5கார்கள் பெட்ரோல்-எலெக்ட்ரிக்னு 2ஆப்ஷன்லையும் விற்பனைக்கு வர இருக்கு! வருஷ கணக்குல தவமிருக்க ஒர்த்தான கார்கள்!

உலகளவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நாளுக்கு நாள் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. உயர்ந்து வரும் டிமாண்ட் காரணமாக வாகன உற்பத்தியாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கி வருகின்றனர். அதேவேளையில், நாட்டில் ஐசிஇ (பெட்ரோல்-டீசல்) வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை பெரியளவில் குறைந்ததாக தெரியவில்லை.

இவற்றின் விற்பனை வழக்கம்போல் ஏற்றம்-தாழ்வுகளுடனேயே காட்சியளிக்கின்றது. இந்தநிலை, இந்தியர்கள் மத்தியில் பெட்ரோல்-டீசல் வாகனங்களின் மீதான மோகமும் குறையாமல் இருப்பதை தெளிவுப்படுத்துகின்றது. இந்தநிலையை நேர்த்தியாக கையாளும் விதமாக வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் தயாரிப்புகளை பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் என இருவிதமான ஆப்ஷன்களிலும் விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே, டாடா அதன் நெக்ஸான், டியாகோ, டிகோர் ஆகிய கார் மாடல்களை ஃப்யூவல்-மின்சாரம் என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

கார்

இதேபோல், சிட்ரோன் நிறுவனம் அதன் சி3 கார் மாடலை இசி3 எனும் பெயரில் எலெக்ட்ரிக் ஆப்ஷனில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதைப்போலவே இன்னும் சில கார் மாடல்கள் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் என இரு விதமான ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர இருக்கின்றன. அவற்றின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டாடா கர்வ், பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டு ஆப்ஷன்களில் இந்திய சந்தையை அதகளப்படுத்த இருக்கும் கார் மாடல்களில் இதுவும் ஒன்று. இந்த கார் மாடல் இன்னும் உற்பத்திக்கு தயாராகவில்லை. இன்னும் ஒரு சில மாதங்களில் இது உற்பத்திக்கு தயாராகிவிடும் என நம்பகத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டிற்குள் இது விற்பனைக்கு தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கார்

முதலில் எலெக்ட்ரிக் வெர்ஷனும், இதனைத் தொடர்ந்து, ஐசிஇ வெர்ஷனும் விற்பனைக்குக் கிடைக்கும் என கூறப்படுகின்றது. இதன் பெட்ரோல் வெர்ஷன் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாராவிற்கு போட்டியாக அமையும். இதுதவிர இன்னும் பல கார் மாடல்களுக்கு இது போட்டியாளனாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் மின்சார வெர்ஷன் ஹூண்டாய் கோனா இவி மஹிந்திரா எக்ஸ்யூவி 400க்கு போட்டியாக இருக்கும்.

டாடா கர்வ் பெட்ரோல் வெர்ஷனில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டார் 125 பிஎச்பி மற்றும் 225 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதன் மின்சார வெர்ஷன் முழுமையாக பேட்டரி நிரப்பட்ட நிலையில் 500 கிமீ வழங்கும். இத்தகைய சூப்பரான காராகவே டாடா கர்வ் வெகு விரைவில் இந்திய சந்தையை களம் காண இருக்கின்றது.

கார்

டாடா சைரா, பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷனில் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு களமிறக்க இருக்கும் மற்றுமொரு தயாரிப்பு இது ஆகும். இதன் வருகை 2025 ஆம் ஆண்டிற்கு அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வடிவமைப்பு பணிகள் இப்போதே வரை ஆரம்ப கட்டத்தை எட்டி இருக்கின்றது. மிகவும் கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் காராக இதனை டாடா தயார் செய்து வருகின்றது.

ஜென் 2 பிளாட்பாரம் அல்லது சைக்மா ஆர்கிடெக்சரை பயன்படுத்தி இந்த காரை டாடா தயாரித்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இதன் பெட்ரோல் வெர்ஷன் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் காராக சைரா விற்பனைக்கு வர இருக்கின்றது. இதுதவிர, வெறும் மின்சாரத்தில் மட்டும் இயங்கும் காராகவும் சைரா விற்பனைக்குக் கிடைக்கும்.

இதன் மின்சார வெர்ஷனில் 60-80 kWh பேட்டரி பேக் ஆப்ஷன் வழங்கப்படும். இது முழு சார்ஜில் 500க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜை வழங்கும். இதன் மின்சார வெர்ஷனில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட இருக்கின்றது. இது 170 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

ஹாரியர் மற்றும் சஃபாரி, ஆகிய கார் மாடல்களையும் டாடா மின்சார வெர்சன்களில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. ஏற்கனவே இவற்றின் ஐசிஇ வெர்சன்கள் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றுடன் புதிதாக மின்சார வெர்ஷனையும் இணைக்க டாடா திட்டமிட்டு இருக்கின்றது. இந்த கார்களை தனது ஜென் 2 இவி ஆர்கிடெக்சரை பயன்படுத்தி டாடா தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவற்றின் வருகை இன்னும் சில மாதங்களில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஹூண்டாய் க்ரெட்டா, இந்த காருக்கு அறிமுகம் தேவை இருக்காது. இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடல் இது ஆகும். ஏற்கனவே இதன் ஐசிஇ வெர்ஷன் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும்நிலையில் இதன் மின்சார வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஹூண்டாய் களமிறங்கி இருக்கின்றது. ஏற்கனவே இதன் மின்சார வெர்ஷனின் சோதனை ஓட்டங்கள் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. 2025க்குள் இது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டாவை போலவே கியா செல்டோஸும் இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடலாக மாறியிருக்கின்றது. இதன் பக்கம் கூடுதல் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு கியா நிறுவனம் இதன் மின்சார வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த வருடத்தின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இதன் மின்சார வெர்ஷன் வெளியீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 18, 2023, 14:19 [IST]
English summary
Soon you can buy these car s with ice and ev powertrains
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+