இந்த கார் மறுபடியும் விற்பனைக்கு வரப்போகுதா! ரகசியமா புக்கிங் நடக்குது! வண்டியை ஷோரூமுக்கு திருப்பும் மக்கள்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த கார்களில் ஒன்று ஸ்கோடா சூப்பர்ப் (Skoda Superb). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்திய சந்தையில் ஸ்கோடா சூப்பர்ப் காரின் விற்பனை அதிரடியாக நிறுத்தப்பட்டது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து, பிஎஸ்6 பேஸ்2 (BS6 Phase II) விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படாத கார்களின் விற்பனை நிறுத்தப்பட்டது. இதில், ஸ்கோடா சூப்பர் காரும் ஒன்றாகும். விற்பனை நிறுத்தப்பட்டாதால், ஸ்கோடா சூப்பர்ப் காரின் ரசிகர்கள் கவலையடைந்தனர்.

Skoda Superb

ஆம், ஸ்கோடா சூப்பர்ப் கார் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை விட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவில் உள்ள ஸ்கோடா டீலர்ஷிப்களில், புதிய சூப்பர்ப் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டதாம்.

ஆனால் இது அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு என கூறப்படுகிறது. ஸ்கோடா சூப்பர்ப் கார் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால் அதில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன், 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Skoda Superb Front View

ஆனால் ஸ்கோடா சூப்பர்ப் கார் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுதான் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. அதாவது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லையாம். இதில் மறைந்துள்ள நல்ல விஷயம் என்னவென்றால், இறக்குமதி செய்யப்படும் மாடல் என்பதால், பல்வேறு அதிநவீன வசதிகளை நாம் எதிர்பார்க்கலாம்.

இதன்படி பல்வேறு பாதுகாப்பு வசதிகளை உள்ளடக்கிய அடாஸ் தொகுப்பு புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர 9 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளும் புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரில் இடம்பெற்றிருக்கும் என வெளியாகி வரும் தகவல்கள், இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) எஸ்யூவி மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) செடான் போன்ற புதிய கார்கள்தான் இதற்கு மிக முக்கியமான காரணமாக கருதப்படுகின்றன.

இந்த சூழலில் சூப்பர்ப் கார் மீண்டும் களமிறக்கப்பட்டால், அது ஸ்கோடா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க உதவி செய்யும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அனேகமாக நடப்பு 2023ம் ஆண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு ஸ்கோடா சூப்பர்ப் கார் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 6, 2023, 23:57 [IST]
English summary
Skoda superb india relaunch details unofficial bookings open
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+