Stolen Maserati காரை மனைவிக்குப் பரிசளித்த ராணுவ வீரர்! அடுத்து நடந்தது தான் செம கூத்து!

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தன் மனைவிக்குப் பிறந்தநாள் பரிசாக வழங்கிய கார் ஒரு திருடப்பட்ட கார் என்பது தெரியவந்துள்ளது. இதை அவர் பயன்படுத்திய கார்கள் தளத்தில் வாங்கியுள்ளார். இது எப்படி அந்த தளத்திற்கு வந்தது? இப்படி நாம் பயன்படுத்திய கார்களை வாங்கும் போது எப்படிச் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது எனக் காணலாம்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜேசன் ஸ்கவுட், இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர். இவர் சமீபத்தில் தனது மனைவிக்குப் பிறந்தநாள் பரிசளிக்க விரும்பினார். இதற்காக அவர் பயன்படுத்தி கார் மார்கெட்டிலிருந்து ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கி பரிசளிக்க விரும்பினார். இதற்காக சில பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் இணையதளங்களை அணுகினார்.

Stolen Maserati காரை மனைவிக்குப் பரிசளித்த ராணுவ வீரர்! அடுத்து நடந்தது தான் செம கூத்து!

அங்கு அவருக்கு விலையுயர்ந்த மசரட்டி எஸ்யூவி கார் 2021ம் ஆண்டு மாடல் கார் விற்பனைக்கு இருப்பதைப் பார்த்தார். அந்த காரை அந்நிறுவனத்திடம் பேசி அமெரிக்க டாலர் மதிப்பில் 68 ஆயிரம் கொடுத்து அதாவது இந்திய மதிப்பில் ரூ56 லட்சம் கொடுத்து இந்த காரை வாங்கியுள்ளார். இந்த காரை வாங்கி அவர் மனைவிக்கும் பிறந்தநாள் பரிசாக அளித்துவிட்டார். அவரும் அன்புடன் அதை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த காரை தம்பதிகள் 2021ம் ஆண்டு மாடல் கார் என நினைத்த அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தியும் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இந்த காரை ஜேசன் சர்வீஸ் செய்வதற்காக மசரட்டி கார் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றுள்ளார். அப்பொழுது இந்த கார் 2021 மாடல் எனச் சொல்லியுள்ளார். சர்வீஸ்க்காக இந்த கார் பதிவு செய்யப்பட்ட சர்வீஸ் சென்டருக்கும் சென்றுள்ளது.

சர்வீஸ் சென்டரில் இந்த காரை பார்த்த மெக்கானீக்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. இந்த கார் 2021 மாடல் இல்லை 2017ல் தான் இப்படியான கார் விற்பனையானது என யோசித்தனர். மேலும் இந்த கார் குறித்த ஆவணங்களும் சரிவர இல்லாததால் சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவர்கள் அந்த காரின் சேஸிஸ் மற்றும் விஐஎன எண்ணை எடுத்து சிஸ்டத்தில் செக் செய்தனர்.

அப்பொழுது தான் குறிப்பிட்ட கார் 2017ம் ஆண்டு மாடல் கார் என்பது தெரியவந்தது. அது மட்டுமல்ல அதில் ஒரு ஷாக்கிங்கான தகவலும் இருந்தது. குறிப்பிட்ட கார் திருடப்பட்டிருப்பதாக அதன் உரிமையாளரால் புகாரளிக்கப்பட்டுள்ளது. அதன் காரின் உரிமையாளரின் பெயரும் தற்போது காரை சர்வீஸ்க்கு கொண்டு வந்தவரின் பெயரும் வேறு வேறாக இருப்பதால் இந்த கார அவர் திருடியிருக்கலாம் என நினைத்த போலீசாரை அழைத்தனர்.

போலீசார் வந்து ஜேசன் ஸ்காட்டை விசாரித்த போது தான் இந்த கார் அவர் தனது மனைவிக்குப் பிறந்த நாள் பரிசாக அளித்த கார் என்றும், இதைக் குறிப்பிட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை செய்யும் தளத்தில் வாங்கியதையும் கூறி அதற்கான ஆவணங்களை வழங்கியுள்ளார். இதையடுத்து போலீசார் அந்த காரை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் ஜேசன் தான் கார் வாங்கிய தளத்தின் மீது கோர்ட்டில் தன்னிடம் திருடப்பட்ட காரை அதிக விலைக்கு விற்பனை செய்து ஏமாற்றிவிட்டதாகவும், தான் தனது மனைவிக்கு அதை பரிசளித்ததால் தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திவிட்டதாகவும், வழங்குப்பகுப்பதிவு செய்திருந்தார். இதற்கு நஷ்ட ஈடாக 10 லட்சம் அமெரிக்க டாலரை வழங்கும்படியும் கேட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் குறிப்பிட்ட கார் திருடப்பட்ட கார் என்பது தங்களுக்கும் தெரியாது எனவும் தாங்களும் இதில் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், கூறியுள்ளது. மேலும் இந்த காருக்காக அவர் வழங்கிய 68 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ56 லட்சத்தைத் திரும்பத் தருவதாகவும் ஒப்புக்கொண்டு விட்டது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கார் இந்நிறுவனத்தின் மீது ஏற்கனவே திருடப்பட்ட கார்களை விற்பனை செய்ததால் 130 வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.

இந்தியாவிலும் இப்படியாகத் திருடப்பட்ட கார்களை செகண்ட் மார்கெட்டில் விற்பனைக்கு அனுப்பி விட முடியும் ஆனால் அதில் நீங்கள் சிக்காமல் இருக்க வேண்டும் என்றால் இந்த காரை வாங்கும் முன் அந்த காருக்கு அரசு வழங்கிய என்ஓசியை வாங்கிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வாகனத்திற்கும் https://ncrb.gov.in/en/motor-vehicle என்ற தளத்தில் என்ஓசி பெற முடியும்.

இதில் குறிப்பிட்ட வாகனம் ஏதாவது குற்றப் பின்னணியில் உள்ள வாகனமா? அல்லது திருடப்பட்டதாகத் தேடப்பட்ட புகார் செய்யப்பட்ட வாகனமா என்பதை அதன் பதிவு என் சேஸிஸ் மற்றும் இன்ஜின் எண்களை வைத்து செக் செய்து வழங்கப்படும் ஒரு சான்றிதழாகும்.

டிரைவ்ஸ்பார்க் நினைப்பது என்ன? இப்படியாக செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் கார்களை வாங்கும் முன் அதை வாங்குபவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் காருக்கான ஆவணங்களுடன் என்ஓசியை வாங்கிக்கொள்ளுங்கள். இந்த என்ஓசி குறித்து அரசு மக்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 27, 2023, 18:30 [IST]
English summary
Stolen maserati sold in carvana army man gifts his wife
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+