ஒரே ஒரு தமிழ் படத்துலதான் வந்தாங்க.. அதுவும் அது டப்பிங் படம்! இவங்க வாங்கிய காரோட விலைய கேட்டா தலையே சுத்துது

மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகிய சோலோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நேஹா ஷர்மா. இவரே தன்னுடைய தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ரூ. 1 கோடி மதிப்புள்ள சொகுசு காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நேஹா ஷர்மா, இவரே மிக மிக விலை உயர்ந்த காரை வாங்கி ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றார். இவர் 'சோலோ' எனும் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் தோன்றி இருப்பார். துல்கர் சல்மானின், ருத்ரா எனும் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக அக்ஷரா கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார்.

Solo Actress Neha Sharma Buys Benz GLE

இந்த படத்தில் தோன்றியதன் வாயிலாகவே, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழி திரையுலகிலும் அறியப்படும் முகமாக நேஹாவின் முகம் மாறி இருக்கின்றது. அதேவேளையில், இவர் பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். தெலுங்கிலும் சில முன்னணி திரைப்படங்களில் நேஹா ஷர்மா நடித்திருக்கின்றார்.

தெலுங்கு திரையுலகே இவரின் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கி வைத்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவரின் முதல் திரைப்படம் 'சிறுத்த' ஆகும். இந்த நிலையிலேயே, முன்னணி நட்சத்திரமான நேஹா ஷர்மா, தற்போது தன்னுடைய தனிப்பட்ட பயணங்களுக்காக மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார்.

Solo Actress Neha Sharma Buys Benz GLE

மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனத்தின் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த 'ஜிஎல்இ' (GLE) எனும் ஆடம்பர எஸ்யூவி ரக காரையே அவர் வாங்கி இருக்கின்றார். தன்னுடைய இந்த கொள்முதல் குறித்த தகவலை தனது இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் அக்கவுண்டுகள் வாயிலாக தன்னுடைய ரசிகர்களுக்கு நேஹா ஷர்மா தெரியப்படுத்தி இருக்கின்றார்.

மேலும், புதிதாக வீட்டுக்கு வந்திருக்கும் தன்னுடைய காருக்கு அவரே பூஜை செய்யும் வீடியோவையும் அந்த பதிவின் வாயிலாக நேஹா வெளியிட்டு இருக்கின்றார். இந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. ருசிகரமாக அந்த வீடியோ மற்றுமொரு காரணத்திற்காகவும் இணையத்தில் வைரலாகத் தொடங்கி இருக்கின்றது.

Solo Actress Neha Sharma Buys Benz GLE

நேஹா, காருக்கு பூஜை செய்யும் விதமாக, அந்த காரின் முன் பக்கத்தில் அமர்ந்து தேங்காயை உடைக்க முயற்சித்தார். ஆனால், பலமுறை ஓங்கி ஓங்கி தரையில் அடித்தும் அந்த தேங்காய் உடையவே இல்லை. ஒரு சில முயற்சிகளுக்கு பின்னர், அந்த தேங்காய் அவரின் தோழி ஆயிஷா ஷர்மாவின் கைகளுக்கு மாறியது.

அவரும் அந்த தேங்காயை உடைக்க சற்று சிரமப்பட்டார். இருப்பினும், தேங்காய் லேசாக மட்டுமே உடைந்தது. இந்த நிலை, ஒரு தேங்காயை உடைக்க இவ்வளவு பெரிய அக்கப்போரா என இணையவாசிகளை நக்கலடிக்கச் செய்திருக்கின்றது. நேஹா ஷர்மா வாங்கி இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரின் இந்திய விலை ரூ. 88 லட்சம் ஆகும்.

இது ஆரம்ப நிலை வேரியண்டின் விலை மட்டுமே ஆகும். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு கார் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. 300டி, 450 மற்றும் 400டி ஆகியவையே அவை ஆகும். இதன் உயர்நிலை தேர்வு ரூ. 1.05 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.

இதில், எந்த தேர்வை நேஹா வாங்கி இருக்கின்றார் என துள்ளியமாக தெரியவில்லை. மூன்று தேர்வுகளும் அதிக சொகுசு வசதிகளைக் கொண்டவை ஆகும். ஆனால் ஒன்றைக் காட்டிலும் மற்றொன்றில் கூடுதல் லக்சரி அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கும். இதேபோல், எஞ்ஜின் விஷயத்திலும் அவை மாறுபட்டவையாக இருக்கும். 300டி தேர்வில் 4 சிலிண்டர் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 245 எச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 400டி தேர்வில் சற்று அதிக பவர்ஃபுல்லான டீசல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 6 சிலிண்டர்களைக் கொண்டது ஆகும். இது 325 எச்பி மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

இதைவிட அதிக பவர்ஃபுல் மோட்டாரைக் கொண்டதாக 450 இருக்கின்றது. இதில், பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 365 எச்பியையும், 500 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த அனைத்து மோட்டார்களிலும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரன்ஸ்மிஷன் மற்றும் 4 மேட்டிக் சிஸ்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

ஆடம்பர சொகுசு வாழ்க்கைக்கு பெயர்போனவர்களே திரைப்பட நடிகை, நடிகர்கள். ஆகையால், நேஹா ஷர்மா இந்த காரை வாங்கியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அதேவேளையில், இவரிடத்தில் ஏற்கனவே சொகுசு கார்கள் பல பயன்பாட்டில் இருக்கின்றன. இருப்பினும், புதிதாக தற்போது பென்ஸ் ஜிஎல்இ மாடலை அவர் வாங்கி இருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 5, 2023, 15:09 [IST]
English summary
Solo movie actress neha sharma buys mercedes benz gle luxury suv
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+