ஒரே ஒரு கேரி பேக்கோட விலை 1,700 ரூபாவா.. கேரி பேக் வாங்கவே லோன்தான் போடணும் போலிருக்கே!
கார்களில் காணப்படும் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களில் ஏர்-பேக்கும் ஒன்று. விபத்தின்போது தலை, கழுத்து மற்றும் மார்பக பகுதியை பாதுகாக்கும் விதமாக இந்த அம்சம் கார்களில் வழங்கப்படுகின்றது. ஆனால், இந்த அம்சம் ஒரு முறை விபத்தினால் திறந்துவிட்டால் அது பயனற்றதாக மாறிவிடும். மீண்டும் பயன்படுத்த முடியாது.
இத்தகைய ஓர் அம்சத்தை மீண்டும் பயன்படுத்த முடியும் என ஓர் நிறுவனம் செய்துக் காட்டி இருக்கின்றது. சுபரு எனும் நிறுவனமே அது ஆகும். இதுவே பழைய மற்றும் மீண்டும் பயன்படுத்த முடியாத ஏர்-பேக்குகளை உபயோகமுள்ள பொருளாக மறுசுழற்சி செய்யும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.

இதன் அடிப்படையில் அந்நிறுவனம் உருவாக்கி இருக்கும் ஓர் தயாரிப்பே கேரி-பேக் ஆகும். இதனை பல மாதங்களுக்கு தொடர்ச்சியாக பயன்படுத்திக் கொள்ள முடியும். நீடித்து உழைக்கும் தன்மைக் கொண்டதும் கூட. இதற்காக சுபரு நிறுவனம் ஜப்பானிய நிறுவனம் ஒன்றுடன் கை கோர்த்து இருக்கின்றது.
டொயோடா கோசை (Toyoda Gosei) எனும் நிறுவனத்துடனேயே அது கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. இந்த நிறுவனமே கார்களில் பயன்படுத்த முடியாத மற்றும் ஏர்-பேக் கழிவுகளை சுபரு நிறுவனத்திற்கு வழங்க இருக்கின்றது. இதன் வாயிலாக உலகில் தேங்கி இருக்கும் ஏர்-பேக் கழிவுகள் விரைவில் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டொயோட்டா குழுமத்தின் மற்றுமொரு அங்கமே டொயோடா கோசை இருக்கின்றது. இந்த நிறுவனம் கார்களுக்கான வெவ்வேறு பாகங்களை உற்பத்தி செய்துக் கொண்டிருக்கின்றது. வெதர் ஸ்ட்ரைப்பிங், ஃப்யூவல் டேங்க் காம்பொனென்ட்ஸ், எல்இடி லைட்டுகள், டேஷ்போர்டுகள், கன்சோல்கல மற்றும் ஏர் பேக்குகள் உள்ளிட்டவற்றை அது தயாரித்துக் கொண்டிருக்கின்றது.
சுபருவின் 20 பங்கை டொயோட்டாவே கையகப்படுத்தி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் அடிப்படையிலேயே இரு நிறுவனங்களும் இணைந்திருக்கின்றன. ஏர்-பேக்குகள் நைலானால் தயாரிக்கப்படுபவை ஆகும். இது நச்சு வாயுக்களால் பாதிப்படையாது. பல தசாப்தங்களுக்கு நீடித்து உழைக்கும் திறன் கொண்டது. இத்தகைய ஒன்றைக் கொண்டே ஏர்-பேக்கை தயாரிக்கும் பணியில் சுப்ரு களமிறங்கி இருக்கின்றது.

விரைவில் அதனை சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ரூ. 1,700க்கு விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. அதேவேளையில், ஜப்பானில் மட்டுமே அது விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைகள் வெறும் வெள்ளை நிறத்தில் மட்டுமே விற்பனைக்கு வர இருக்கின்றன.
கேரி பேகின் ஓரத்தில் நீலம் அல்லது இளஞ்சிவப்பு நிற கோடுகள் மட்டுமே அதில் இடம் பெற்றிருக்கும். இதில் இந்த நிறங்களைப் பயன்படுத்த பிரத்யேக காரணம் ஒன்று இருக்கின்றது. சுபருவின் வர்த்தக முத்திரை நிறம் நீலம் என்பதாலும், எஸ்டிஐ பெர்ஃபார்மன்ஸ் பிராண்டின் நிறம் இளஞ்சிவப்பு என்பதாலும் அந்த நிறங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களில் பயன்படுத்தப்படும் சில முக்கிய அம்சங்கள் பல மறு சுழற்சி செய்யப்படாமல் கழிவுகளாக தேங்கிய வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், ஏர் பேக்கும் ஒன்றாகும். இதனையே அதிக பயனுள்ள ஒன்றாக மாற்றி இருக்கின்றது, சுப்ரு நிறுவனம். இதேபோல், இதைச் சார்ந்து இன்னும் சில முக்கிய பயன்பாட்டு பொருளும் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









