முதல் முறையாக நாளை தன்னுடைய இவி தொழில்நுட்பத்தை வெளியீடு செய்யும் சியோமி.. டெஸ்லா கொஞ்சம் ஓரமா நில்லு!
சியோமி (Xiaomi) நிறுவனம் விரைவிலேயே அதன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தொழில்நுட்பத்தை (EV technology) இந்த உலகிற்கு முதல் முறையாக அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. அது எப்போது என்கிற விபரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
உலகின் முன்னணி மின்சாதன தயாரிப்பு நிறுவனமான சியோமி (Xiaomi), வெகு விரைவில் மின்சார உற்பத்தியையும் தொடங்க இருக்கின்றது. அது தற்போது செல்போன், மின்விசிறி, ஏர் ப்யூரிஃபையர், ஏர் ஃப்ரையர் என பலதரப்பட்ட பொருட்களை அது தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அது மின்சார வாகன உற்பத்தியிலும் களமிறங்க இருக்கின்றது.

இதற்கான அனுமதி சமீபத்திலேயே என்டிஆர்சி (NDRC) இடம் அனுமதியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்தே நிறுவனம் தற்போது அதன் மின்சார வாகன தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவே நிறுவனம் அதன் மின்சார வாகன தொழில்நுட்பத்தைக் காட்சிப்படுத்துவது முதல் முறையாகும்.
நிறுவனம் சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருக்கின்றது. இந்த மாபெரும் முதலீட்டின்கீழே நிறுவனம் மின்சார வாகன உற்பத்தியைத் தொடங்க இருக்கின்றது. மேலும், இது அதன் முதல் கார் உற்பத்தியை 2024 ஆம் ஆண்டு முதல் பாதியிலேயே தொடங்கிவிடும் என கூறப்படுகின்றது.

நிறுவனம் தற்போது அதன் மாடெனா இவி எலெக்ட்ரிக் காரை சோதனை ஓட்டம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மங்கோலியாவிலேயே இந்த காரை சோதனையோட்டம் செய்துக் கொண்டிருக்கின்றது சியோமி. கடும் குளிரில் பேட்டரியின செயல்திறன் எப்படி இருக்கின்றது என்பதை சோதனைச் செய்யப்பட்டு வருகின்றது.
கடந்த 2021ம் ஆண்டே மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் பணியில் சியோமி களமிறங்கிவிட்ட நிலையில், இப்போதே அது இ-காரின் உற்பத்தி பணிகளைத் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையிலேயே தன்னுடைய மின்வாகன தொழில்நுட்பத்தை முதல் முறையாக காட்சிப்படுத்தவும் அது திட்டமிட்டு இருக்கின்றது.
சியோமி நிறுவனம் சமீபத்தில் ஓர் சர்ப்ரைஸாக அதன் முதல் மின்சார காரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்தது. எஸ்யூ7 (SU7) எனும் கார் மாடலையே அது வெளியீடு செய்தது. இது ஓர் செடான் வகை எலெக்ட்ரிக் காராகும். உலக புகழ்பெற்ற டெஸ்லா நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டி அளிக்கும் நோக்கிலேயே இந்த மின்சார காரை சியோமி வடிவமைத்து இருக்கின்றது.
இந்த காரை தனித்துவமான ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டு தயார் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஹூமன் எக்ஸ் கார் எக்ஸ் ஹோம் (Human X Car X Home) எனும் கான்செப்ட்டை தழுவியே இந்த காரை சியோமி வடிவமைத்திருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக காரை வீட்டுடன் இணைத்துக் கொள்ள முடியும்.
அதாவது, வீட்டில் உள்ள ஸ்மார்ட் கருவிகளை காரில் இருந்தபடியே கன்ட்ரோல் செய்ய முடியும். இதுதவிர, செல்போன் வாயிலாக காரைக் கண்கானித்தல் மற்றும் அதன் குறிப்பிட்ட சில அம்சங்களை கன்ட்ரோல் செய்தல் உள்ளிட்ட வசதிகளையும் செய்துக் கொள்ள முடியும். இதற்காக ஹைபர் ஓஎஸ் இன்டெக்ரேஷனை இந்த காரில் சியோமி சேர்த்திருக்கின்றது.
இதுபோன்று ஏகப்பட்ட அம்சங்களைத் தாங்கியதே எஸ்யூ7 ஆகும். இந்த காரின் வருகை டெஸ்லாவிற்கு மிகப் பெரிய அளவில் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரின் தொழில்நுட்ப வசதிகளையே நாளை (டிசம்பர் 28) சியோமி காட்சிப்படுத்த இருக்கின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் டெஸ்லாவின் மின்சார கார்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சியோமி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருமா என்பது மிகப் பெரிய சந்தேகமே. இந்த பிராண்டின் மின்சாதனங்களே இப்போதுக்கு விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இதன் இவி-க்கள் இதுவரை விற்பனைக்கு வரவில்லை. இது ஸ்கேட்டிங் வகை எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








