சாஃப்ட்வேர் கம்பெனி உருவாக்கிய கார்.. தொழில்நுட்பத்துல அசத்துது! டெஸ்லாகூட இப்படி ஒரு காரை உருவாக்கல!

சாஃப்ட்வேர் (Software) நிறுவனம் ஒன்று கான்செப்ட் கார் (Concept Car) மாடலை வெளியீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காரில் என்ன மாதிரியான சிறப்புகள் வழங்கப்பட்டு இருக்கின்றன?, இதன் தனித்திறன் என்ன? என்பதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வாகன உற்பத்தியில் புதுமுக நிறுவனங்கள் ஈடுபடுவது தொடர் கதையாகி உள்ளது. அந்தவகையில், சமீப காலமாக இந்த நிகழ்வு அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. செல்போன் உற்பத்தி நிறுவனங்களான ஒப்போ, ஃபாக்ஸ்கான் (ஆப்பிள் ஐ-போன் மேக்கர்) உள்ளிட்ட நிறுவனங்கள்கூட வாகன உற்பத்தியில் களமிறங்கி இருக்கின்றன.

H1st vision concept car front view

இதுபோன்று பலதரப்பட்ட புதுமுக நிறுவனங்கள் வாகன உற்பத்தியில் ஈடுபட தொடங்கி இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே முன்னணி நிறுவனம் ஒன்றின்கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் சாஃப்ட்வேர் (Software) நிறுவனம், கான்செப்ட் கார் (Concept Car) மாடலை உருவாக்கி அதனை வெளியீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரிபப்ளிக் (République) எனும் நிறுவனமே கான்செப்ட் கார் மாடலை வெளியீடு செய்திருக்கும் நிறுவனம் ஆகும். இது ரெனால்ட் குழுமத்தின் (Renault group) ஓர் அங்கமாகும். எச்1எஸ்டி விஷன் (H1st Vision) எனும் கான்செப்ட் மாடலையே அது வெளியீடு செய்திருக்கின்றது. ஹூமன் ஃபர்ஸ்ட் விஷன் (Human First Vision) என்கிற பெயரிலும் இது அறியப்படுகின்றது.

H1st vision concept car back view

முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களையே அசால்ட் செய்யும் வகையில் ஆறு மாதங்களில் இந்த கான்செப்ட் மாடலை ரிபப்ளிக் தயார் செய்திருக்கின்றது. ரெனால்ட் நிறுவனத்தின் சீனிக் விஷன் கான்செப்ட் (Renault Scenic Vision) மாடலை தழுவியே ஹூமேன் ஃபர்ஸ்ட் விஷன் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. அதாவது, அதன் எஸ்யூவி தோற்றம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த காரில் வேற லெவல் அம்சங்கள் பல சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில் டிரைவரின் ஹெல்த்தை கண்கானிக்கக் கூடிய அம்சம் இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, பயணிகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் விதமாக பன்முக சேஃப்டி ஃபீச்சர்ஸ் கான்செப்ட் காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

H1st vision concept car back beauty

இத்துடன், வாகன உரிமையாளரின் பயோமெட்டிரிக்கை முழுவதும் தெரிந்துக் கொள்ளும் வசதியும் காரில் கொடுக்கப்பட்டு உள்ளது. இது, உரிமையாளர் நடக்கும் விதம் தொடங்கி முக பாவனைகள் வரை அனைத்தையும் தெரிந்துக் கொள்ளும். இதை வைத்து தன்னுடைய உரிமையாளர் அருகில் வரும்போது தானாகவே காரை அன்லாக் செய்வது, ஸ்டார்ட் செய்வது உள்ளிட்டவற்றை அதுவே தானாக செய்யுமாம்.

