உலகின் அவ்வளவு பெரிய கார் நிறுவனங்கள்... இந்தியாவில் கார்களை விற்க போராடுது!! கடந்த மே மாத ரிப்போர்ட்

இந்தியாவில் பல்வேறு வெளிநாட்டு கார் நிறுவனங்கள் தங்களது கார்களை விற்பனை செய்கின்றன. அவற்றுள் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா நிறுவனங்களும் ஒன்றாகும். கூட்டணியில் இருக்கும் இந்த இரு நிறுவனங்களில் இருந்து கடந்த 2023 மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.

கடந்த மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த கார் நிறுவனங்கள் லிஸ்ட்டில் 9வது மற்றும் 10வது இடங்களை முறையே ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் பிடித்துள்ளன. ஸ்கோடா பிராண்டில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 3,547 கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2022 மே மாதத்தில் 4,604 ஸ்கோடா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

skoda & volkswagen cars sales

இந்த வகையில் ஸ்கோடா கார்களின் விற்பனை ஆனது இந்தியாவில் 22.96% குறைந்துள்ளது. கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் கூட 4,009 கார்களை ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் தற்சமயம் ஸ்லாவியா, குஷாக், கோடியாக் மற்றும் சூப்பர்ப் என 4 கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் ஓரளவிற்கு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகுபவை ஸ்லாவியா & குஷாக் மட்டுமே.

இவை இரண்டின் கடந்த மே மாத விற்பனை எண்ணிக்கைகள் 1,695 மற்றும் 1,685 ஆகும். குஷாக்கை விட வெறும் 10 ஸ்லாவியா கார்கள் அதிகம் விற்கப்பட்டுள்ளன. ஆனால் 2022 மே மாதத்தில் 2,466 ஸ்லாவியா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஸ்லாவியா அப்போதுதான் சந்தையில் அறிமுகமாகி இருந்ததால் இவ்வளவு வரவேற்பு கிடைத்தது. குஷாக் காரும் கடந்த ஆண்டு மே மாதத்தில் 1,806 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்தது.

skoda & volkswagen cars sales

கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் கூட 1,586 ஸ்லாவியா கார்களும், 2,162 குஷாக் கார்களும் விற்பனையாகி இருந்தன. ஆக மொத்தத்தில் கடந்த மே மாதத்தில்தான் இவை இரண்டின் விற்பனை குறைந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த நிறுவனத்தில் இருந்து வெறும் 3 கார் மாடல்கள் மட்டுமே விற்பனையில் உள்ளன. விர்டுஸ், டைகுன் மற்றும் டிகுவான் என்பவை அவை ஆகும்.

2023 ஏப்ரல் மாதத்தில் விற்பனையில் விர்டுஸை டைகுன் எஸ்யூவி கார் முந்தியிருந்த நிலையில், கடந்த மே மாதத்தில் மீண்டும் விர்டுஸ் டைகுனை முந்தியுள்ளது. கடந்த மே மாதத்தில் 1,631 விர்டுஸ் கார்களும், 1,484 டைகுன் கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2022 மே மாதத்தில் 2,177 விர்டுஸ் செடான் கார்களையும், 1,268 டைகுன் எஸ்யூவி கார்களையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

skoda & volkswagen cars sales

கடந்த ஏப்ரல் மாதத்தில் 1,481 விர்டுஸ் கார்களும், 1,520 டைகுன் கார்களும் ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் இருந்து விற்கப்பட்டு இருந்தன. கடந்த ஏப்ரலில் வெறும் 31 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்த டிகுவான் எஸ்யூவி கார் கடந்த மே மாதத்தில் 171 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் மொத்தமாக 3,286 ஃபோக்ஸ்வேகன் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு மே மாதத்தில் 3,503 கார்களின் விற்பனையை ஃபோக்ஸ்வேகன் பதிவு செய்திருந்தது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஃபோக்ஸ்வேகன் & ஸ்கோடா இரண்டின் கார்கள் விற்பனையும் 2022 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மே மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு ஸ்கோடா குஷாக் எஸ்யூவி மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் கார்களுக்கு கிடைத்துவந்த வரவேற்பு குறைந்திருப்பதை முக்கிய காரணமாக சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி சமீப காலங்களில் இந்த இரு நிறுவனங்களும் இந்தியாவில் விற்பனை செய்யும் கார் மாடல்களின் எண்ணிக்கையை குறைந்து கொண்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 27, 2023, 11:09 [IST]
English summary
Skoda volkswagen cars sales 2023 may
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X