண்ட்டில் மிகவும் பிரபலமாக இருக்கின்றன.

இதுதவிர இந்த செக்மெண்ட்டை சேர்ந்த ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய கார்களும் கூட வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து கொண்டுள்ளன. இந்த சூழலில் மற்றொரு நிறுவனம் இந்த செக்மெண்ட்டில் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
அது ஸ்கோடா (Skoda) ஆகும். மேற்கண்ட கார்களுக்கு போட்டியாக புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றை ஸ்கோடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்தியா 2.0 யுக்தியின் கீழ், ஸ்கோடா நிறுவனம் தற்போது பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது.

இந்த திட்டத்தின்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) ஆகிய 2 கார்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. எனவே இவற்றை தொடர்ந்து, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் புதிய கார் ஒன்றை ஸ்கோடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த காரை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கு ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளையும் ஸ்கோடா நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. அனேகமாக 2024ம் ஆண்டில் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படியானால் இந்த கார் கிட்டத்தட்ட தயாராகி விட்டது என்றுதான் அர்த்தம். தற்போதைய ஸ்கோடா கார்களில் பின்பற்றப்பட்டு வரும் டிசைன் மொழி, இந்த புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரிலும் வழங்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் இது பேபி குஷாக் காராக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே குஷாக் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) இன்ஜின் ஆப்ஷன்தான், ஸ்கோடா நிறுவனத்தின் இந்த புதிய காரிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த காரில் அனேகமாக இந்த ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்படும்.
ஆனால் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள் என இந்த காரில் ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்பட்டிருக்கலாம். எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஸ்கோடா நிறுவனத்தின் இந்த புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஏற்கனவே கடுமையான போட்டி காரணமாக அனல் பறந்து வருகிறது. இந்த சூழலில் ஸ்கோடா நிறுவனம் களமிறக்கவுள்ள புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டியை கடுமையாக்கி விடும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
விலையை (Price) பொறுத்தவரை, இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் என்பதால், ஓரளவிற்கு குறைவான விலையில் நாம் எதிர்பார்க்க முடியும். இதை தொடர்ந்து புதிய எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நாங்கள் இந்த செய்தியில் வழங்கியுள்ள புகைப்படங்கள், உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை ஆகும்.


Click it and Unblock the Notifications