இத்துடன், கன்வென்ஷனல் கீ ஃபாப் ஒன்றும் காருடன் வழங்கப்பட இருக்கின்றது. இதுதவிர, டிஜிட்டல் ஐடி வால்லட் வசதியும் கொடுக்கப்பட இருக்கின்றது. இந்த அம்சம் காரை வாடகை விட நினைப்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதுதவிர, 16 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம், போன் அழைப்புகளை பிரைவேட்டாக பேசும் வசதி, ரியல் டைம் வெதர் அப்டேட் மற்றும் டிராஃபிக் அலர்ட் ஆகியவற்றை வழங்கும் வசதிகளும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

பிரைவேட்டா செல்போன் அழைப்புகளை பேசிக் கொள்வதற்காக டிரைவர் இருக்கையின் ஹெட் ரெஸ்டில் குட்டி ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கும். இவையே அழைப்பின்போது ஹெட்போனைபோல் உதவும். இதில் பேசும்போது மற்றவர்களுக்கு கட்டாயம் கேட்காது என கூறப்படுகின்றது. இதுபோன்று இன்னும் பற்பல அம்சங்களைக் கொண்ட வாகனமாகவே புதிய கான்செப்ட் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த கான்செப்ட்டை ரிபப்ளிக் நிறுவனம் ரெனால்ட் எம்பளத்துடனேயே வடிவமைத்திருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியம் தங்களுடைய நாடுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களில் கட்டாயம் இந்தந்த பாதுகாப்பு கருவிகள் எல்லாம் இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் விதிகளையே இந்த கார் மிஞ்சி இருப்பதை நம்மால் காண முடிகின்றது.

இதற்கு மிக சிறந்த உதாரணமாக ஓட்டுநரின் ஹெல்த்தை தொடர்ச்சியாக கண்கானிக்கும் வசதி வழங்கப்பட்டிருப்பது உள்ளது. இந்த அம்சம் காரின் ஓட்டுநரின் சுவாசம், இதய துடிப்பு மற்றும் டெம்ப்ரேச்சரை தொடர்ச்சியாக கண்கானிக்கும். இதை வைத்து ஒரு சில பரிந்துரைகளை அது வழங்கும். குறிப்பாக, சுவாச பயிற்சி போன்ற அறிவுரைகளை அது வழங்கும்.

இதெல்லாம் காரில் வழங்கப்பட்டு இருக்கும் வேற லெவல் அம்சமாக பார்க்கப்படுகின்றது. இது தவிர இந்த வாகனத்தை எலெக்ட்ரிக்கில் ஓடும் வசதிக் கொண்ட வாகனமாகவே ரிபப்ளிக் வடிவமைத்திருக்கின்றது. இதில் உள்ள பேட்டரிகளைக் கொண்டு வீட்டிற்கு தேவையான மின்சாரத்தைகூட எடுத்துக் கொள்ள முடியும். இதற்கு அனுமதிக்கக் கூடிய அம்சமும் இந்த காரில் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுமட்டுமல்ல அதிக வேகத்தில் சார்ஜ் செய்துகொள்ளும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதுகுறித்த முழு விபரங்கள் வெளியிடவில்லை. அதாவது, எவ்வளவு வேகத்தில் சார்ஜாகும்?, ரேஞ்ஜ் திறன் உள்ளிட்ட விபரங்கள் வெளியடப்படவில்லை. இருப்பினும், இதிலும் இந்த கார் மிக சிறந்ததாகவே இருக்கும் என யூகிக்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் குழுமத்திற்கு சொந்தமான ரிபப்ளிக் சாஃப்ட்வேர் தயார் செய்திருக்கும் இந்த கார் அழகிலும், நவீன தொழில்நுட்ப வசதிகளிலும் அசத்தும் வகையில் இருக்கின்றது. ஆனால், இந்த காரை அது உற்பத்தி செய்யுமா என்பது தெரியவில்லை. அப்படியே உற்பத்தி செய்யும் என்றாலும் அது தொடங்க பல வருடங்கள் ஆகும். நவீன யுகத்திற்கு ஏற்ற காராக இதை ரிபப்ளிக் வடிவமைத்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, June 19, 2023, 23:28 [IST]
English summary
Software firm republique unveils h1st vision concept ev
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X