6 லட்சம் மேட்-இன் இந்தியா கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி.. எந்த நிறுவனம் தெரிஞ்சா ஆச்சரியத்துல மூழ்கிருவீங்க
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 6 லட்சம் கார்களை பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று ஏற்றுமதி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது எந்த நிறுவனம்? இந்தியாவின் எந்த பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது? இதுபோன்ற அனைத்து முக்கிய தகவல்களையுமே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Skoda Auto Volkswagen India pvt ltd)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனமே இந்தியாவில் இருந்து இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான யூனிட் கார்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கின்றது.

இந்த நிறுவனம் மஹாராஷ்டிரா மாநிலம், புனேவை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. இங்குள்ள சக்கன் உற்பத்தி ஆலையிலேயே நிறுவனம் அதன் கார்களை தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இங்கு வைத்தே இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கான ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகனின் கார்கள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
மிக முக்கியமாக இந்திய தயாரிப்பு ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு மெக்சிகோ, சஹாரா, வட ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகள் மற்றும் ஜிசிசி (கல்ஃப்) நாடுகள் உள்ளிட்டவற்றில் மிகவும் வலுவான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இதன் விளைவாகவே இப்போது 6 லட்சம் யூனிட் கார்கள் ஏற்றுமதி என்கிற சூப்பரான இலக்கை அது எட்டி இருக்கின்றது.
நிறுவனத்தின் இந்த ஏற்றுமதி பயணமானது போலோ மற்றும் வெண்டோ வாயிலாக தொடங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது இந்த இரு கார் மாடல்களும் விற்பனையில் இல்லை. தற்போது, ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ், டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய கார் மாடல்களே ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இவற்றிற்கே உலக நாடுகளில் தற்போது மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இந்தியாவிலும் இந்த கார்களுக்கு மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. அதே நேரத்தில், இந்தியாவிலும் இந்த கார் மாடல்களுக்கு தரமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது.
ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் நிறுவனம் இந்தியாவில் இருந்து வலது மற்றும் இடது என இரண்டு விதமான பக்க டிரைவிங் வசதிக் கொண்ட கார்களையும் தயாரித்து ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கின்றது. ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்தியாவில் இந்தியா 2.0 எனும் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையிலேயே தன்னுடைய கார்களை அது அதி-நவீனமயமாக்கி இருக்கின்றது. இந்த திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார்களே வெகு விரைவில் வியட்நாமிற்கு அடுத்த ஆண்டு முதல் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. அவை உதிரிபாகங்களாகவே ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன.
இதற்காக நிறுவனம் அதன் உற்பத்தி ஆலையை தற்போது விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது. சுமார் 16 ஆயிரம் சதுர அடி வரை விரிவாக்கம் செய்யப்பட இருக்கின்றது. இந்த விரிவாக்கம் புனே சக்கன் ஆலையிலேயே செய்யப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. நாட்டின் மிகப் பெரிய கார் ஏற்றுமதியாளராக மாருதி சுஸுகி இருந்த வருகின்றது.
இந்த நிலையிலேயே அதற்கே டஃப் கொடுக்கும் வகையில் அதிக கார்களை ஸ்கோடா ஆட்டோ மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏற்றுமதி செய்திருக்கின்றது. இது ஒட்டுமொத்த இந்திய வாகன உலகிற்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது. வரும் காலங்களிலும் இந்த டிமாண்ட் உலக அளவில் அந்த நிறுவனத்திற்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் இந்த நிறுவனங்களின் தயாரிப்பிற்கு அதாவது, இந்திய தயாரிப்பு ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது இந்தியர்களை பெருமிதம் அடையச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்திய தயாரிப்பிற்கு உலக அரங்கில் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு சமீப காலமாக அதிகரித்துக் கொண்டிருப்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








