ஊர் முழுக்க ஷோரூம் இருந்தும் ஒரு யூஸும் இல்ல!! ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் கார்களை வாங்க இந்தியாவில் ஆள் இல்ல!

வெளிநாட்டு கார் நிறுவனங்கள் பல இந்தியாவில் தங்களது கார்களை விற்பனை செய்து வருகின்றன. அவற்றுள் முக்கியமானவை ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் ஆகும். ஐரோப்பிய கார் நிறுவனங்களான இவை இரண்டும் இந்திய சந்தையில் தற்சமயம் தலா 3 கார்களை விற்பனை செய்கின்றன. அவை ஒவ்வொன்றும் கடந்த அக்டோபர் மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தில் இருந்து இந்திய சந்தையில் குஷாக், ஸ்லாவியா மற்றும் கோடியாக் என மொத்தம் 3 விதமான கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. முன்பு விற்பனையில் இருந்த ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப் கார்களின் விற்பனையை ஸ்கோடா நிறுத்திவிட்டது.

volkswagen car sales report

இருப்பினும், 3 கார் மாடல்களை வைத்து கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் 4,566 கார்களை ஸ்கோடா விற்பனை செய்துள்ளது. ஆனால், 2022 அக்டோபர் மாதத்தில் வெறும் 3,389 கார்களும், 2023 செப்டம்பர் மாதத்தில் 4,032 கார்களும் மட்டுமே ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் ஸ்கோடாவில் இருந்து அதிகப்பட்சமாக குஷாக் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் மொத்தம் 2,447 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் வெறும் 1,691 குஷாக் கார்களை மட்டுமே ஸ்கோடா விற்பனை செய்திருந்தது.

volkswagen car sales report

இந்த வகையில் பார்க்கும்போது, குஷாக் கார்களின் விற்பனை ஆனது 44.71%, அதாவது 756 யூனிட்கள் கடந்த ஆண்டை விட அதிகரித்து உள்ளது. அதேபோல், கடந்த செப்டம்பர் மாதத்திலும் 2,260 குஷாக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், அதற்கடுத்த அக்டோபர் மாதத்தில் 187 குஷாக் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

குஷாக் எஸ்யூவி காருக்கு அடுத்து ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக ஸ்லாவியா 2வது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 1,943 ஸ்லாவியா கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஸ்கோடாவின் செடான் ரக கார் ஸ்லாவியா ஆகும்.

volkswagen car sales report

ஆனால், 2022 அக்டோபர் மாதத்தில் 1,376 ஸ்லாவியா கார்களையும், 2023 செப்டம்பரில் 1,581 ஸ்லாவியா கார்களையும் மட்டுமே ஸ்கோடா விற்பனை செய்திருந்தது. இவை இரண்டை மட்டுமின்றி, 176 கோடியாக் கார்களையும் கடந்த மாதத்தில் ஸ்கோடா இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை பொறுத்தவரையில், ஏற்கனவே கூறியதுபோல் இந்த கார் நிறுவனத்தில் இருந்து 3 கார் மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

டைகுன், விர்டுஸ் மற்றும் டிகுவான் என்பன அவை ஆகும். இதில், டைகுன் கார்கள் கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையாகி உள்ளன. ஸ்கோடா குஷாக்கின் ஃபோக்ஸ்வேகன் பிராண்ட் வெர்சனான டைகுன் கடந்த மாதத்தில் மொத்தம் 2,219 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால், 2022 அக்டோபர் மாதத்தில் 2,355 டைகுன் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் டைகுன் கார்களின் விற்பனை 5.77% குறைந்துள்ளது.

volkswagen car sales report

ஆனால் உண்மையில், வெறும் 1,586 டைகுன் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட 2023 செப்டம்பரை காட்டிலும் கடந்த மாதத்தில் 633 டைகுன் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து, விர்டுஸ் கார்கள் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. விர்டுஸின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 1,772 ஆகும். இவற்றுடன், 98 டிகுவான் கார்களையும் ஃபோக்ஸ்வேகன் விற்பனை செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 16, 2023, 11:29 [IST]
English summary
Skoda volkswagen car sales report 2023 october check full details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X